Search This Blog

Monday, August 5, 2019

நிதர்சனம்

நிதர்சனம்

தோல் இப்படியாக
உலர்ந்து விட்டதே
முகம் கூட சற்றே
சுருங்கி விட்டதே
உடல் முன்பை விட
தளர்ந்து விட்டதே
நினைவாற்றலும்
குறைந்து விட்டதே
பார்வையும் நடையும்
பழுது பட்டதே என்று
ஏங்கும் நேரத்தில் தான்
முதுமை மெல்ல மனதை
ஆக்கிரமிக்கிறது.

இளமையும் முதுமையும்
பகல் இரவு போல ஒட்டிப்
பிறந்தவைகள்.

பகலில் உழைத்து
இரவில் ஓய்வோம்
அவ்வாறே வாழ்வில்
இளமையில் உழைத்து
முதுமையில் சாய்வோம்.

இயற்கையோடு இணைவோம்
இயல்போடு ஏற்போம்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ பாலா
31.07.2019

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...