Search This Blog

Sunday, November 4, 2018

ஊர் கூடி தேர் இழுத்தல்

ஊர் கூடி தேர் இழுத்தல்

தனித்து செய்ய இயலா
பொது காரியங்களை
பலரையும் ஒன்று கூட்டி
முடிப்பது வழக்கம்.

இலாப நஷ்டம் பாராமல்
சுய விருப்பு வெறுப்பும்
ஏதும் கொள்ளாமல் கூடி
செய்வது வழக்கம்.

முனைந்து செய்யும் நேரம்
சினந்து கொள்வது ஆகாது
மன்றத்தில் கூச்சல் போட்டு
ஆகப் போவதும் கிடையாது.

நான் எனும் வார்த்தைக்கு
இடம் இங்கு இருப்பதில்லை
என்னால் என்பதையும் இங்கு
எந்நாளும் அனுமதிப்பதில்லை.

ஊர் கூடி தேர் இழுத்தல்
உறவு முறையாய் சேர்தல்
தனி மனித விமர்சனமின்றி
தர்ம நெறி தழைக்கச் செய்தல்.

ஊர் கூ(ட்)டி தேர் இழுப்போம்
உயர்வு தாழ்வு இல்லாது
ஒற்றுமையாய் அனைவரும்
இணைந்து இருப்போம்.

தீப ஒளித் திருநாளில்
தெய்வத்தின் திருவருளால்
திக்கெட்டும் மகிழ்ச்சி வெள்ளம்
தடையின்றி பெருகட்டும்.

வாழ்த்தி அமைகிறேன் 💐💐

நினைத்தேன் எழுதுகிறேன்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
05.11.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...