Search This Blog

Monday, December 31, 2018

புத்தாண்டு வேண்டுகோள்

புத்தாண்டு வேண்டுகோள்

வழுக்கை விழாத
வாலிபம் வேண்டும்
வழுக்கி விழாத
வயோதிகம் வேண்டும்

வலியில்லாத
வாழ்வு வேண்டும்
வலியைத் தாங்கும்
வல்லமை வேண்டும்

நோயில்லாத
நேரம் வேண்டும்
நோயை எதிர்க்கும்
நம்பிக்கை வேண்டும்

வாக்கு சுத்தமாய்
மொழியுற வேண்டும்
தேக்கு மரமாய் திட
தேகமும் வேண்டும்

நல்லதை நினைக்கும்
குணமும் வேண்டும்
உள்ளதை ஏற்கும்
மனமும் வேண்டும்

உறவுகளோடு
கூடிட வேண்டும்
உற்சாக மிகுதியில்
பாடிட வேண்டும்

கற்ற கல்வி
பயனுற வேண்டும்
காசினியில் வாழ
வழியுற வேண்டும்

இணக்கமாய் நல்
இல்லறம் வேண்டும்
வணக்கமாய் நல்
வாரிசும் வேண்டும்

அச்சம் தவிர்த்த
வாழ்க்கை வேண்டும்
உச்சம் தொடுகின்ற
வெற்றியும் வேண்டும்

ஆளுமை நிறைந்த
நடையும் வேண்டும்
ஆண்டவன் அருள்
அமைந்திட வேண்டும்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ பாலா
01.01.2019

Sunday, December 30, 2018

புத்தாண்டு

புத்தாண்டு

ஆண்டு முடியுது
ஆண்டு துவங்குது
ஆறிரு மாதங்கள்
அவசரமாய் கழிந்தது

என்ன செய்தோமென
யோசித்துப் பார்த்தால்
ஏதும் கிழிக்கலைன்னு
உள் மனசு கூறுது.

ஆண்டுகள் நகரவே
ஆயுசும் ஏறுது ஆனால்
அனைத்தையும் அடைய
ஆசையும் போடுது.

இல்லாத ஒன்றுக்கு இந்த
இதயம் ஏங்குது எல்லாம்
இருந்தாலும் ஏனோ ஏக்கம்
கொள்ள வைக்குது.

தத்துவம் பொழிந்து நான்
தகராறு செய்யவில்லை
சத்தியத்தின் பாதையினை
சொல்லாமல் போவதில்லை.

மாயை என்னும் பிடியில்
மனிதன் சிக்கியுள்ளான்
மரணம் என்னும் நொடியை
மறந்து போயும் உள்ளான்.

நிதானம் தவறாது நல்லதாய்
ராத்திரி பொழுது கழியட்டும்
நிம்மதி அகலாது இனிதாய்
ஆண்டு முழுதும் அமையட்டும்.

விடிய விடிய கண் விழித்து
வீதியில் கேளிக்கை செய்து
வான வேடிக்கைகள் போட்டு
உற்சாகம் கொள்ள வேணாம்.

வருடத்தின் ஆரம்ப நாளில்
உல்லாச கூச்சல்கள் தவிர்த்து
அமைதியான அறவழி முறையில்
ஆலயத்தில் வழிபாடு செய்வோம்.

சங்கடப்பட்டு செய்யும் செயலும்
சந்தேகத்திற்கு இடமான செயலும்
சத்தியமாய் தவிர்ப்போம் என்று
சபதம் ஒன்றை இனி எடுப்போம்.

ஆண்டு முழுவதும்
ஆனந்தமாய் அமைய
ஆண்டவன் அருள்
அமைய வேண்டுகிறேன்.

புத்தாண்டு தின நல்வாழ்த்துக்களுடன்

🌷🌷🌻🌺🌺🌼🌸🌹

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
31.12.2018

Saturday, December 29, 2018

மாற வேணும்

மாற வேணும்

உணர்வுகளை
உறவுகளோடு
பகிர்வதை தவிர்த்து
ஊடகத்தை நாடுவதேன்

குடும்பம் என்றால்
கூடலும் உண்டு
அதனுடன் சேர்த்து
ஊடலும் உண்டு.

சின்னஞ் சிறு
சண்டையும் கூட
சந்தைக்கு வருவது
சங்கடம் தருகிறது.

தகவல் தொடர்பு வசதி
பெருகியதன் மூலம்
இருபத்தி நாலு மணியும்
இணைப்பும் கிடைக்கிறது.

நான்கு சுவற்றுக்குள்
இருவரது பிரச்சினை
வலை தல வசதியால்
நாடறியப் போனது.

சந்தோஷத்தை மெல்ல
சாக்கடையில் தள்ளும்
சமூக கட்டமைப்பிற்கு
ஆபத்தை விளைவிக்கும்.

அரட்டையில் ஆரம்பித்து
ஆவலுடன் சம்பாஷித்து
அசிங்கமாய் நடந்து வரும்
அனைத்தும் விட்டிடுவோம்.

மாறுவோம்
மாற்றுவோம்
மனிதர்களாய்
மலருவோம்.

நினைத்தேன் எழுதுகிறேன்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
29.12.2018

Thursday, December 27, 2018

களவாணி

வெள்ளிக் கிழமை சிறப்பு கவிதை

களவாணி

கனவில் தினம் வந்து
களவு செய்கிறாய் என்
கண்மணியுனைக் காண
கடவு இடுகிறாய்.

சிவந்த கண்களோடு
காலையில் எழுகையில்
கண்ணாடியில் பார்த்து
சிரிக்கத் தோணுதடி.

கண நேரமானாலும்
காதல் நினைப்பினிலே
காலத்தை கடத்துவது
வாடிக்கை ஆகுதடி.

குறுஞ்செய்தி தினம்
அனுப்பி வருவதால்
நெடுஞ்செய்தி போல
நினைக்கத் தோணுதடி.

கூட்டத்தில் எப்பவும் நீ
குறுகுறுக்க பார்க்கிறாய்
கிட்டத்தில் வந்தாலோ
கிளுகிளுப்பு தருகிறாய்.

கல்லால் அடிப்பது ஒரு வகை
சொல்லால் அடிப்பது மறு வகை
பார்வையால் அடிப்பது எவ்வகை
பாவையே அதுவே உன் வகை.

உள்ளத்தை களவாடிய
உத்தமியே உன்னுடைய
மேனியைக் களவாடிடும்
முஹூர்த்தம் வாராதோ.

காலை மாலையையும்
கடத்தி விடுவேன் நான்
இரவுப் பொழுதை மட்டும்
சிறை பிடிப்பேன்.

சில்லென்ற தேகத்தில்
சுள்ளென்ற சூரியன்
சுடுகின்ற நேரம் வரை
சேர்ந்திருப்பேன்.

அந்த நாள் வரவிற்கு
ஆசை கொண்டு எந்தன்
ஆயுசு முழுமைக்கும் நான்
காத்து கிடப்பேன்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
28.12.2018

கழிவறை

கழிவறை

உனக்கு மிகவும்
பிடித்த இடம் எது
வெனக் கேட்டான்
என் நண்பன்.

சற்றும் யோசிக்காது
சட்டென்று கூறினேன்
கழிவறை தான் எனக்கு
மிகவும் பிடிக்குமென்று.

முகத்தை சுளித்து
மூக்கைப் பொத்தி
அஷ்ட கோணலாய்
முறுவளித்தான்.

வையத்தில் உள்ள
ஒவ்வொரு உயிரும்
வயிற்றை நிரப்பவே
உழைப்பைச் செய்யும்.

கண்ணுக்கு விருந்தாகி
வாய்க்கு ருசி கொடுத்து
வயிற்றுள் சென்ற பின்னே
உணவு பயனளிக்கும்.

வைத்தியரும் கூட
மருத்துவமனையில்
முதலில் வினவுவது
வயிற்றின் சுத்தத்தை.

சிறு குடல் பெருங்குடல்
இரைப்பை கணையமென
கொட்டிக் கிடக்குது நம்
வயிற்றுக்குள்ளே.

ஜீரணிக்க வைக்கும்
ஜீவனைக் காக்கும்
செரிக்காத வயிற்றால்
உயிரே மரிக்கும்.

உண்ட உணவு செரித்து
உயிருக்கு ஊட்டமளித்து
வெளியேறாவிடில் சற்று
யோசனை செய்யுங்கள்..

இத்தனை வேலையையும்
செய்வது வயிறெனில்
துணையாயிருப்பது யாரு
யோசிச்சு கொஞ்சம் பாரு.

இனியும் எவறேனும்
உம்மிடம் கேட்டால்
கழிவறையே கனவு அறை 
என தயங்காது கூறுங்கள்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
27.12.2018

Saturday, December 22, 2018

நடராஜா

நடராஜா
10) ஆருத்ரா தரிசனம்

அமர்க்களமாய்
அபிஷேகம முடிஞ்சுது
ஆயிரங்கால் மண்டபமும்
ஜொலிக்குது.

அம்மையோடு அப்பனுக்கும்
அலங்காரம் இன்று
ஆனந்தத்தில் மக்களெல்லாம்
ஆரவாரம்.

உச்சிவேளை பொழுதிலே
வேட்டுச் சத்தம் கேக்குது
உமையாளோடு ஒன்றாக
ஆடும் நடனம் சிறக்குது.

வெட்டிவேர் வாசத்திலே
வழியெங்கும் மணக்குது
வேதகோஷம் கேட்கையிலே
விழி யாவும் நனையுது.

நடராஜா நடராஜா என
நாமம் எங்கும் அதிருது
சித்ஸபையில் புகும் காட்சி
அற்புதமாய் இருக்குது.

பத்தாம் நாள் பிரம்மோற்சவ
உற்சவமான ஆருத்ரா தரிசன
மஹோத்ஸவம் சிறப்புடனே
நிறைவடைந்தது.

சித்ஸபேசா சிவ சிதம்பரம்.

திருச்சிற்றம்பலம் !!!

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
23.12.2018

Friday, December 21, 2018

நடராஜா

நடராஜா
9) தேர்த் திருவிழா

ஆடி வருகிறான்
அவன் ஆடி வருகிறான்
அம்பலத்தை விட்டு
நம்மையெல்லாம்
தேடி வருகிறான்.

ஆடி வருகிறான்
நடமாடி வருகிறான்
அம்மையோடு கரம்
கோர்த்து நம்மை
நாடி வருகிறான்.

ஆடி வருகிறான்
நேரில் வருகிறான்
நம் குறைகளைக்
கேட்டறிய தேரில்
ஏறி வருகிறான்.

ஆடி வருகிறான்
கூடி வருகிறான்
நடராஜ ராஜனாக
நான்மாட வீதியிலே
பவனி வருகிறான்.

ஆடி வருகிறான்
காக்க வருகிறான்
ஆண்டிற்கு இருமுறை
தரிசனம் தந்து நமை
ஆட்கொள்ள வருகிறான்.

ஆடி வருகிறான்
அருள வருகிறான்
ஆனியிலே மார்கழியிலும்
திவயமாய் தரிசனம் தந்து
ஆட்கொள்ள வருகிறான்.

சித்ஸபேசா சிவ சிதம்பரம்.

திருச்சிற்றம்பலம் !!!

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

இன்று தில்லையிலே
சிவகாமி சமேதனாக
ஆனந்த நடராஜ மூர்த்தி
தேர் மீதமர்ந்து வீதியுலா.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
22.12.18

Thursday, December 20, 2018

நடராஜா

நடராஜா
8) பிக்ஷாடனர்

ஆடிய பாதமே
அம்பலத்தரசே
சித்ஸபேஸனே
சிவ சிதம்பரமே

சிவலிங்க ரூபனே
சக்தி உமை பாகனே
தேவாதி தேவன் நீ
தேவார நாதனும் நீ

ஒரு காலுயர்த்தி
நடனமாடும் நின்
அழகை தரிசிக்க
பெரும் பேறாகும்

மயானத்தில் இல்லம்
கொண்ட நாதனே எம்
மனக்கவலையினைத்
தீர்த்திடுவாய் ஈசனே

சிற்றம்பலத்தே
சிந்தையை இருத்திட
சிதம்பரம் க்ஷேத்திரம்
சென்றிட வேண்டும்

அடுத்தடுத்த பிறப்பை
ஐயனே தர வேண்டும்
அனைத்திலும் உனையே
தரிசிக்கும் வரம் வேண்டும்

சித்ஸபேசா சிவ சிதம்பரம்.

திருச்சிற்றம்பலம் !!!

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

இன்று தில்லையிலே
பிக்ஷாடனர் வீதியுலா.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
21.12.2018

Wednesday, December 19, 2018

நடராஜா

நடராஜா
7) கைலாய வாகனம்

ஆதியும் அந்தமும்
இல்லாதவன் நீயே
அடிமுடி காணவியலா
அண்ணாமலையும் நீயே

ஜோதிர் லிங்கமாய்
வியாபித்தவன் நீயே
ஜகத்தினை ரக்ஷிக்கும்
ஜடாதரனும் நீயே

முப்புரம் எரித்த
முக்கண்ணன் நீயே
மும் மூர்த்திகளில்
முதல்வனும் நீயே

நந்தனார்க்கு அருளிய
நடராஜன் நீயே
சேந்தனாரை ஆட்கொண்ட
சர்வேஸ்வரன் நீயே

நாயன்மார்களை
ஆட்கொண்டவன் நீயே
நான்மாடக்கூடலின் திரு
விளையாடலும் நீயே

இராவனேஸ்வரனுக்கு
வரமளித்தவன் நீயே
இராமநாத ஸ்வாமியாய்
இரட்சித்தவனும் நீயே

கயிலாய மலையிலே
கொலுவிருப்பவன் நீயே
சனகாதி முனிவர்க்கு
குருநாதனும் நீயே

பஞ்ச சபை கொண்ட
பரமேஸ்வரன் நீயே
பக்தர்களை காத்தருளும்
பரமசிவனும் நீயே

தில்லையிலே திருநடனம்
புரிபவன் நீயே
தில்லைவாழ் அந்தணரில்
ஒருவனும் நீயே

சித்ஸபேசா சிவ சிதம்பரம்.

திருச்சிற்றம்பலம் !!!

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

இன்று தில்லையிலே
கயிலாய வாகனத்தில்
சிவானந்த நாயகி ஸமேத
ஸ்ரீ சோமாஸ்கந்தர் வீதியுலா.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
20.12.2018

Tuesday, December 18, 2018

நடராஜா

நடராஜா
6) யானை வாகனம்

ஆட்டத்தில்
போட்டியிட்டு
அம்பலத்தில்
ஆடினான்

ஒரு காலை
மேல் தூக்கி
உமையவளை
ஒடுக்கினான்

எல்லையிலே
காவல் காக்கும்
காளியாய்
கிடத்தினான்

வருடத்திற்கு
இரு முறையே
வீதி வலமும்
வருவான்

தேர் மீது
பவனி வந்து
குறை யாவும்
கேட்பான்

பட்டம் கட்டிய
ராஜனைப் போல்
பஞ்சமூர்த்திகளுடன்
வருவான்

ஆயிரங்கால்
மண்டபத்தில்
நடனம் போட்டு
செல்வான்

உலகெலாம்
என்றுரைத்து
பெரிய புராணம்
தந்தான்

உமாபதி சிவம்
மூலம் நமக்கு
கொடிக்கவியும்
கொடுத்தான்.

ராஜாதி ராஜன்
அவன் நடராஜனாம்
சிவலிங்க ரூபத்து
சிவ ராஜனாம்

சித்ஸபேசா சிவ சிதம்பரம்.

திருச்சிற்றம்பலம் !!!

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

இன்று தில்லையிலே
யானை வாகனத்தில்
சிவானந்த நாயகி ஸமேத
ஸ்ரீ சோமாஸ்கந்தர் வீதியுலா.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
19.12.2018

திருமாலே

திருமாலே

வையத்தை
வாழ்விக்கும்
வைகுந்த வாசா

வானரத்தின்
துணை ஏற்ற
வைதேகி நேசா

தரணியை
உய்விக்க
தசாவதாரம்
எடுத்தாய்

அனைத்திலும்
அற்புதங்கள்
பலவாராய்
செய்தாய்

இராமனாக
கண்ணனாக
மனிதனாய்
வாழ்ந்தாய்

பாரதத்தின்
வரலாற்றில்
காவியமாய்
கலந்தாய்

தெய்வம் மனுஷ்ய
ரூபேன என்னும்
தத்துவம் உரைத்து
சென்றாய்

பார்த்தனுக்கருளிய
பகவத் கீதை இந்த
பாருக்கு நீ அளித்த
பொக்கிஷமாகும்

பிறப்பில்லாத
பெருமாளே(னே)
தசாவதாரம் எடுத்த
திருமாலே

கல்கி அவதாரம்
எடுப்பது எப்போது
கயவர்களிடமிருந்து
காப்பது எப்போது ?

ஓம் நமோ நாராயணா

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

"வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல்"

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
18.12.2018

Monday, December 17, 2018

நடராஜா

நடராஜா
5) தெருவடைச்சான்

ஆடற்கலைக்கு
ஆனந்த தாண்டவம்

ஐந்தொழில்களுக்கு
காளிகா தாண்டவம்

ஊழிக் காலத்தே
ஊர்த்துவ தாண்டவம்

பிரதோஷ காலத்தே
ஸந்தியா தாண்டவம்

சிவகாமியோடு ஆடும்
சிருங்கார தாண்டவம்

தாருகாவனத்தில்
கௌரி தாண்டவம்

அகத்தியருக்கு அருளிய
திரிபுர தாண்டவம்

நடராஜா நடராஜா
நர்த்தன சுந்தர நடராஜா

சிவராஜா சிவராஜா
சிவகாமிப்ரிய சிவராஜா

சித்ஸபேசா சிவ சிதம்பரம்.

திருச்சிற்றம்பலம் !!!

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

இன்று தில்லையிலே
ஸகோபுரததில்
(தெருவடைச்சான்)
சிவானந்த நாயகி ஸமேத
ஸ்ரீ சோமாஸ்கந்தர் வீதியுலா.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
18.12.2018

நடராஜா

நடராஜா
5) தெருவடைச்சான்

ஆடற்கலைக்கு
ஆனந்த தாண்டவம்

ஐந்தொழில்களுக்கு
காளிகா தாண்டவம்

ஊழிக் காலத்தே
ஊர்த்துவ தாண்டவம்

பிரதோஷ காலத்தே
ஸந்தியா தாண்டவம்

சிவகாமியோடு ஆடும்
சிருங்கார தாண்டவம்

தாருகாவனத்தில்
கௌரி தாண்டவம்

அகத்தியருக்கு அருளிய
திரிபுர தாண்டவம்

நடராஜா நடராஜா
நர்த்தன சுந்தர நடராஜா

சிவராஜா சிவராஜா
சிவகாமிப்ரிய சிவராஜா

சித்ஸபேசா சிவ சிதம்பரம்.

திருச்சிற்றம்பலம் !!!

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

இன்று தில்லையிலே
ஸகோபுரததில்
(தெருவடைச்சான்)
சிவானந்த நாயகி ஸமேத
ஸ்ரீ சோமாஸ்கந்தர் வீதியுலா.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
18.12.2018

Sunday, December 16, 2018

நடராஜா

நடராஜா
4) பூத வாகனம்

அறுபத்தி நான்கு கலை
அருளியவன் அவனே
அறுபத்தி மூவர்க்கும்
அருளியவன் அவனே

தொல்லை இரும் பிறவி
தீர்ப்பவன் அவனே
தில்லையிலே திருநடனம்
புரிபவன் அவனே

அல்லல் படும் துயர்
களைபவன் அவனே
எல்லையிலா ஆனந்தம்
அளிப்பவன் அவனே

திருவெம்பாவை
ஏற்றவன் அவனே
திருவிளையாடலும்
புரிந்தவன் அவனே

தேவார திருவாசக
நாயகன் அவனே
தேவாதி தேவர்க்கு
மூத்தவன் அவனே

சித்ஸபேசா சிவ சிதம்பரம்.

திருச்சிற்றம்பலம் !!!

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

இன்று தில்லையிலே
பூத வாகனத்தில்
சிவானந்த நாயகி ஸமேத
ஸ்ரீ சோமாஸ்கந்தர் வீதியுலா.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
17.12.2018

Saturday, December 15, 2018

நடராஜா

நடராஜா

ஒன்றாக
உலகத்தையே
காத்து நம்மை
அருள்வது.

இரண்டு
பிரம்மோற்சவங்கள்
வெகு விமரிசையாய்
நடக்குது.

மூன்று
கண்ணுடையானை
மூவாயிரவர்கள்
பூஜிப்பது.

நான்கு
மாட வீதிகள்
நளினமாக
இருக்குது.

ஐந்து
எழுத்து மந்திரம்
ஆகாயத்தில்
ஒலிக்குது.

ஆறு
கால பூஜைகளும்
அர்த்தசாமத்தில்
முடியுது.

ஏழேுழு
ஜென்மத்திலும்
கிடைத்தற்கரிய
பேறு இது.

எட்டு
திக்குகளும்
வேத கோஷத்தில்
நிறையுது.

ஒன்பது
கோள்களும்
ஒருவனையே
பணியுது.

பத்து நாள்
உற்சவமும்
பாங்குடனே
நடக்குது.

சித்ஸபேசா சிவ சிதம்பரம்.

திருச்சிற்றம்பலம் !!!

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

இன்று தில்லையிலே
சூரிய பிரபை வாகனத்தில்
சிவானந்த நாயகி ஸமேத
ஸ்ரீ சோமாஸ்கந்தர் வீதியுலா.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
16.12.2018

நடராஜா

நடராஜா

ஒன்றாக
உலகத்தையே
காத்து நம்மை
அருள்வது.

இரண்டு
பிரம்மோற்சவங்கள்
வெகு விமரிசையாய்
நடக்குது.

மூன்று
கண்ணுடையானை
மூவாயிரவர்கள்
பூஜிப்பது.

நான்கு
மாட வீதிகள்
நளினமாக
இருக்குது.

ஐந்து
எழுத்து மந்திரம்
ஆகாயத்தில்
ஒலிக்குது.

ஆறு
கால பூஜைகளும்
அர்த்தசாமத்தில்
முடியுது.

ஏழேுழு
ஜென்மத்திலும்
கிடைத்தற்கரிய
பேறு இது.

எட்டு
திக்குகளும்
வேத கோஷத்தில்
நிறையுது.

ஒன்பது
கோள்களும்
ஒருவனையே
பணியுது.

பத்து நாள்
உற்சவமும்
பாங்குடனே
நடக்குது.

சித்ஸபேசா சிவ சிதம்பரம்.

திருச்சிற்றம்பலம் !!!

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

இன்று தில்லையிலே
சூரிய பிரபை வாகனத்தில்
சிவானந்த நாயகி ஸமேத
ஸ்ரீ சோமாஸ்கந்தர் வீதியுலா.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
16.12.2018

மார்கழி

மார்கழி

தேவர்களைத்
துதிக்க பிரம்ம
முஹுர்த்த மாதம்

பகவானைப்
பூஜிக்க மிக
உகந்த மாதம்

பீஷ்மர் அருளிய
விஷ்ணு ஸகஸ்ரநாமம்
பிறந்த மாதம்

பாரதப் போரில்
பகவத் கீதை
பிறந்த மாதம்

திருப்பாவையும்
திருவெம்பாவையும்
உதித்த மாதம்

ஆண்டாள்
கண்ணனை
அடைந்த மாதம்

அக்ரஹாரங்களில்
வண்ணக் கோலம்
இடும் மாதம்

சுடச்சுட பொங்கல்
பிரசாத படையல்
கிட்டும் மாதம்

தக்ஷிணாயனத்தின்
கடைசியில் வரும்
தனுர் மாதம்

மாதங்களில் நான்
மார்கழியென மாதவன்
உரைத்த மாதம்.

பெருமாளுக்கு ஏகாதசியும்
பெருமானுக்கு திருவாதிரையும்
அமைந்த மாதம்

மார்கழித் திங்கள்
மதி நிறைந்த நந்நாள்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
16.12.18

நடராஜா

நடராஜா

நின் சந்நிதியை
சரணடைவேன்
சபாபதியே என்
சங்கடங்கள்
தீர்த்து வைப்பாய்
உமாபதியே.

சர்ப்பத்தை
தரித்திரிக்கும்
சதாசிவமே
சௌபாக்கியம்
நல்கிடுவாய்
சிவானந்தமே.

பாவால் உனை
பூஜிப்பேன்
பரமசிவமே
நாவால் உனை
தினம் துதிப்பேன்
நமச்சிவாயமே.

காலனைக்
கண்டித்த
கலாதரனே
இப் பாலனை
ஆட்கொள்வாய்
ஜடாதரனே.

நம்பி உன்னை
தொழுதிடுவேன்
நடராஜனே இச்
சிறியேனுக்கு
அருள் புரிவாய்
ஸ்ரீ சிதம்பரமே.

சித்ஸபேசா சிவ சிதம்பரம்.

திருச்சிற்றம்பலம் !!!

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

இன்று தில்லையிலே
சந்திர பிரபை வாகனத்தில்
சிவானந்த நாயகி ஸமேத
ஸ்ரீ சோமாஸ்கந்தர் வீதியுலா.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
15.12.2018

Friday, December 14, 2018

நடராஜா

நடராஜா

நடராஜா எனும் போது
நெஞ்சமெலாம் இனிக்குது

சித்ஸபேசா எனும் போது
சித்த மெல்லாம் குளிருது

மஹேஸ்வரா எனும் போது
மனமும் நிறைவாயிருக்குது

பரமேஸ்வரா எனும் போது
பாவமெல்லாம் கரையுது

திருச்சிற்றம்பலம் எனும் போது
தேகமெல்லாம் சிலிர்க்குது

தில்லை சிதம்பரம் எனும் போது
தரிசிக்க உள்ளம் விழையுது.

திருச்சிற்றம்பலம் !!!

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
15.12.2018

கண்ணே மணியே

வெள்ளிக் கிழமை சிறப்பு கவிதை

கண்ணே மணியே

வஞ்சியே உந்தன்
வடிவத்தைக் காண
வலிகள் யாவும்
பறக்குதடி.

வார்த்தையாலே
வர்ணிக்க எந்தன்
வாலிப நெஞ்சமும்
தவிக்குதடி.

நினைவில் மூழ்கி
இருக்கும் போது
ஒலியும் நுழைய
மறுக்குதடி.

உன்னைப் பற்றி
எழுதும் போது
கற்பனை தானாய்
முளைக்குதடி.

வேளை கடந்தும்
பல நாள் எனக்கு
பசியும் மறந்து
போகுதடி.

தென்றல் தீண்டும்
நேரத்தில் கூட
தீயாய் உடலும்
வேகுதடி.

தங்கமே நீயென்
அருகில் இருந்தால்
அனலும் புனலாய்
மாறுதடி.

ஆசைதீர உனை
கொஞ்சி குலாவ
அருகினில் சற்றே
வருவாயடி.

அத்தை மகளே
மாமன் துயிலவே
மடியினை கொஞ்சம்
தருவாயடி.

மூன்று முடிச்சு
போடவும் எனக்கு
வாய்ப்பினையும் நீ
அளிப்பாயடி.

வானம் வெளுக்கும்
நேரம் வரைக்கும்
ஒன்றாய்க் கூடி நாம்
மகிழ்வோமடி.

பத்தே மாதங்கள்
சடுதியில் கடந்து
பிள்ளைகள் பெற்று
திளைப்போமடி.

ஆடிப்பாடி
ஆனந்தமாக
வாழ்ந்து நாமும்
ரசிப்போமடி.

திகட்டத் திகட்ட
காதலும் புரிந்து
தம்பதியராக நாம்
இருப்போமடி.

🌷🌷🌷🌹🌹🌹🌺🌺🌺

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
14.12.2018

Thursday, December 13, 2018

கொடியேற்றத் திருவிழா

கொடியேற்றத் திருவிழா

ஆருத்ரா உற்சவ விழா
ஆரம்பம் ஆனது, இன்று
அம்பலவன் கோவிலிலே
கொடியேற்றமும் நடக்குது..

அந்தணர்கள் வேத கோஷம்
அறபுதமாய் கேட்குது சிவ
அடியவர்கள் கோஷத்துடன்
அழகாய் கொடியும் ஏறுது..

தீக்ஷித பெருமகனார்
தீபாராதனை காட்டவே
தூக்கிய திருவடியின்
திருமுகமும் தெரியுது..

பத்து நாள் உற்சவமும்
பாங்குடனே தொடங்குது
பக்தர்களின் ஆரவாரம்
பட்டையை கிளப்புது..

நான்மாட வீதிகளும்
நளினமாக மிளிருது
நடராஜ மூர்த்தியின்
வரவு நோக்கி இருக்குது..

தில்லையம்பதியிலே
திக்கெட்டுமிடமெல்லாம்
திருவாதிரை வைபவமே
தீர்க்கமாகத் தெரியுது..

வெட்டிவேர் வாசத்திலே
வீதியெல்லாம் மணக்குது
வகைவகையாய் கடைகள்
வண்ணமயமாய் ஜொலிக்குது..

சிவகாமசுந்தரியுடன்
சித்சபேச மூர்த்தி
திருவீதி உலா வரும்
நாளும் கிட்ட வருகுது..

மார்கழி மாதத்திலே
மகேஸ்வரனை தரிசிக்க
மண்ணில் எடுத்த பிறப்புக்கு
அர்த்தமும் கிடைக்குது..

இன்று சிதம்பரம் நடராஜர்
கோவிலிலே திருவாதிரை
உற்சவத்தை முன்னிட்டு
கொடியேற்றம் நடக்குது..

திருச்சிற்றம்பலம் !!!

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
14.12.2018

Wednesday, December 12, 2018

குருநாதா

குருநாதா

கருவாய் முதலில்
பயணம் தொடங்கி
திருவாய் மலர்ந்து
தந்தையை நாடி
குருவாய் ஒருவரின்
அருளும் பெற்று
தருவாய் வாழ்வில்
வளம் பல கண்டு
எருவாய் முடிவில்
காட்டினையடைவோம்.

குருவருள் பெற்றிட
வளம் பல கிட்டும்
நற்குருவைப் பணிய
நலம் பல எட்டும்..

குரு பிரம்மா
குரு விஷ்ணு
குரு தேவோ
மகேஷ்வரஹ
குரு ஷாக்ஷாத்
பரப் பிரம்மா
தஸ்மை ஸ்ரீ
குரவே நமஹ.

🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...