Search This Blog

Friday, September 28, 2018

சபரிமலை சட்டம்

சபரிமலை சட்டம்

சபரி மலையினில்
அனைத்து வயது
பெண்களும் சாமி
தரிசனம் செய்யலாம்
சட்டம் இயற்றியுள்ளது
நம் நிதித் துறை..

அநாதி காலமாய் நிலவும்
நடைமுறை வழக்கத்தை
பெண் விடுதலை என்னும்
பெயர் கொண்டு எதிர்த்து
வாகையும் சூடியுள்ளனர்..

கடவுளை நம்பிடாத
நாத்திகர்களுக்கும்
கம்யூனிஸ்டுகளுக்கும்
அக்கறை ஏன் என்று
சத்தியமாய் புரியவில்லை..

சில அந்நிய மதத்து
இயக்கங்களும் சேர்ந்து
அரசியல்வாதிகளுடன்
கைகோர்த்துக் கொண்டு
போராடியுள்ளனர்..

சமத்துவம் எனும் பெயரில்
சமூகம் மெல்ல மெல்ல
சீரழிந்து வருவதைக் காண
சகிக்க ஏனோ இயலவில்லை..

குளித்தப் பின் தான் போகணும்
கருவறைக்கு அருகில் ஆண்கள்
மேல் வஸ்திரம் இலாது போகணும்
லுங்கி அணிந்து போகலாகாது
இவைகளும் கூட அடக்குமுறைகள்
என சீக்கிரமே அறிவிக்கப்படும்..

இன்னும் இவ்வாரெல்லாம்
எத்தனை சோதனைகளோ
எமது இந்து மதத்திற்கு
இறைவா யாமறியேன்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
29.09.18

வாரக் கடைசி

வாரக் கடைசி

வெள்ளிக் கிழமையில்
வான் மதியைப் போல
மகிழ்ச்சியில் நம் முகம்
பிரகாசமாய் இருக்கும்.

சனியும் ஞாயிறும்
களிப்பில் குதூகளித்து
பின் தேய்ப்பிறை போல
முகம் பொலிவிழக்கும்.

அமாவாசை நிலவு போல
திங்கட்கிழமை முகமிருக்கும்
பௌர்ணமி முழு நிலவாய்
வெள்ளியன்று ஜொலிக்கும்.

மாதம் ஒரு முறை மட்டுமே வரும் அமாவாசையும் பௌர்ணமியும்
வாரத்தில் இருமுறை உணர்வதை
அலுவலகத்தில் வந்து பாருங்கள்.

விடுமுறைக்குச் செல்லும்
விளையாட்டுக் குழந்தைகள் போல
வாரக் கடைசியில் அலுவலகத்தை
விட்டுச் செல்வதைப் பாருங்கள்..

வயதால் பெரியவராய் ஆனாலும்
உள்ளத்தே அனைவரும் சிறார்களே..

😃😃😁😁😁😁😀😀😀

ஏதோ நினைத்தேன் எழுதுகிறேன்..

சிதம்பரம் ஆர்.வீ. பாலா
28.09.18

Thursday, September 27, 2018

மகேஸ்வரா

மகேஸ்வரா

முயலகனாய் நானிருந்தால்
மிதிபட்டு உடனிருப்பேன்

கிளியாக நான் பிறந்தால்
சிவகாமி கரம் இருப்பேன்

மூஞ்சூராய் பிறந்திருந்தால் உன் பிள்ளையிடம் நானிருப்பேன்

மயிலாக நானிருந்தால் அழகு
முருகனுக்கு துணையிருப்பேன்

மனிதனாக பிறந்த விட்டு
மண்ணில் அல்லல் படுகின்றேன்

மாதவங்கள் செய்கின்றேன்
மனமிரங்க மாட்டாயோ

மரணிக்கும் முன்னே யான்
மண்டியிட்டு தொழுதிடிவேன்

மகேசனே உன் அகத்தில்
மலரடியைப் பணிவேனே..

ஓம் சிவாய நமஹ 🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
27.09.18

Wednesday, September 26, 2018

மாடு

மாடு

பாலும் தயிரும் நெய்யும்
வெண்ணையும் நமக்கு
மாடு வரமளிக்கும்
அமிர்தங்களாம்..

மரித்த பின்னும் தனது
தோலைக் கொடுத்து
மத்தளம் மிருதங்கம்
செய்யப் பயன்படுமாம்..

பச்சிளம் குழந்தைக்கு
பசும் பால் தருவோம்
பயில்வான்களுக்கு
எருமைப் பால் தருவோம்..

பசுஞ்சாணத்தை எரித்து
புனிதத் திருநீறு ஆக்கி
பூசித்துக் கொள்வோம்
பூசையும் செய்வோம்..

வயலில் உழுதிட
காளைகள் நமக்கு
அடுப்பும் எரிந்திட
விராட்டிகள் இருக்கு..

பல நூறு நோய்களை
விரட்டி அடித்திட
பசுவின் கோமியம்
கைவசம் இருக்கு..

நாட்டின் பொக்கிஷம்
என்னவென்று கேட்டால்
மாடுகள் தான் என்று
நான் உரைப்பேன்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
27.09.18

ஈமோஜிக்கள் (Emoji)

ஈமோஜிக்கள் (Emoji)

வெளிப்படுத்த விரும்பாத
வெளிப்படுத்த இயலாத
தருணங்களில் பயனளிப்பது
ஈமோஜிக்கள் (Emoji) ஆகும்..

வம்படியாக வளவளக்காமல்
நச்சென்று நவில்வதற்கு இந்த
ஈமோஜிக்கள் என்றென்றும்
நமக்கு கை கொடுக்கும்..

தொடர்ந்து  ஈமோஜிக்கள்
வருவது தொடர்ந்தால்
தொடர்பில் இருப்பவர்
தொய்வடைந்தார் எனலாம்..

அரட்டையடிக்கும் தளத்தை
கண்டறிந்தவனை விடவும்
வலு சேர்க்கும் இவைகளை
கண்டறிந்தவனும் அறிஞனே..

😊😊☺☺👍👍👌👌👏👏🙏🙏😁😁😜😜🤔🤔😈😈👊👊🙁🙁💪💪😭😭😢😢😠😠😡😡🤕🤕💩💩😱😱😞😞😺😺😖😖😤😤😷😷😓😓🤒🤒😪😪😫😫😓😓🤒🤒😪😪😫😫😎😎😃😃😂😂😶😶🙄🙄😗😗🤓🤓😏😏😆😆😅😅😸😸💩💩👾👾👹👹👺👺💀💀☠☠👻👻👽👽😨😨👩👩👨👨👧👧👦👦🙈🙈👴👴🙊🙊🙉🙉👵👵👷👷🗣🗣👤👤👫👫💃💃👯👯💏💏💑💑👭👭👥👥🚶🚶✍✍💅💅👀👀👣👣👅👅💋💋💘💘❤❤💓💓💔💔

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
26.09.1

Tuesday, September 25, 2018

நிலா

நிலா

வட்ட நிலவினை இன்று
வானத்தில் கண்டேன்
வியப்பில் ஆழ்ந்து அதன்
வண்ணத்தை ரசித்தேன்..

வெள்ளையாகத் தோன்றும்
மஞ்சளாகவும் தெரியும் நம்
கற்பனைக்குத் தக்கவாறு
காட்சிகளை உள்ளடக்கும்..

பாட்டி வடை சுட்ட கதை
படிக்காதவரும் உண்டோ
நிலவொளியில் மயங்கிடாத
மாந்தரும் உண்டோ..

ஆண்டுகள் பல கடந்தும்
ஆதவனின் ஒளி பெற்று
பன்னெடுங்காலமாக இது
பாரினைச் சுற்றி வரும்..

புவியீர்ப்பு விசையினாலே
பொத்தென்று வீழ்ந்திடாமல்
காலையும் மாலையும் இது
வேறு வேறு திசையில் வரும்..

மின்சாரம் வாராத காலங்களில்
இரவுப் பொழுதைக் கழி(ளி)த்திட
நிலவின் ஒளியே அனைவர்க்கும்
துணையாய் அமைந்தது..

மாதத்தில் சில நாட்கள்
வளர்ந்து தேய்ந்தும் பின்
தேய்ந்த பின் வளர்ந்தாலும்
ஓய்ந்து மட்டும் போவதில்லை..

கிரகண காலத்தில்
சந்திரன் சற்றே மறையும்
மனதில் ஏனோ சின்னதாய்
சஞ்சலம் விரியும்..

சில்லென்ற ஒளி வீசும்
சந்திரனும் இதுவே
நில்லாது நகர்ந்திடும்
நிலாவும் இதுவே..

இரவின் கருமைக்கு
வெளிச்சம் தந்திடும்
உறவின் அருமைக்கு
உற்சாகம் தந்திடும்..

காதலியை நினைத்தபடி
கற்பனைக் குதிரையில்
நிலவைத் தூது விட்ட அநேக
காதலர்களும் உண்டு..

நிலவைப் பார்த்து
எழுதாத கவிஞன்
எக்காலத்திலும் இவ்
உலகினில் இல்லை..

எனக்கும் நிலா மேல்
ஒரு கவி எழுத ஆசை
இன்று எழுதி நான்
திருப்தியடைந்துள்ளேன்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
25.09.18

Sunday, September 23, 2018

பிறந்த நாள் வாழ்த்து

என்னவளுக்கு இன்று
பிறந்த நாள் 💐💐💐💐
என்னவென்று அவளுக்கு
வாழ்த்து நான் கூறுவேன்..

அவளுடைய பெற்றோர்க்கு
முதல் வாழ்த்து கூறுவேன்
என்னுடைய பெற்றோர்க்கு
அடுத்து வாழ்த்து கூறுவேன்..

சோர்ந்து வரும் வேளை
சேர்ந்து சுணங்காமல்
சுறுசுறுப்பாய் இல்லத்தை
இனிதே நடத்திடுவாள்..

என்னுடைய நடமாடும்
வங்கி அநேகமாய் அவளே
மாதக் கடைசிகள் எப்பவும்
மனைவியின் மணிபர்ஸில்..

குழந்தைகளைப் படிப்பிக்கும்
ஆசிரியையும் இவளே
குடும்பத்தைப் பேணிடும் நல்
அம்மாவும் இவளே..

போட்டியும் பொறாமையும்
நிறைந்த உலகை எதிர்கொள்ள
புன்சிரிப்பு ஏந்திய பெண்மணி
மனைவியாய் அமைதல் வேணும்..

இன்முகத்தோடு இதழினில்
புன்னகையை தவழ விட்டு
இன்று போல் என்றென்றும்
பல்லாண்டு வாழியவே..

அன்புடன், பாலு 💐💐💐💐

கண்ணாடி

கண்ணாடி

கருப்பாகவே இருந்தாலும்
கன்றாவியாய் தெரிந்தாலும்
கண்ணாடி முன் நின்றால்
களையாகத் தோணுமடி..

என் வீட்டுக் கண்ணாடி
எப்பவும் எனை அழகாக்கும்
என்னைப் பொறுத்த மட்டில்
ஏக்கத்தை தீர்த்து வைக்கும்..

ரசம் போன கண்ணாடியை
ரசித்து நான் பார்த்திடுவேன்
தலை வாறும் நேரத்தில் நான்
தனியாய் எனை ரசித்திடுவேன்..

மீசையினை முறுக்கிக் கொண்டு
முன்னும் பின்னும் நோக்கிடுவேன்
முகத்தில் பவுடர் போட்டுக் கொண்டு
மைனர் போன்று மாறிடுவேன்..

கண்ணாடியே !!!

உன் முன்னாடி நிற்கையிலே
உள்ளத்தில் உன்மத்தம் ஆகுதடி
வயதான கிழடுகள் கூட சற்று
வாலிபராய் ஆவரடி..

யானையும் இரயிலும் என்றும்
பார்க்கத் திகட்டாதது போல்
கண்ணாடி உனைப் பார்க்க
அலுப்பும் தட்டாதாம்..

தண்ணீரில் முகம் பார்த்து
தலை சீவும் பழக்கமுண்டு
கண்ணாடி பார்த்த பின்னே
களைப்பை மறப்பதுண்டு..

அலமாரி வாங்கும் போது
ஆளுயரக் கண்ணாடியை
அழகாக வைத்து விட்டு
ஆளையே மயக்கிடுவர்..

மனிதனின் கண்டுபிடிப்பில்
முக்கியத்துவம் கண்ணாடிக்கு
நம்மையே நாம் ரசிக்காவிடில்
நரகமாகும் நம் வாழ்க்கையடி..

மூக்குக் கண்ணாடியில் நம்
பார்வைத் தெளிவாகும் முகம்
பார்க்கும் கண்ணாடியில் மனப்
பார்வைத் தெளிவாகும்..

கண்ணாடியைப் பார்த்தபடி
கவிதைப் படைத்துள்ளேன்
கற்பனையை சற்று கூட்டி
கருத்தையும் கூறியுள்ளேன்..

கண்ணாடியை காதலியுங்கள்
கவலையினை மறந்திடுங்கள்

ஏதோ நினைத்தேன் எழுதுகிறேன்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
23.09.18

Saturday, September 22, 2018

அம்மையப்பனுக்கு அபிஷேகம்

அம்மையப்பனுக்கு அபிஷேகம்

ஆனந்த தாண்டவத்திற்கு
அபிஷேகமாம் தில்லையில்
ஆருத்ரா மூர்த்திக்கு அற்புத
அபிஷேகமாம்..

ஆண்டிற்கு ஆறு முறை இங்கு
அபிஷேகமாம் தரிசித்திட
ஆயுசுக்கும் ஆனந்தமளிக்கும்
அபிஷேகமாம்..

சபாநாயகருக்கு இன்று
அபிஷேகமாம் சிவகாம
சுந்தரி சமேதராக இன்று
அபிஷேகமாம்..

ஊர்த்துவ தாண்டவத்திற்கு
அபிஷேகமாம் உமையவள்
உடனாக ஜம்மென்று நடக்கும்
அபிஷேகமாம்..

சித்சபையிலே இருக்கும்
சபாபதிக்கு அபிஷேகமாம்
கனகசபைக்கு எழுந்தருளி
கண்குளிர அபிஷேகமாம்..

புரட்டாசி மாதத்தில் இன்று
அபிஷேகமாம் வாழ்வில்
புண்ணியம் செய்ய மட்டில்
கிட்டும் அபிஷேகமாம்..

அற்புதமான அபிஷேகம் காண
அனைவரும் வாருங்கள் எங்கள்
தீக்ஷிதர்கள் பூஜிக்கும் அழகை
தில்லைக்கு வந்து பாருங்கள்..

சித்சபேசா சிவ சிதம்பரம்..

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

திருச்சிற்றம்பலம்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
23.09.18

புரட்டாசி பிரதோஷம்

புரட்டாசி பிரதோஷம்

அற்புதமான நாள் இன்று

நடராஜ மூர்த்தியைத் துதிக்க
சனிக்கிழமை பிரதோஷமும்
நாராயணனை வழிபட முதல்
புரட்டாசி சனி விரதமும்..

சைவர்களும் வைணவர்களும்
செமத்தியாக பூஜிக்கும் நாள்
ஹரி ஹரனை சேர்ந்து சேவிக்க
சிதம்பரத்திற்கு வாருங்கள்..

பாம்பின் மேல் பள்ளி கொண்ட
தில்லை கோவிந்த ராஜரையும்
பாம்பினை சூடி ஆடுகின்ற ஸ்ரீ
சபாநாயகரையும் சேவியுங்கள்..

திருச்சிற்றம்பலத்தை தரிசித்து
திருச்சித்திரக்கூடத்தை துதித்து
பெருமானையும் பெருமாளையும்
பூசித்து மகிழுங்கள்..

நெடுக நின்றாடுபவனும் ஒன்றே
நீண்டு நெடுக படுத்தவனும் ஒன்றே
நாமம் வெவ்வேறாகவே இருப்பினும்
நாமமும் பட்டையும் ஒன்றே..

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
22.09.18

Friday, September 21, 2018

வெள்ளிக் கிழமை சிறப்பு கவிதை

வெள்ளிக் கிழமை சிறப்பு கவிதை

எவ்வளவு திமிர் இந்த
பொல்லாத கொசுவுக்கு
சிவந்த கன்னத்தை மேலும்
சிவக்க செய்ததேனோ..

கண்ணில் பட்டதுமே அவள்
கத்தித் தீர்ப்பதினால் எங்கும்
கரப்பான் பூச்சியை கண்டதும்
கண்டிப்பாக விட்டிடுவேன்..

பஞ்சு போன்ற சருமத்துடன்
பதுங்கி நுழையும் பூனையிடம்
பாசம் காட்டி அவள் பழகுவதால்
பாலும் நானும் ஊற்றிடுவேன்..

குட்டி நாயைக் கொஞ்சியபடி
கட்டி அவள் அணைப்பதினால்
கருணையோடு அருகில் சென்று
கனிவுடன் நான் உணவிடுவேன்..

உன்னை எண்ணி நானிருக்க
என்னை நீயோ தவிக்க விட்டு
ஒன்றும் அறியாதது போல
ஒதுக்குவது முறைதானோ..

கண்ணே உனை கவனிப்பேன்
காலமெல்லாம் காத்திடுவேன்
நாயாக பூனையாக உன்னை
நித்தமும் சுற்றி வந்திடுவேன்..

கடைக்கண்ணால் பாராயோ
கனிவு மொழி கூறாயோ
கடைசி நிமிடம் வரையில்
கைப்பிடித்து இருப்பாயோ..

சும்மா வெள்ளிக் கிழமை
சிறப்பு கவிதை 😊😊😊

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
21.09.18

எனக்குள் நான்

எனக்குள் நான்

எனக்குள் நானே
எட்டிப் பார்க்கிறேன்
என் வாழ்வை எண்ணி
வியந்து பார்க்கிறேன்..

கால் நூற்றாண்டாக
கரன்சியைப் பெற்றும்
கையில் நில்லாமல்
கரைந்து போகுது..

வரவும் செலவும்
சமமாயிருக்கையில்
வருங்கால சேமிப்பு
விய(ர்)க்க வைக்குது..

நடப்பதை எண்ணி
விசனப்படாமல்
நாட்களை நகர்த்த
வழியும் செய்தேன்..

நாளை விடியும் எனும்
நம்பிக்கை கொண்டு
நானு(ளு)ம் பயணிக்க
முடிவு செய்தேன்..

ஏதோ நினைத்தேன் எழுதுகிறேன்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
21.09.18

என்னவளே

என்னவளே

கருங்கூந்தல் அடர்த்தியுடன்
மை தீட்டிய கயல் விழியே
அம்பொத்த புருவத்துடன் நீ
அனைவரையும் ஈர்க்கின்றாய்..

நங்கூரம் போன்றதொரு
நச்சென்ற நாசியுடன்
முத்துப் பல் சிரிப்புடனே
செவ்வதரம் கொண்டவளே..

கன்னக் குழியதனில் உனைக்
காண்போரைக் கவிழ்க்கின்றாய்
கவனத்தையெல்லாம் சிதறடித்து
கட்டியணைக்கத் தூண்டுகின்றாய்..

சங்கு கழுத்தின் கீழ்
சரிந்த உன்னழகனிலே
சந்நியாசியையும் கூட நீ
சபலமடையச் செய்கின்றாய்..

இல்லாத இடையினையே
இங்குமங்குமாய் ஆட்டி
ஏனடி எங்களை நித்தம்
இம்சித்துக் கொல்லுகிறாய்..

வெட்டிய வாழை போன்ற
உன்னிரு தொடையழகை
விவரிக்க வார்த்தையில்லை
விக்கித்து நிற்கின்றேன்..

கெண்டைக் காலினிலே
கொலுசு ஒன்று கட்டியபடி
சின்னதாய் சப்தமிட்டு
சிலிர்த்தபடி நடக்கின்றாய்..

முன்னுக்கு பின்னும்
கீழுக்கும் மேலாக
எப்படி நோக்கினாலும்
ஏக்கமுற வைக்கின்றாய்..

வளர்ந்து பிறந்தவளா
பிறந்தபின் வளர்ந்தவளா
வியந்து நான் பார்க்கிறேன்
படைப்பினை வியக்கின்றேன்..

சத்திய லோகத்தில்
சரஸ்வதிக்கு கோபமாம்
உன்னைப் படைத்த பின்னே
நான்முகனுடன் சண்டையாம்..

தடாகத்து மீனைப் போல
துள்ளி நடை போடுகிறாய்
தங்கமே உனையடைவேன்
தவறாக எண்ணாதே..

தெருவினிலே நீ நடந்தால்
திரும்பிப் பார்க்கத் தோணுதடி
தெனாவட்டாய்ப் பார்க்கையிலே
தப்பு பண்ணத் தோணுமடி..

தாவணியில் திரிபவளே
சேலையும் வாங்கிடுவேன்
தாம்பூலம் பேசி முடித்து
திருமாங்கல்யம் கட்டிடுவேன்..

சும்மா ஒரு மாற்றுக்காக 😊😊

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
19.09.18

Monday, September 17, 2018

என்னவளே

என்னவளே

குடை சாய்ந்து
விடுவது போல்
நடை சாய்த்து
செல்பவளே..

இடை சிறுத்து
இருப்பதனால்
உடை சரிந்து
விழுகிறதோ..

சடை முடித்து
பூச்சூடி பெரும்
படையை பின்னே
இழுப்பவளே..

மடையனைப் போல்
பிதற்றுகின்றேன்
மனமிரங்கி வர
மாட்டாயா..

தடையேதும்
இல்லாமல்
தமிழாலுனைத்
துதிக்கின்றேன்..

மடை திறந்த
வெள்ளம் போல்
உனைக் கண்டு
விக்கித்தேன்..

விடையொன்றை
நவில்வாயோ
கடை விழியால்
பார்ப்பவளே..

சும்மா திங்கட் கிழமை
அழுவலகத்து சூடு
தணிய எழுதப்பட்டது
வேறொன்றுமில்லை..

😁😁😁😁😁😁😁😁

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
17.09.18

Sunday, September 16, 2018

வாழ்க

வாழ்க

இந்நாள் பிரதமரை
முன்னாள் பிரதமராக்க
சில இந்நாள் தலைவர்களும்
பல முன்னாள் தலைவர்களும்
முயல்வது நகைப்புக்குரியது
இந்நாள் பிரதமர் இருப்பதே
நம் பாரதத்தின் பொன்நாள்
இன்னல்களின்றி ஆட்சி புரிந்திட
எந்நாளும் நன்னாளாய் அமைய
இந்நாள் பிரதமருக்கு முழுதாய்
நம் ஆதரவு நல்குவோம்
பொய்யர்களை எல்லாம்
களையெடுத்து பொற்கால
ஆட்சியை மலரச் செய்யனும்
பெரும்பான்மையுடனே பீடத்தில்
அமர்ந்து பாரதம் முழுமையும்
நல்லாட்சியும் புரியனும்.

பிறந்த நாள் காணும் நமது
பாரதத்து தலைவன் என்றும்
பல்லாண்டு வாழ வேண்டுகிறேன்..

ஜெய் ஹிந்த் வந்தே மாதரம்

💐💐💐💐💐💐💐💐💐

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
17.09.18

Saturday, September 15, 2018

நிம்மதி எங்கே

நிம்மதி எங்கே

சீக்கிரம் வயசாகக் கூடாதா
சிவனேன்னு உட்கார மாட்டோமா
சிந்தையிலே நிதம் நிதம் இதே
சிந்தனையே..

அலுவலகத்தின் பணிச்சுமைகள்
அதனுடன் கூட திருப்தியடையாத
மேலதிகாரியின் எதிர்பார்ப்புகள்
ஏகத்துக்கும் மன உளைச்சல்கள்..

தொலைபேசி இருப்பதால் நமது
தனிமை தொலைந்து போனது
இருபத்தி நாலு மணி நேரம் கூட
இன்னும் சுருங்கிப் போனது..

அவசர கதியில் ஓட்டமெடுத்து மன
அழுத்தத்தையும் சுமந்திடும் வேளை
எப்படி ஐயா இங்கு மகிழ்ந்திருப்பது
எங்கே போய் நிம்மதியடைவது ?

மனக் குமுறலைப் பகிர்ந்து கொள்ள
நெருக்கமான ஓர் நண்பனும் இல்லை
சினிமா டிராமா என சுற்றும் பழக்கம்
சிறுவயது முதலே வாடிக்கையில்லை..

இத்தனையும் மீறி இல்லத்தினுள்ளே
இல்லத்தரசியின் இம்சையும் வேறு
சின்னத்திரையில் சீரியல் பார்த்து
சொப்பணம் காணும் ஆசைகள் வேறு..

பாரதத்தை விடுவிக்க அன்று
பா எழுதினான் பாரதி இன்று
பாரத்தை விடுவித்துக் கொள்ள
பா எழுதுகிறான் பாலா..

ஏதோ நினைத்தேன் எழுதுகிறேன்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
16.09.18

சுப ஜனனம்

அனுஷத்தில் பிறந்த
அஷ்டலக்ஷ்மியே

அத்தை லட்சுமி இல்லத்து
இஷ்ட லக்ஷ்மியே

கணேஷ் மாமா வீடு வரும்
கஜலக்ஷ்மியே

ஆவணி மாதம் பிறந்த
ஆதிலக்ஷ்மியே

சஷ்டி திதியில் பிறந்த
சந்தானலக்ஷ்மியே

தளிர் நடை போட வரும்
தனலக்ஷ்மியே

ராம்தன்வீருக்கு சோதரியான
தான்யலக்ஷ்மியே

வளர்பிறையில் பிறந்த
விஜயலக்ஷ்மியே

விளம்பி வருடம் பிறந்த
வீரலக்ஷ்மியே

மங்களமாய் மகிழ்விக்கும்
மஹாலக்ஷ்மியே

ப்ரியாவுக்கு பாப்பாவான
பாக்கியலக்ஷ்மியே

என்றும் பல்லாண்டு வாழ்க
என வாழ்த்துகிறேன்...

💐💐💐💐💐💐💐💐💐

அன்புடன் பாலு...

* எங்கள் கணேஷ் மாமாவின் மகள்
ப்ரியவர்த்தினிக்கு இன்று மாலை பெண் குழந்தை சுப ஜனனம்..
💐💐💐💐💐💐🎂🎂🎂🎂🎂🎂

Friday, September 14, 2018

வேற்றுமையில் ஒற்றுமை

வேற்றுமையில் ஒற்றுமை

கைலாசத்து குழந்தைகளாம்
கணபதியையும் குமரனையும்
ஆரிய திராவிடர் எனப் பிரித்து
அட்டூழியம் புரிவோரே..

ஆரியக் கடவுளென்றும்
திராவிடக் கடவுளென்றும்
கடவுளிடம் கூட பேதத்தைப்
பார்க்கும் முட்டாள்களே..

நாத்திகராய் இருந்து கொண்டு
நம்பிக்கையை கொச்சைப்படுத்தி
அற்பத்தனமாய் சந்தோஷிக்கும்
அறிவில்லா மூடர்களே..

அழிக்க நீர் நினைத்தாலும்
ஆத்திகத்திற்கு அழிவில்லை
ஆயிரம் இடர் வரினும் இன்னும்
ஆலமரமாய் தழைத்தோங்கும்..

சிறுபான்மை சமூகத்திற்கு
சொம்பு தூக்கும் மாந்தர்களே
பெரும்பான்மை இந்துக்களை
புறந்தள்ளி வசைவது ஏன்..

ஓட்டு வங்கிக்கு ஆசைபட்டு
ஒற்றுமையை குலைப்பவரே
இந்து முஸ்லீம் கிருத்துவரின்
இணக்கம் என்றும் அழியாது..

வேற்றுமையில் ஒற்றுமையே
வேத பூமியாம் நம் பாரதத்தில்
மொழி மதத்தால் வேறானாலும்
உணர்வால் நாங்கள் ஒன்றேயாம்..

ஏதோ நினைத்தேன் எழுதுகிறேன்

ஜெய் ஹிந்த் வந்தே மாதரம்

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
14.09.18

எங்கள் வீட்டு கணபதி பூஜை

எங்கள் வீட்டு கணபதி பூஜை

பல வருடங்களாக வர்ணம் தீட்டிய
விநாயகர் வாங்கி பூசித்து வந்தது
மனதிற்கு சற்றே நெருடலாய்
இருந்தது..

ஆற்றுக் களிமண்ணில்
அச்சு வைத்து அழகான
ஆனைமுகனை வாங்கியது
அளவற்ற மகிழ்ச்சி எனக்கு..

பணிமாற்றம் பெற்ற பின்னே
தமிழ்நாட்டிற்க்கு வந்தது மிக
சௌகர்யமாய் ஆனது..

எருக்ககம்பூவும் அருகம்புல்லும்
மாவிலையோடு அர்ச்சனை செய்ய
எல்லையில்லா ஆனந்தமடைந்தேன்..

வெள்ளை நந்தியாவட்டை
சிகப்பு செம்பருத்தி மல்லி
செவ்வரளியுடன் ரோஜாவும்
சேர்த்து கணபதியை இன்று
குடும்பத்தோடு பூசித்தேன்..

அப்பம் வடை கொழுக்கட்டை
பாயசத்துடன் இட்லி சேர்த்து
அவல் பொரி வெல்லத்துடனே
ஆப்பிள் மாதுளை கொய்யா
வாழைப்பழம் விளாம்பழம்
சாத்துக்குடி நாவற்பழம் என
படையளிட்டு பாதம் பணிந்தேன்..

குறையாவும் தீர்த்து வைப்பாய்
குறுமுனி கும்பிட்ட கணநாதா
நிறைவான வாழ்வளிப்பாய்
நெஞ்சார உனைப் பணிகின்றேன்..

ஔவைக்கு அருளியவா
ஔடதமாய் எமை ரக்ஷிப்பாய்
வினைகளைக் களைந்து நீ
வழித்துணையாய் இருப்பாய்..

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
13.09.2018

Wednesday, September 12, 2018

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி

தந்தத்தை உடைத்து
சந்தைப் படுத்தி மஹா
பாரதம் எழுதித் தந்த
பகவானே..

சிந்தையில் உனையிருத்தி
செய்யும் செயலனைத்தும்
ஜயமடையச் செய்வாய்
ஜடா விநாயகனே..

மங்களத்தை அருளிடும்
மஞ்சள் பிள்ளையார்
மன நிறைவை நல்கிடும்
மண் பிள்ளையார்..

மோதகத்தை ஏற்கும்
சதுர்த்திப் பிள்ளையார்
மனமகிழ்வு தந்திடும்
செல்லப் பிள்ளையார்..

பிடித்து வைத்திட நம்
பிள்ளையார் வருவார்
பிடித்து செய்யும் பிடிக்
கொழுக்கட்டை ஏற்பார்..

ஆர்ப்பாட்டமான பூஜைகள்
ஆனைமுகனுக்கு வேண்டாம்
அகங்குளிர அர்ச்சித்திட
அருகம்புல் போதும்..

ஆலயம் பெரிதாய்
எழுப்பிட வேண்டாம்
அரச மரத்தடியின் கீழ்
எழிலே போதும்..

அனைத்து பூசைக்கும்
ஆரம்ப பூசை போட்டு
அண்ணலைத் தொழுதிடவே
அனுக்கிரகமும் செய்வான்..

வள்ளியை மணம் புரிய
வேலனுக்கு உதவியவன்
முப்புரம் எரித்த போது
முக்கண்ணனுக்கும் அருளியவன்..

கணபதியைப் பற்றி அவன்
காலடியைப் பணிந்திடவே
கவலைகளைக் களைவான்
கருணை மழை பொழிவான்..

ஸ்ரீமத் ஜடா விநாயக மூர்த்திகி ஜெய்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
13.09.2018

Tuesday, September 11, 2018

இ(எ)துவும் கடந்து போகும்

இ(எ)துவும் கடந்து போகும்

இ(எ)துவும் கடந்து போகும்
என நினைத்து வாழ்வதே
நமது வாழ்க்கையாகும்..

பூமியின் சுழற்சியில்
காலையும் மாலையாகும்
மாலையோ காலையாகும்..

நமது இயற்கையும் கூட
ஒரே நாளில் மாறுகையில்
செயற்கைக்கு விதிவிலக்கேது?

சொப்பணம் கண்ட நாட்கள்
சோம்பேறியாய் திரிந்த நாட்கள்
சுகமாகவேத் தான் தெரியும்..

காலம் கடக்கையிலே
கண்ணீரில் கரைகையிலே
கவனத்தை அது சிதறடிக்கும்..

கலங்கி போய் நிற்காமல்
கடவுளை நாம் நம்புவோம்
குழப்பத்தை தவிர்ப்போம்..

இ(எ)துவும் கடந்து போகும்
என நினைத்து வாழ்வதே
நமது வாழ்க்கையாகும்..

ஏதோ நினைத்தேன் எழுதுகிறேன்

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
12.09.18

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...