Search This Blog

Sunday, February 4, 2018

மாமன் மகள்

மாமன் மகள்

உன்னையே நிதம் நினைத்த
உணர்வுகளை உதறிவிட்டு
ஊரை விட்டு சென்றாயே
உனக்கு இது அழகாகுமோ..

உறவு எனும் ஒற்றைச் சொல்லில்
ஒட்டு மொத்த குடும்பத்தாரும்
உதட்டளவில் மட்டில்லாது
உயிரளவில் இணைந்திருந்தோம்..

உணர்ச்சிக்கு மதிப்பளித்து
உன் உறவை துறந்து விட்டாய்
ஒப்பில்லாத நம் உறவு வகை
உலகத்தில் இனி கிட்டாது..

உனைப் பிரிந்த நாளிலிருந்து
உனைப் பெற்றவர்கள் பேதலித்து
உணவு தண்ணி எடுக்காமல்
ஊரைச் சுற்றி திரிகின்றார்..

ஒருதலையாய் காதலித்த
உன் மாமன் எனை உதறி விட்டு
உயிரற்ற உடம்பு கொண்டு
உன் வீட்டைச் சுற்ற விட்டாய்..

மாமன் மகளைப் பிரிந்த
பிரிவாற்றாமையில் தலைவன்
எழுதிய கவிதை துளி (வலி) கள்..

சும்மா ஒரு மாற்றுக்காக உணர்வு கவிதைகள் எழுதிட ஆசை..

🙏🙏🙏🙏😃😃😃😃😃

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
07.10.17

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...