Search This Blog

Tuesday, April 30, 2019

மே தினம்

மே தினம்

முட்டையிலிருந்து
கோழியா இல்லை
கோழியில் இருந்து
முட்டையா ?

இவ்வாறே தான்
முதலாளிக்கும்
தொழிலாளிக்கும்
உண்டான தொடர்பு.

முதலீடு செய்வதனாலேயே
உழைப்பாளிகள் பிழைப்பர்
உழைக்கும் வர்க்கத்தாலேயே
முதலாளிகளும் இருப்பர்.

முனைந்து உதவி செய்ய
தொழிலாளிகள் மகிழ்வர்
இணைந்து பணி செய்திட
முதலாளிகள் பயனுறுவர்.

ஒருவரின்றி மற்றவரில்லை
ஒத்துப் போக சச்சரவில்லை
ஒரே குடும்பமாய் இயங்கிடவே
ஊரில் நிம்மதி தழைத்திடுமே.

கலகம் செய்வோரை இனங்கண்டு
களையெடுத்து அகற்ற வேண்டும்
வீடும் நாடும் செழித்து இருந்திடவே
ஒற்றுமையாய் இருத்தல் வேண்டும்.

மே தின வாழ்த்துக்களுடன்...

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ.பாலா
01.05.2019

Saturday, April 27, 2019

மெஸேஜ்

மெஸேஜ்

என்னுடனே
எப்பவுமே
நீ பேசவும்
வேணாம்

எந்தவொரு
உதவியுமே
செய்யவும்
வேணாம்

பசியாற்ற
உணவளித்து
அமர்த்தவும்
வேணாம்

பாசமுடன்
உடனிருத்தி
உலாவவும்
வேணாம்

சின்னதாக
மெஸேஜு
ஒன்றே
போதும்

சில்லுன்னு
மனசுக்கு
ரிலாக்ஸு
ஆகும்

அன்டன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
27.04.2019

மாறு மாற்று

மாறு மாற்று

மாற்றத்திற்கு
எழுது சற்றே
மாறுதலாய்
எழுது

தரமாக
எழுது நல்ல
தத்துவத்தை
எழுது

இயற்கையை
எழுது படைத்த
இறைவனுக்கு
எழுது

சமூகத்திற்கு
எழுது நல்ல
சந்தத் தமிழில்
எழுது

உறவு காக்க
எழுது அரிய
துறவு போற்றி
எழுது

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
26.04.2019

Sunday, April 21, 2019

கோடை விடுமுறை

கோடை விடுமுறை

சமைப்பது ஒரு புறம்
என்ன சமைப்பதென
யோசிப்பது மறு புறம்
சமைத்த பாத்திரத்தை
சுத்தம் செய்வது என்று
முப்பது நாட்களுக்குள்
முழி பிதுங்குகையில்
முன்னூறு நாட்களாக
ஓயாது உழைத்த பின்
கோடை விடுமுறையில்
ஊருக்கவள் சென்றதும்
வீட்டில் சின்னதாய் ஒரு
வெற்றிடம் விழும் கூடவே
மனைவியின் அருமையும்
கண்டிப்பாக எழும்.....

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
22.04.2019

Thursday, April 18, 2019

மாமாஜி

மாமாஜி

எழுபதாண்டை கடக்கும்
ஏகாம்பரரின் புத்திரரே
என்றும் பதினாறாக
தமக்கு ஈசனருள் உண்டு.

பீமரத சாந்தி காணும்
பத்மாவதியார் மைந்தரே
பாசத்திற்கு சான்றாக
உடன் பிறந்தோர் உண்டு.

கோடா குடும்பத்தின்
சீமந்த புத்திரரே உமக்கு
சியாமளா அம்மையாரின்
துணை என்றும் உண்டு.

எத்துணை இடர் வரினும்
சிந்தனை கலங்காதவரே
சித்தத்தை இறையின்பால்
இருத்திய மனம் உண்டு.

தாய்மாமன் தாமென்று
தெம்போடு கூறுவோம்
தமது ஆசியும் வேண்டி
தம் அடியைப் பணிவோம்

நலமோடும் வளமோடும்
நூற்றாண்டுகள் கண்டு
எங்களை ஆசிர்வதித்து
அருள வேண்டுகிறேன்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

என்றும் அன்புடன் பாலு..
19.04.2019

Wednesday, April 17, 2019

ஓட்டு போடுவோம்

ஓட்டு போடுவோம்

நல்லதொரு வாய்ப்பை
நழுவ விட வேண்டாம்
வாக்களிக்கும் உரிமை
விட்டுத் தர வேண்டாம்
நாடு நலம் பெற வேண்டும்
நற்தலைமை அமைய வேண்டும்
அந்நிய தேசத்திலும் கூட நமது
அன்னை பாரதம் மிளிர வேண்டும்

சற்றே சிந்திப்போம்
சுயமாக முடிவெடுப்போம்
சாதிக்கு ஓட்டுப் போடாமல்
சாதிக்கும் கட்சிக்கு ஓட்டிடுவோம்
மொழியாலே மதத்தாலே நம்மை
பிரித்தாள்வதை புறந்தள்ளி
தேசிய சிந்தனையில் திமிரோடு
துணை நிற்போம்

வந்தே மாதரம் என்று
வானுயர கூவுவோம
வாழ்க தமிழ் என்று
விண்ணதிர முழங்குவோம்

ஜெய் ஹிந்த் !!!!!!!

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
18.04.2019

Saturday, April 13, 2019

புத்தாண்டு

புத்தாண்டு

புத்தாண்டே
வருக புதிய
திருப்பம் தருக

நல்லாட்சி
மலர்க நாடு
வளம் பெறுக

தேர்தல்
நேரத்தில்
சிந்திக்க
வேணும்

தகுதியான
மனிதர்களை
இனங்காண
வேணும்

ஐந்தாண்டு
ஆட்சியை
ஒப்படைக்க
வேணும்

பாரதத்தின்
தலையெழுத்தை
மாற்றியமைக்க
வேணும்

எல்லாரும்
முனைந்து
ஓட்டளிக்க
வேணும்

காசு பணத்துக்கு
விலை போகாத
கண்ணியமும்
வேணும்

சிந்திப்போம் செயல்படுவோம் !!

இனிய தமிழ் புத்தாண்டு
வாழ்த்துக்கள் 🌷🌷🌺🌺🌻🌻

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
14.04.19

ஆன்லைன்

ஆன்லைன்

ஆன்லைனுல இருக்கற
ஆளப் பாத்து மயக்கற
ஆசையாக லைவா வந்தா
ஆஃப் லைனுக்கு போயிடற.

எங்கூடத் தான் பேசறதில்ல நீ
எப்பவும் சேட்டிங் செய்றதில்ல
டி.பிய பாத்து லைக் பண்ணிணா
அதையும் ப்ளாங்கா வெச்சிடற.

ஆன்ட்ராய்டு போனு கையில ருக்கு
அம்பானி ஜியோவும் உள்ள இருக்கு
கொஞ்சத்தூண்டு ரீசார்ஜு பண்ணி
ரொம்ப தூரத்த எணச்சுக்கலாம்.

மாசம் முழுக்கவும் பேசிக்கலாம்
மெஸேஜ் போட்டு மகிழ்ந்துக்கலாம்
நெட்டுல லைஃப் செட்டிலு பண்ணி
நைட்டு முழுக்கவும் சேட்டிக்கலாம்.

செல்லை ஆஃப் பண்ணாம வை
பவர்பேங்க் மறக்காம பக்கமா வை
ஜாலியா எப்பவும் கலாய்ச்சுக்கலாம்
ஜோடியா என்னிக்கும் கூடிக்கலாம்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
13.04.2019

ஜெய் ஸ்ரீராம்

ஜெய் ஸ்ரீராம்

உனக்கொரு கோவில்
இல்லையா ஸ்ரீராமா
உனக்கொரு கோவில்
இல்லையா ?

அயோத்தி மாநகரில்
அவதரித்தாய் ஸ்ரீராமா
ஆரண்யத்தில் ஆண்டு
பல கழித்தாய்.

அன்னை கைகேயி அன்று
அலைய விட்டாள் இன்று
அரேபிய கைகாட்டிகள்
அலைக்கழிப்பர்.

இதிகாசம் இயம்பும்
இடத்தினை ஆராய்ந்து
கோபுரம் உனக்கொன்று
கட்ட வேண்டும்.

இந்துக்கள் யாவரும்
இணைய வேண்டும்
அயோத்தியில் அழகான
கோவில் வேண்டும்.

ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ.பாலா
13.04.2019

ஸ்ரீராமஜெயம்

ஸ்ரீராமஜெயம்

பதினான்கு ஆண்டுகள்
இராஜ்ஜியமும் துறந்தாய்
கானகத்தில் கரடு முரடில்
கவலையோடு அலைந்தாய்

குகனையும் சகோதரனாய்
நல் உறவாக வரித்தாய்
அகலிகைக்கு அபயமளித்து
உயிர் பெறவும் செய்தாய்

மனைவியைப் பறி கொடுத்து
மன நிம்மதியும் இழந்தாய்
சுக்ரீவனை காக்க வேண்டி
வாலி வதமும் புரிந்தாய்

ஆஞ்சனேய மூர்த்திக்கு
அருட் கரத்தை அளித்தாய்
இலங்கைக்கு செல்ல வேண்டி
சேது சமுத்திரம் சேர்ந்தாய்

வானரத்தின் துணை ஏற்று
பாலமொன்று அமைத்தாய்
விபீஷணனை அனுக்கிரகித்து
அடைக்களமாய்  ஏற்றாய்

வான் வழியே அனுமனை
தூதனுப்பி வைத்தாய்
அடங்காத அசுரனை அன்று
அடக்கவும் நினைத்தாய்

இன்று போய் நாளை வர
வாய்ப்பையும் கொடுத்தாய்
இறுதியிலே போர் தனிலே
இராவணனை மாய்த்தாய்

முடி சூட்டி விபீஷணனை
மன்னனாக்கி மகிழ்ந்தாய்
மண்டோதரிக்கு மோட்ஷமும்
மனதாரத் தந்தாய்

விரைவாக அயோத்திக்கு
திரும்பவும் வந்தாய்
அக்கினிக்கு இரையாகும்
அனுஜனையும் காத்தாய்

நன்னாளும் வந்தது
நாடு நலம் பெற்றது

சீதா லட்சுமண பரத சத்ருக்ன
ஆஞ்சனேய சமேத ராமச்சந்திர
மூர்த்திக்கு வைபோகமாய்
பட்டாபிஷேகமும் நடந்தது

ஜெய் ஜெய் ராம் சீதா ராம் !!!
ஜெய் ஜெய் ராம் ஜானகி ராம் !!!

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
13.04.2019

Friday, April 12, 2019

ஆன் லைன்

ஆன் லைன்

ஆன்லைனுல
இருக்கற ஆனா
சேட்டிங் செய்ய
மறுக்கற.

மெயின் லைனுல
கைய விட்டு ஷாக்
அடிச்சா மாதிரி
ஒதுங்குற.

ஸைடு லைனுல
என்னய ஒதுக்கி
நைஸாக்க நீயும்
நழுவற.

ராங் லைனுல
நுழஞ்ச மாதிரி
எப்பவுமே என்ன
பாக்குற.

லைஃப் லைனுல
சேத்துக்கிடு ஒன்ன
ஒய்ஃபா நானும்
ஏத்துக்கறேன்.

ஸேஃப் லைனுல
வெச்சிக்குவேன்
கேப் இல்லாம
பாத்துக்குவேன்.

சும்மா ஒரு வீக் எண்ட் எஃபெக்ட் 😆

😧😧😁😁😣😣😎😎

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
11.04.2019

Sunday, April 7, 2019

திங்களோ திங்கள்

திங்களோ திங்கள்

ஒவ்வொரு திங்களும்
வெவ்வேறு கடமையை
நிறைவேற்றி முடிக்கவே
முழுதாக  ஏழு நாட்களை
பரிசாகத் தருகின்றது.

என்ன செய்வது
என யோசித்து
முடிப்பதற்க்குள்
வாரம் ஒன்று கடந்து
போய் விடுகின்றது.

ஞாயிற்று கிழமை இரவில்
உறக்கம் வராத நிலையில்
மிச்சமாய் வைத்த பணிகள்
படுக்க விடாமல் சில நேரம்
படுத்தி எடுக்கின்றது.

சோம்பல் முறித்து
கை விரல் சொடுக்கி
கொட்டாவியும் விட்டு
சுறுசுறுப்பில்லாது
வேலைக்குச் செல்வதா ?

வெள்ளிக் கிழமை
மாலையைப் போல
உற்சாகம் கொள்ளனும்
சவால்களை எதிர்கொள்ள
தயாராக இருக்கனும்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
08.04.2019

Saturday, April 6, 2019

தேர்தல் திருவிழா

தேர்தல் திருவிழா

கூட்டத்தை சேர்க்க
காசு பணம் இறைப்பர்
ஓசியில் பிரியாணியும்
வாங்கி கொடுப்பர்

சாலை நெடுகிலும்
கட் அவுட்டு நடுவர்
விண்ணைப் பிளக்கும்
ஒலிப்பெருக்கி வைப்பர்

ஒருவரை ஒருவர் மாற்றி
குறை (ரை)த்து கூறுவர்
ஒழுக்கத்தை புறந்தள்ளி
பொய்யறிக்கை தருவர்

எளிதாய் ஏமாற்றவே பல
இலவசத்தை இணைப்பர்
யோசிக்க விடாது மக்களை
திசை திருப்பியே விடுவர்

எழுபதாண்டு விடுதலையில்
என்ன மாற்றத்தை கண்டோம்
ஓட்டு போட்டு ஓய்ந்து இன்று
உணர்ச்சியற்று உள்ளோம்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
05.04.2019

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...