Search This Blog

Monday, March 20, 2023

பிரதோஷம்

 பிரதோஷம் 


பிரதோஷம்

நிறைமதி 

பொலிவொடு

இடப் புறம் 

உமையொடு

பிறைமதி சூடிய 

பெருமானே.. 


பகிரதன்

தவத்திற்கு

அருளிடும்

மனத்துடன்

சிரமதில்

நதி கொண்ட

பெருமானே. 


மறையது 

பொருளுக்கு

விளக்கமும்

பெறுதற்கு

குமரனைக்

குருவென்ற

பெருமானே.. 


மாலயன் 

தேடியும்

முடிவினில்

துவண்டதும்

கரையிலா

கயிலாய

பெருமானே. 


தக்கனை

எரித்தப்பின்

திரிபுரம்

அழித்தப்பின்

விரிசடை

விரித்தாடும்

பெருமானே. 


முறையிடும்

பக்தர்கள்

குறையினை

களைந்திட

திருவுள்ளம்

கொண்டிடும்

பெருமானே. 


தில்லை

அம்பலத்தில்

தீக்ஷிதர்கள்

பூசிக்க

தரிசனம்

தந்திடும்

பெருமானே. 


நின்

திருவடி

நிழலினில்

பாலன்

எனையிருத்தி

தடுத்தாட்கொள்வாய்

பெருமானே. 


சித்ஸபேஸா

சிவசிதம்பரம் 


அன்பன், சிதம்பரம்

ஆர்.வீ. பாலா

04.03.2023

Thursday, September 15, 2022

பிரதோஷம்

பிரதோஷம் 

தொந்தி மைந்தன்
ஒரு புறம் இருக்க
பிந்தி பிறந்தவன்
மறு புறம் நிற்க
துந்துபி நாதம்
எங்கும் முழங்க
நந்தி தேவரும்
மத்தளம் தட்ட
நாரத முனிவர்
தந்தியை மீட்ட
நான்முக கடவுள்
மறைகளை ஓத
இந்திரனுடன் கூடி
அமரர்கள் துதிக்க
இமயவன் மகளும்
அருகினில் இருக்க
அந்தி சாயும் வேளை
ஆனந்த நடனம் அதை
தரிசித்து திளைக்க
தில்லைக்கு போகனும். 

சித்ஸபேஸா
சிவசிதம்பரம் 

அன்பன், சிதம்பரம்
ஆர்.வீ. பாலா
08.09.2022

அடை கவிதை

அடை கவிதை 

பூச்சூடி மணக்கும்
நீள் சடை  அழகு
புடவை சார்த்திய
மெல் இடை அழகு. 

பொங்கிடும் நீரினை
தடுக்கும் மடை அழகு
பொருட்கள் நிறைந்த
பெட்டிக் கடை அழகு. 

பரிட்சை எழுதுகையில்
தோன்றும் விடை அழகு
பராக்ரமத்துடன் மோதும்
மன்னனின் படை அழகு. 

புதினா மல்லியுடன் 
சட்னி வடை அழகு 
புதுசாய் வார்க்கின்ற
நெய் அடை  அழகு.. 

அன்பன், சிதம்பரம்
ஆர்.வீ. பாலா
31.08.2022

Friday, February 25, 2022

பிள்ளையார்

 பிள்ளையார் 


ஒரு தலை நீங்கி

வேழமுகம் பெற்று

இருவரைச் சுற்றி

பழம் ஏற்றான். 


மூவுலகத்தின்

முதற் பிள்ளை

நான்மறைகளின்

இவன் எல்லை. 


ஐந்து கரங்கொண்ட

அம்பிகை மைந்தன்

ஆறுமுகனின் மூத்த 

சோதரனாம். 


ஏழு நிலையையும்

ஆட்கொண்டருளி

எட்டு திக்கினையும்

காப்பவனாம். 


ஒன்பது கோள்களும்

அவனிடம் பணியும்

பத்து தலை ராவணன்

செருக்ககற்றவனாம். 


அன்பன், சிதம்பரம்

ஆர்.வீ. பாலா

22.12.2021


தமிழா !!!

 தமிழா !! 


மல்லாந்து

துப்பும் எச்சில்

நம் மீதே விழும். 


மத்திய ஆட்சி 

எதிர்ப்பு என்றும்

நம்மையே சுடும். 


உலகமே போற்றும்

உத்தம தலைவன் 

உன் பார்வையில் ?? 


பழைய எச்சங்கள்

இ(ற)ருக்கும் வரை

நீ வேர்வையில் ...😔 


தமிழா !!! 


என்று உணர்வாய் ?

சிந்தை தெளிவாய். 


விசனத்துடன் பாலா 😧😭

தத்து பித்து

 தத்து பித்து 


வழியில் சிக்னல் 

கிடைத்தால் வாகனம் 

நகரும். 


வாட்ஸப்பில் சிக்னல்

கிடைத்தால் வார்த்தையும்

நகரும். 


வாகனம் நகர எரி

பொருள் தேவை 


வார்த்தைகள் நகரவோ 

பொருள் (விஷயம்) தேவை 


முன்னதுக்கு காசு வேணும்

பின்னதுக்கு மனசு வேணும் 


சும்மா தோணிய தத்து பித்து 😎 


அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா

27-05-2019

உலக சகோதர தினம்

 உலக சகோதர தினம் 


சகோதரனாகப் பிறந்தவன்

எப்பவும் தன் சம்சாரத்துடன்

சுமூகமாகவே இருப்பான். 


அவர்கள் படும் வலி தெரியும்

அனுசரித்து செல்லக் கூடிய

வழியும் தெரியும். 


இரண்டாவது தந்தையாக

இல்லத்தை வழி நடத்தும்

ஆண்மகனும் இவனே. 


உடன் பிறந்த சகோதரன்

உடனிருந்தால் ஒவ்வொரு

பெண்ணும் மஹாராணியே. 


ஒவ்வொரு ஆண் நண்பனும்

சகோதரனாகவேப் பழகினால்

அப்பெண்ணிற்கு பாதுகாப்பே. 


அண்ணனோடு பிறந்த தம்பி

தம்பியோடு பிறந்த அண்ணன்

முதலில் நண்பர்களே ஆவர். 


தம்பி உடையான் படைக்கஞ்சான்

அண்ணன் உடையான் எதற்குமே

அஞ்சான். 


இன்று உலக சகோதர தினத்திற்காக

எழுதிய வரிகள் ..... 


அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா

24.05.2019 

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...