Search This Blog

Thursday, August 30, 2018

ஏன் இப்படி

ஏன் இப்படி

இனம்புரியாத ஓர்
குழப்பம் என் மனதில்
ஒவ்வொரு நாளும்
வெவ்வேறு விதமாய்..

புதிய சவால்களுடன்
எதிர்நோக்கி இருக்கிறேன்
புதிய பாதையில் நான்
பயணிக்க நினைக்கிறேன்..

அலுவலகத்து அழுத்தங்களை
அங்கேயே  நாம் மறந்திடுவோம்
அனாவசியமாய் அதை சுமந்திடவே
ஆஸ்பித்திரிக்கு  சென்றிடுவோம்..

நிரந்தரமாக எதுவும் இல்லை
நாளை நமது கையில் இல்லை
நடப்பது என்பது நடந்தே தீரும்
நம்பிக்கையே வாழ்வின் எல்லை..

மனக் குழப்பத்திற்கு ஓர் மருந்தாக
கவிதை வரிகளை நானெடுத்தேன்
மகேஸ்வரன் மேலே பாரத்தையிட்டு
கலங்கும் மனதை தேற்றிக்கொண்டேன்

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
30.08.18

Friday, August 24, 2018

சுதா அக்கா

சுதா அக்கா

ஓய்வறியாது உழைப்பவளே
உன்னைப் பற்றி என்ன நான்
எழுதுவது ?

படிக்கும் காலத்தில்
படிப்பு ஏறவில்லையென
பளிச்சென்று கூறிவிட்டாய்..

உன்னுடன் பிறந்த நாங்கள்
உருப்படியாய் ஏதோ படித்து தேறிட
ஒதுங்கி நீயோ தனித்து போனாய்..

வீட்டு வேலைகளை எல்லாம்
இழுத்துப் போட்டு செய்திட்ட
ஆர்.வீ. இல்லத்து அக்கா நீயே..

என்ன தோணியதோ நானறியேன்

அப்பாவின் அனுகிரஹத்தால்
ஆங்கிலத்தை விடுத்து திடுமென
ஹிந்தியில் அஸ்திவாரம் போட்டாய்..

இன்றளவும் அன்று உன்னிடம்
பாடம் பயின்ற மாணாக்கர்கள்
உனை நினைத்துப் பார்ப்பதுண்டு..

அழகிய திருச்சி மாநகரத்தில்
அடியெடுத்து வைத்த பின்னே
மீண்டும் கற்பிக்க ஆரம்பித்தாய்..

அப்பாவின் வழித்தோன்றலாய்
பத்து வருடங்களுக்கு மேலாக
ஆயிரத்தை தொடும் மாணவர்கள்..

வெறும் பேச்சளவில் மொழி கற்ற
எங்களையெல்லாம் முந்திக் கொண்டு
செயலில் போதிக்கும் செல்வி நீயே..

புரியாத மொழியினை புறந்தள்ளி
தெரிந்த மொழியை தெம்புடன் பற்றி
பீடு நடை போடும் பிராட்டியும் நீயே..

கலை அலை மலை மகள்கள் என
முத்தாக மூன்று கண்மணிகள் உனது
கவலையைப் போக்கும் நன்மணிகள்..

கருத்துடன் காசை செலவிடுதலில்
நம் அம்மாவைப் போன்றே நீயும்
இருப்பதாகவே நானறிவேன்..

உழைப்பை மூலதனமாகக் கொண்டு
படிப்பை பெரிய சொத்தாக உனது
குழந்தைகளுக்கு கொடுத்திடுவாயே..

சகல சௌபாக்கியங்களுடன்
சந்தோஷமாக பல்லாண்டு நீ
வாழ வேண்டி வாழ்த்துகிறேன்..

அன்பு தம்பி பாலு 💐💐💐💐
25.08.18

இரயில் பயணம்

இரயில் பயணம்

பரபரப்புடன் காணப்பட்டது சென்னை புறநகர் இரயில்வே நிலையம். மாலை அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் கூட்ட நெரிசலில் ஒருவரை ஒருவர் முட்டி மோதிக் கொண்டு ரயிலைப் பிடிக்க ஓடிக் கொண்டிருந்தனர். எப்படியோ கஷ்டப்பட்டு ஜன்னலோர இருக்கையொன்றில் அமர்ந்து கொண்டான் அவன். நேரம் செல்ல செல்ல மூன்று பேர் இருக்கையில் ஐந்து பேர் இடித்தபடி வந்து அமர்ந்தனர். சூடான சமோசா எனக் கூவியதைக் கண்டு சிரிப்பு தான் வந்தது. அப்படியும் ஆறிப்போனதை ஆவலுடன் சிலர் வாங்கிக் கொரித்தனர். பசியடங்கணுமே என்ன செய்வது. சிறிது நேரத்தில் வண்டியின் உள்ளேயே கொய்யாப் பழம், வேர்க்கடலை, முறுக்கு என பல்வேறு தின்பண்டங்கள் வரிசைகட்டி விற்கப்பட்டு வந்தன. இன்னொரு புறம் ஒரு பெண்மணி மல்லி, முல்லை என்று பூச்சரங்களை விற்று வந்தாள். கீரைக் கட்டும் காய்கறிகளும் கூட அங்கே கூவி விற்றனர். கண்ணில்லாத ஒருவர் பேனா, பர்ஸ், பென்சில் என்று இயன்றளவு விற்க முயற்சித்து வந்தார். அவரவர்க்கு தேவையானதை வாங்குவதில் அங்கே ஒவ்வொருவரும் முனைப்புடன் இருந்தனர்.

சிலர் கூட்டமாக அரட்டையடித்தபடி அரசியலையும் சினிமாவையும் அலசியபடி பொழுது போக்கிக் கொண்டிருந்தனர். இரயில் வண்டியோ ஊர்ந்து செல்கிறது, ஆனால் பலரது வாழ்க்கையோ மிகவும் விரைந்து செல்கிறது. இந்த வண்டி பயணத்தை நம்பி அதில் விற்பனை செய்தபடி எத்தனை குடும்பங்கள் உழைத்து பிழைக்கின்றன. அப்பப்பா, கணக்கில் எண்ண மாளாது.

அவனுக்கு அந்த காட்சிகள் எல்லாம் விசித்திரமாக இருந்தது. நெரிசலில் பயணித்தவன் இல்லை. இருபது வருடங்களாக வீடும் அலுவலகமும் மிகவும் பக்கத்தில் அமைந்து இருந்தன. சொகுசாக வாழவில்லையெனினும் சுகமாக வாழ்ந்து வந்தான். என்ன செய்வது, அலுவலக மாற்றத்தால் இம்மாதிரி புதுவித அனுபவங்கள் அவனுக்கு கிட்டியது. ஆனாலும் தினசரி தொலைதூரம் பயணிப்பது சற்று சிரமமாகவே தோணியது. எதிலும் பழக்கப்பட்டு விட்டால் நாளடைவில் சரியாகிவிடும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே புகைவண்டி அவனது நிறுத்தத்தில் நின்றிட, அவனும் கண்ட காட்சிகளை மனதிற்குள் எண்ணி ரசித்தபடி தனது இல்லம் நோக்கிச் சென்றான்.

கடந்த வாரத்தில் சென்னைக்கு சென்று திரும்பும் போது பயணித்த அனுபவக் கட்டுரை..🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா 24.08.18

Thursday, August 23, 2018

வரலட்சுமி விரதம்

~ வரலட்சுமி விரதம் ~

புள்ளி வைத்த கோலம், பெரும்
புகழ்தனைச் சேர்க்கும்.
குலமகள் இடும் கோலம்,
மூன்று மகள்களைக்
குளிர்விக்கும்.
(கலை, அலை, மலை மகள்)

திங்கள் இடும் கோலம், நித்ய
தரித்திரம் தீர்க்கும்.
செவ்வாயின் கோலம், உடல்
ஒவ்வாமை ஓட்டும்.
புதன் இடும் கோலம், நற்
புத்திரரைத் தாரும்.
வியாழனின் கோலம், பெரும்
வியாதியைத் தீர்க்கும்.
வெள்ளி இடும் கோலம், வாழ்வின்
விடிவெள்ளியாய் அமையும்.
சனி இடும் கோலம், தீராப்
பிணிதனைப் போக்கும்.
ஞாயிற்றின் கோலம், பிறவிப்
பேற்றினைத் தாரும்.

ஆக வாரம் ஏழு கோலம், அந்த
கோள வினைதனைத் தீர்க்கும்.

வரலக்ஷ்மி விரத பூஜா பலன் அனைவருக்கும் கிட்டிட
அலைமகளின் அருள் வேண்டி
வணங்கும்
அன்பன், சிதம்பரம் ஆர்.வி. பாலா..

Wednesday, August 22, 2018

புல்லட் பயணம்

புல்லட் பயணம்

பல நாள் கனவொன்று
நனவானது எனக்கு
புல்லட் ஓட்டுவது இன்று
மெய்யானது..

அதிக விலையினால்
ஆதங்கப் பட்டதுண்டு
அழகாய் அதில் அமர
ஆசையும் பட்டதுண்டு..

கிடைத்த சந்தர்ப்பத்தை
நழுவ விட்டு விடாமல்
வண்டியில் ஏறியமர்ந்து
சாலையில் பயணித்தேன்..

ஸ்கூட்டிகள் யாவும்
சின்னதாய் தெரிந்தது
பேருந்தின் பக்கத்தில்
பெரிதாய் இருந்தது..

நான்கு சக்கர வாகனத்தில்
நலுங்காமல் பயணித்தும்
புல்லட்டில் பயணிப்பது
சும்மா நச்சுன்னு இருந்தது..

என்னையும் அறியாமல்
எண்பது நூறு வேகத்தில்
வண்டியை செலுத்தியதை
விவரிக்க வார்த்தையில்லை..

அலுப்பெடுக்காமல்
நாற்பது மைல் ஓட்ட
வாய்ப்பளித்த எனது
நண்பனுக்கு நன்றி..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
22.08.18

Friday, August 17, 2018

அடல்ஜி

அடல்ஜி

ஆகஸ்ட் பதினைந்தில்
ஆயுசை முடித்து வைக்க
கூற்றுவன் வந்தானாம்
ஆஸ்பித்திரி வாசலுக்கு..

இன்று போய் நாளை வா
தவறாமல் நான் வருவேன்
தருமனே சென்று வருக என
அவனிடம் கூறினாராம்..

இன்றைக்கும் நாளைக்கும்
என்ன வித்தியாசம் என்று
சற்று நீர் எடுத்துரைப்பீர்
என்றான் காலன்..

எமதர்மராஜனே ;

முழுக்கம்பத்தில் ஏற்றிடும்
மூவர்ணக் கொடி இன்று
அரைக்கம்பத்தில் பறக்கலாமோ
என்று அடல்ஜி கூறினாராம்..

இங்ஙனம் இறப்பிலும் தனியாக
முத்திரை பதித்தவர் மாமனிதர்
ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
17.08.18

அடல்ஜி

அடல்ஜி

வயதில் மட்டும்
மூத்த தலைவரை
இன்று நமது நாடு
இழக்கவில்லை..

அனுபவத்தில் மூத்த
அரிய பெருமகனை
உண்மையில் இன்று
இழந்துள்ளது..

சவால்கள் நிறைந்த
சந்தர்ப்பங்களில்
சாமர்த்தியமாக
சமாளித்தவர்..

ஆரம்பப் புள்ளி வைத்து
அஸ்திவாரம் பலமாயிட்டு
பாரதீய ஜனதா கட்சியை
பாரதத்தில் வளர்த்தவர்..

தங்க நாற்கர சாலை
திட்டத்தினை வகுத்து
தடையிலா பயணத்தை
தந்தவரும் இவரே..

பதிமூன்று நாட்கள்
பதினொரு மாதங்கள்
பின் பொறுத்து ஜெயித்து
பதிமூன்றாவது பிரதமர்..

இவர் போட்டுத் தந்த
பாதையில் தான் இன்று
அபார வளர்ச்சி கண்டுள்ளது
அவரது கட்சி..

தனக்கென தனியாக
குடும்பம் இவர்க்கில்லை
தாய்த் திருநாட்டைத் தவிர
கவனம் வேறிருந்ததில்லை..

RIP - REST IN PEACE எனக் கோராமல்
RIP - RETURN IF POSSIBLE என்போம்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
17.08.18

Thursday, August 16, 2018

அதிசயமான ஆகஸ்ட் மாதம்

அதிசயமான ஆகஸ்ட் மாதம்

ஒரே வருடத்தில் பிறந்த
இரு வேறு தலைவர்கள்
ஒரே மாதத்தில் மரித்தும்
போயுள்ளனர்..

வடக்கில் ஒருவர் எனில்
தெற்கில் இன்னொருவர்
முன்னவர் தேசியம் எனில்
பின்னவர் திராவிடம்..

கவின்மிகு பேச்சால்
கவித்திறனால் இருவரும்
தத்தமது மொழியில் மிகவும்
புலமை / புகழ் பெற்றவர்கள்..

மத்தியில் ஆட்சி புரிந்து
மாநிலங்களை கவர்ந்தவர்
மாநிலத்தில் ஆட்சி புரிந்து
மக்களை இவர் கவர்ந்தவர்..

இருவருக்குமிடையே சில
முரண்பாடுகளும் உண்டு
மறைந்து போன பின்னே
மதிப்பீடு செய்யலாகாது..

திரித்து பதிவு செய்ய
எமக்கு விருப்பமில்லை
வரிகளைப் படிப்போருக்கு
வார்த்தை பொருள் விளங்கும்..

அவர்களது ஆன்மா சாந்தியடைய
ஆண்டவனை பிரார்த்திப்போம்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
16.08.18

அடல் பிஹாரி வாஜ்பாய்

அடல் பிஹாரி வாஜ்பாய்

அடல் என்றால்
திடம் என்று பொருள், ஆம்
அடல் பிஹாரி வாஜ்பாய் தனது
கொள்கையில் திடம் கொண்டவர்..

ஜன சங்கம் என்ற விதையை
பலத்த போராட்டத்துக்கு மத்தியில்
பாரதீய ஜனதா பார்ட்டி என்ற
பெரிய ஆலமரமாக உருவாக்கியவர்..

உறுப்பினரே இல்லாத
பாராளுமன்றத்தில்
தனி ஒருவராக பலகாலம்
சமாளித்து நின்றார்..

பாரத தேசத்திற்கே
பெருமை சேர்க்கும்
பொக்ரான் சோதனை
நடக்கக் காரணமானவர்..

கவிதை மழை பொழியும்
அண்ணாரின் பேச்சை
எதிரணியினரும் கூட
ஏகோபித்து கேட்டதுண்டு..

எவரையும் புண்படுத்தாத
எவரும் புண்படுத்த நினைக்காத
இணக்கமான மென்மை
மனிதர் இவர்..

அவரது உடல் நலம் பூரண
குணம் பெற்றிட வேண்டி
பிரார்த்திக்கும் இந்தியர்களில்
அடியேனும் ஒருவன்..

💐💐💐🙏🙏🙏👏👏👏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
16.08.18

Wednesday, August 15, 2018

பயிற்சியே முயற்சி

பயிற்சியே முயற்சி

மனதை ஒருநிலைப் படுத்தி
மனக்கண் முன்னே நடக்கும்
காட்சிகளை நானும் ஓட விட்டேன்
கவின்மிகு சில வார்த்தைகளாக
வரிகளில் சற்றே வார்த்தெடுத்தேன்

சொல்லனா மகிழ்வில் நானும்
சொக்கியே லயித்துப் போனேன்
அலங்கார வார்த்தைகளுடனே
அடுக்கடுக்கான வார்த்தைகளிலே
அழகு நடையில் படைக்கலானேன்

இலக்கிய நடையில் எழுதவில்லை
இலக்கணம் வகுத்து எழுதவில்லை
இரட்டை அர்த்தத்தில் எழுதவில்லை
இச்சைப்பட்ட கற்பனை வரிகளில்
இஷ்டம் போல எழுதலானேன்

கவிதையெழுத கற்பனை வேண்டும்
கவிதையெழுத புலமையும் வேண்டும்
கவிதையெழுத உவமையும் வேண்டும்
கவிதையெழுத மொழித்திறன் வேண்டும்
இவையாவும் எனக்கு இல்லையென்பேன்

எப்பவோ படித்த சின்ன புத்தகங்கள்
பள்ளியில் பயின்ற பாடப் புத்தகங்கள்
நித்தம் நிகழும் சம்பவங்கள் மற்றும்
நண்பர்கள் பெரியோர் உந்துதல்கள்
என்றும் என்னை எழுத வைக்கின்றது

கவிச்சக்கரவர்த்தியையும்
காளமேகப் புலவனையும்
பாரதியையும், பாவேந்தரையும்
இளங்கோவடிகள் என பலவும்
படித்து பயிற்சி எடுக்க வேண்டும்

முயற்சிக்கு ஓய்வில்லை
மூளைக்குத் தொய்வில்லை
மூஷிகனின் அருள் கொண்டு
முனைந்து எழுதிடுவேன் நான்
முப்போதும் பயின்றிடுவேன்..

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
15.08.18

Tuesday, August 14, 2018

விடுதலை

விடுதலை

ஆண்டுகள் பல கடந்தும்
அடைந்து விட்டோமா நாம்
விடுதலை ??

ஆங்கிலேயர்கள் நம் நாட்டை
விட்டு வெளியேறியது மட்டுமா
விடுதலை ??

அனைத்து துறைகளிலும்
ஆழ்ந்திருக்கும் ஊழலுக்கு
எப்போது விடுதலை ??

சாதி மதத்தின் பெயரால்
சீர்கெட்டுள்ள சமூகத்திற்கு
எப்போது விடுதலை ??

அயோக்கியத்தனம் புரியும்
அரசியல்வாதிகளிடமிருந்து
எப்போது விடுதலை ??

கள்ளப் பணத்தைப் கடத்தும்
கயவர்களிடம் இருந்து
எப்போது விடுதலை ??

கறுப்புப் பணத்தைப் பதுக்கும்
கொடியவர்களிடம் இருந்து
எப்போது விடுதலை ??

பெண்களை சீரழிக்கும்
போக்கிரிகளிடம் இருந்து
எப்போது விடுதலை ??

அநீதிக்கு எதிராக குரலெழுப்பத்
தயங்கும் அச்சத்திடம் இருந்து
எப்போது விடுதலை ??

தொழிலாளர்களை வதைக்கும்
முதலாளி வர்க்கத்திடம் இருந்து
எப்போது விடுதலை ??

அடுத்தவரைப் பார்த்து ஏங்கும்
நம் பொறாமை குணத்தினின்று
எப்போது விடுதலை ??

பிறரைக் கெடுத்து தான் மட்டும்
வாழ நினைக்கும் எண்ணத்திற்கு
எப்போது விடுதலை ??

வெறும் வாய் வார்த்தைகளால்
கூறுவது மட்டும் விடுதலை அல்ல
சமூகத்தின் கட்டமைப்பால் கூடவே
நம்  செயல்களால் அடைவதே
உண்மையான விடுதலை ஆகும்..

நாட்டைத் திருத்துவதற்கு முன்
நமது வீட்டை நம் உள்ளக கூட்டை
முதலில் திருத்திக் கொள்வோம்..

ஜெய் ஹிந்த் !! வந்தே மாதரம் !!

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
14.08.18

Monday, August 13, 2018

ஆண்டாள்

ஆண்டாள்

ஆடிப் பூரத்து
அம்பிகையே
சூடிக் கொடுத்த
சுடர்க் கொடியே

வில்லிபுத்தூரின்
வடிவழகே நீ
கண்ணனைக்
கவர்ந்த காரிகையே

பக்தியால் பரந்தாமனை
பாசப் பிணைப்பிட்டு
பாருக்கு உணர்த்திய
பைங்கிளியே

திருப்பாவையருளிய
திருப் பாவையே
திருமாலை சரணடைந்த
அருட் பாவையே

அகமுருகி ஆண்டாளை
அர்ச்சித்து வழிபடவே
அஷ்ட ஐஸ்வர்யமும் கிட்டும்
அரங்கனின் அருளும் கிட்டும்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
13.08.18

கிருஷ்ண கானம்

கிருஷ்ண கானம்

வசுதேவர் இல்லத்து
எட்டாவது பிறப்பு
வைகுண்டவாசனின்
ஒன்பதாவது சிறப்பு.

காராக்ரஹத்தினுள்ளே
கருவாய் இருந்தவன்
அஷ்டமி நன்னாளில்
உருவாய் வெளிவந்தவன்.

தாய் மாமன் கம்சனிடம்
தப்பிப் பிழைத்திடவே
கொட்டும் மழையிலும்
கோகுலம் சென்று சேர்ந்தான்.

யசோதை இளஞ்சிங்கமாய்
யமுனையாற்றங்கரையிலே
கோபிகா ஸ்திரீக்களுடன்
கொஞ்சித் தவழ்ந்து வந்தான்.

இராமாவதாரத்தில் உதவிய
வானர சேனைகளையெல்லாம்
கோபியராய்ப் பிறக்கச் செய்து
கைம்மாறு முடித்துக் கொண்டான்.

கடைந்த வெண்ணையை
கள்ளமாகத் திருடித் தின்று
பிடிபட்டக் குழந்தையாகப்
பாசாங்கும் செய்திடுவான்.

முறையிட்ட பெண்மணியால்
சினங்கொண்ட யசோதைக்கு
ஆ வென்று வாய்த் திறந்து
அகிலத்தையே காட்டி விட்டான்.

கொட்டும் மழைக்காக
கோவர்த்தன மலை தூக்கி
கோகுலத்தையே ரக்ஷித்த
கோபால கிருஷ்ணன் அவன்.

யமுனை ஆற்றங்கரையில்
யாதவ சிறார்களோடு
ஆடிக் களிக்கையிலே ஓர்
அரவம் வெளிவரக் கண்டான்.

அச்சம் அடைந்த சிறுவர்களை
ஆசுவாசப் படுத்திவிட்டு
ஆற்று நீருக்குள்ளே அவன்
அநாயாசமாய் நுழைந்தான்..

விடத்தை கக்கி நிற்கும்
வீரிய பாம்பின் தலை மேல்
காளிங்க நர்த்தனம் செய்து
களிநடம் புரிந்து நின்றான்..

பேயுருவம் எடுத்த
பூதகி ராக்ஷஸியின்
மார்தனைக் கடித்து துப்பி
மரணிக்கவும் செய்தான்..

கோபியர் குளிக்கையிலே
கோகுலக்கண்ணனும் சற்றே
துணிகளை மறையச் செய்து
திண்டாட விட்டு மகிழ்வான்..

எல்லா உயிர்களையும் தன்
புல்லாங்குழல் இசையால்
மயக்கம் கொளச் செய்யும்
மாயக் கண்ணன் அவன்..

பிருந்தாவனத்தினிலே
சஞ்சாரம் செய்தபடி
ராதையோடு உல்லாசிக்கும்
ராதாகிருஷ்ணன் அவன்..

விக்கித்து நின்ற விஜயனுக்கு
விஸ்வரூப தரிசனமும் தந்து
காண்டீபம் எடுக்கச் செய்து
கர்ணனையும் மாய்க்கச் செய்தான்.

பார்த்த சாரதியாகி அன்று
பாண்டவர்க்கு துணை நின்று
பாரதப் போர்தனிலே அவர்க்கு
வெற்றியும் கிடைக்கச் செய்தான்.

பகவத்கீதை தந்தருளிய பரந்தாமா
பக்தர்களை காக்கும் பாண்டுரங்கா
வனமாலி வாசுதேவா, நந்தகுமாரா
மாதவா, முரளீதரா, மதுசூதனா..

ஹரே ஸ்ரீ கிருஷ்ணா சரணம் சரணம்..

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பனம்

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
13.08.18

Sunday, August 12, 2018

இராமாயணம்

இராமாயணம்

கோசலைக் குமரனாம்
கோதண்ட இராமனாம்
வைகுண்ட வாசனிவன்
வேள்வியில் உதித்தவனாம்.

திருமாலின் அவதாரமாம்
திரேதாயுகத்து பெருமானாம்
தசரத மஹாராஜாவின்
தலைச்ச பிள்ளையைவனாம்.

முனிவரின் தவம் காக்க
முனைந்து நின்றவனாம்
வனத்திலே அசுரர்களை
வதைத்து கொன்றவனாம்..

ஜனகனின் புத்திரியாம்
ஜானகியை மணம் புரிய
சபையோர் முன்னிலையில்
சிவதனுசு ஒடித்தவனாம்..

தந்தையின் சொல் கேட்டு
தாருகமும் சென்றவனாம்
பதினான்கு வருடங்கள்
பட்டத்தை துறந்தவனாம்..

தொடுத்த வில்லையும்
கொடுத்த சொல்லையும்
திரும்பப் பெறாதவனாய்
கானகமும் சென்றவனாம்..

அரசாளும் சுகம் மறந்து
ஆரண்யம் சென்றவனாம்
அறுவராக குகனையும்
ஆலிங்கனம் செய்தவனாம்..

பாதத்துளி மூலம் அகலிகைக்கு
பாப விமோசனம் தந்தவனாம்
மூதாட்டி சபரியின் பழம் உண்டு
முக்தியும் அளித்தவனாம்..

மாயமான் விரித்த வலையில்
மனங்குழம்பி கொண்டவனாம்
இலங்கேஸ்வரனிடம் தனது
இலக்குமியை தொலைத்தவனாம்.

இலக்குவனோடு வனத்தில்
இராப்பகலாய் தேடினவனாம்
பட்சிராஜா ஜடாயுவைக் கண்டு
பித்ரு காரியம் செய்தவனாம்..

சுக்ரீவனோடு கூட்டமைத்து
சேனையும் அமைத்தவனாம்
வானர வாலியை மறைந்து
வதம் செய்து காத்தவனாம்..

வாயு மைந்தன் அனுமனை
வான் வழியே தூதனுப்பி
யுத்தம் புரியாமல் இருக்க
ஆயத்தம் செய்தவனாம்..

கணையாழியை கண்டதுமே
கண்ணீரும் சொறிந்தவனாம்
சேதுவில் பாலம் அமைத்து
சமுத்திரத்தைக் கடந்தவனாம்..

அசுரன் விபீஷணனுக்கும்
அடைக்கலம் தந்தவனாம்
இன்று போய் நாளை வாவென
இராவணனைப் பணித்தவனாம்..

சத்ரு சேனையை அழித்து
சீதா பிராட்டியையும் மீட்டு
அக்கினியில் புகச் செய்து
அழுக்கை அகற்றினவனாம்..

பாதுகா பட்டாபிஷேகத்துடன்
பணி செய்யும் பரதனையும்
வேள்வியில் விழாமல் மீட்க
விரைந்து திரும்பினவனாம்..

அயோத்தி மாநகரமே
அமர்க்களப்பட்டது ஸ்ரீ
இராமச்சந்திர மூர்த்திக்கு
இராஜ்யாபிஷேகம் நடந்தது..

சீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன
ஹனுமத் ஸமேதரான   ஸ்ரீ
இராமச்சந்திர மூர்த்திக்கு ஜெய்..

ஜெய் ஜெய் ராம் சீதா ராம்
ஜெய் ஜெய் ராம் சீதா ராம்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
13.08.18

இராமாயணம்

இராமாயணம்

கோசலைக் குமரனாம்
கோதண்ட இராமனாம்
வைகுண்ட வாசனிவன்
வேள்வியில் உதித்தவனாம்.

திருமாலின் அவதாரமாம்
திரேதாயுகத்து பெருமானாம்
தசரத மஹாராஜாவின்
தலைச்ச பிள்ளையைவனாம்.

முனிவரின் தவம் காக்க
முனைந்து நின்றவனாம்
வனத்திலே அசுரர்களை
வதைத்து கொன்றவனாம்..

ஜனகனின் புத்திரியாம்
ஜானகியை மணம் புரிய
சபையோர் முன்னிலையில்
சிவதனுசு ஒடித்தவனாம்..

தந்தையின் சொல் கேட்டு
தாருகமும் சென்றவனாம்
பதினான்கு வருடங்கள்
பட்டத்தை துறந்தவனாம்..

தொடுத்த வில்லையும்
கொடுத்த சொல்லையும்
திரும்பப் பெறாதவனாய்
கானகமும் சென்றவனாம்..

அரசாளும் சுகம் மறந்து
ஆரண்யம் சென்றவனாம்
அறுவராக குகனையும்
ஆலிங்கனம் செய்தவனாம்..

பாதத்துளி மூலம் அகலிகைக்கு
பாப விமோசனம் தந்தவனாம்
மூதாட்டி சபரியின் பழம் உண்டு
முக்தியும் அளித்தவனாம்..

மாயமான் விரித்த வலையில்
மனங்குழம்பி கொண்டவனாம்
இலங்கேஸ்வரனிடம் தனது
இலக்குமியை தொலைத்தவனாம்.

இலக்குவனோடு வனத்தில்
இராப்பகலாய் தேடினவனாம்
பட்சிராஜா ஜடாயுவைக் கண்டு
பித்ரு காரியம் செய்தவனாம்..

சுக்ரீவனோடு கூட்டமைத்து
சேனையும் அமைத்தவனாம்
வானர வாலியை மறைந்து
வதம் செய்து காத்தவனாம்..

வாயு மைந்தன் அனுமனை
வான் வழியே தூதனுப்பி
யுத்தம் புரியாமல் இருக்க
ஆயத்தம் செய்தவனாம்..

கணையாழியை கண்டதுமே
கண்ணீரும் சொறிந்தவனாம்
சேதுவில் பாலம் அமைத்து
சமுத்திரத்தைக் கடந்தவனாம்..

அசுரன் விபீஷணனுக்கும்
அடைக்கலம் தந்தவனாம்
இன்று போய் நாளை வாவென
இராவணனைப் பணித்தவனாம்..

சத்ரு சேனையை அழித்து
சீதா பிராட்டியையும் மீட்டு
அக்கினியில் புகச் செய்து
அழுக்கை அகற்றினவனாம்..

பாதுகா பட்டாபிஷேகத்துடன்
பணி செய்யும் பரதனையும்
வேள்வியில் விழாமல் மீட்க
விரைந்து திரும்பினவனாம்..

அயோத்தி மாநகரமே
அமர்க்களப்பட்டது ஸ்ரீ
இராமச்சந்திர மூர்த்திக்கு
இராஜ்யாபிஷேகம் நடந்தது..

சீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன
ஹனுமத் ஸமேதரான   ஸ்ரீ
இராமச்சந்திர மூர்த்திக்கு ஜெய்..

ஜெய் ஜெய் ராம் சீதா ராம்
ஜெய் ஜெய் ராம் சீதா ராம்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
13.08.18

அப்பப்பா ஆகஸ்ட்

அப்பப்பா ஆகஸ்ட்

ஆடி வெள்ளிகள்
ஆடிப் பெருக்கு
ஆடி கிருத்திகை
ஆடி அமாவாசை
ஆடிப் பூரம்
நாக பஞ்சமி
வரலக்ஷ்மி விரதம்
ஆவணி அவிட்டம்

ஒன்றா இரண்டா
ஆகஸ்ட் மாதம்
முழுவதும் நிறைய
விஷேஷ தினங்கள்..

வகைவகையான
பட்சணங்கள் கூடவே
வடை பாயாசத்துடன்
போஜனங்கள்..

ருசித்து ரசித்து
உண்பதனால்
சிறியவர்களுக்கு
கொண்டாட்டம்..

வெளுத்து வாங்கும்
செலவுகளால் நம்
பெரியவர்களுக்கு
திண்டாட்டம்..

மொத்த வருடத்தில் இந்த
முப்பது நாளில் மட்டும்
நாளும் கிழமைகளுமாய்
நிறைந்து கிடக்குது..

ஒற்றை வருமானத்தில்
ஒரேயடியாய் பண்டிகைகள்
பின் தொடர்ந்து வருவது
பிரமிப்பாய் இருக்குது..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
12.08.18

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...