Search This Blog

Friday, February 25, 2022

பிள்ளையார்

 பிள்ளையார் 


ஒரு தலை நீங்கி

வேழமுகம் பெற்று

இருவரைச் சுற்றி

பழம் ஏற்றான். 


மூவுலகத்தின்

முதற் பிள்ளை

நான்மறைகளின்

இவன் எல்லை. 


ஐந்து கரங்கொண்ட

அம்பிகை மைந்தன்

ஆறுமுகனின் மூத்த 

சோதரனாம். 


ஏழு நிலையையும்

ஆட்கொண்டருளி

எட்டு திக்கினையும்

காப்பவனாம். 


ஒன்பது கோள்களும்

அவனிடம் பணியும்

பத்து தலை ராவணன்

செருக்ககற்றவனாம். 


அன்பன், சிதம்பரம்

ஆர்.வீ. பாலா

22.12.2021


தமிழா !!!

 தமிழா !! 


மல்லாந்து

துப்பும் எச்சில்

நம் மீதே விழும். 


மத்திய ஆட்சி 

எதிர்ப்பு என்றும்

நம்மையே சுடும். 


உலகமே போற்றும்

உத்தம தலைவன் 

உன் பார்வையில் ?? 


பழைய எச்சங்கள்

இ(ற)ருக்கும் வரை

நீ வேர்வையில் ...😔 


தமிழா !!! 


என்று உணர்வாய் ?

சிந்தை தெளிவாய். 


விசனத்துடன் பாலா 😧😭

தத்து பித்து

 தத்து பித்து 


வழியில் சிக்னல் 

கிடைத்தால் வாகனம் 

நகரும். 


வாட்ஸப்பில் சிக்னல்

கிடைத்தால் வார்த்தையும்

நகரும். 


வாகனம் நகர எரி

பொருள் தேவை 


வார்த்தைகள் நகரவோ 

பொருள் (விஷயம்) தேவை 


முன்னதுக்கு காசு வேணும்

பின்னதுக்கு மனசு வேணும் 


சும்மா தோணிய தத்து பித்து 😎 


அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா

27-05-2019

உலக சகோதர தினம்

 உலக சகோதர தினம் 


சகோதரனாகப் பிறந்தவன்

எப்பவும் தன் சம்சாரத்துடன்

சுமூகமாகவே இருப்பான். 


அவர்கள் படும் வலி தெரியும்

அனுசரித்து செல்லக் கூடிய

வழியும் தெரியும். 


இரண்டாவது தந்தையாக

இல்லத்தை வழி நடத்தும்

ஆண்மகனும் இவனே. 


உடன் பிறந்த சகோதரன்

உடனிருந்தால் ஒவ்வொரு

பெண்ணும் மஹாராணியே. 


ஒவ்வொரு ஆண் நண்பனும்

சகோதரனாகவேப் பழகினால்

அப்பெண்ணிற்கு பாதுகாப்பே. 


அண்ணனோடு பிறந்த தம்பி

தம்பியோடு பிறந்த அண்ணன்

முதலில் நண்பர்களே ஆவர். 


தம்பி உடையான் படைக்கஞ்சான்

அண்ணன் உடையான் எதற்குமே

அஞ்சான். 


இன்று உலக சகோதர தினத்திற்காக

எழுதிய வரிகள் ..... 


அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா

24.05.2019 

தேவதூதன்

 தேவதூதன் 


ஆரவாரமிக்க

ஆலயம் எமது

அமைதி தவழும்

தேவாலயம் தமது. 


பல வண்ணங்களில்

ஆடைகள் எமதெனில்

பளிச் வெண்ணிறத்து

ஆடைகள் தமக்கு. 


விண்ணதிரும் வேத 

கோஷங்கள் எமக்கு

விவிலியம் உரைக்கும்

வேதாகமம் தமக்கு. 


மாதா கோவிலின்

மணியோசை கேட்க

மனதில் இனம் புரியா

பேரமைதி எழும்பும். 


ஆதிகாலந் தொட்டே

எம்முடைய பாரத தேசம் 

அனைத்து மதத்தையும்

அரவணைத்து செல்லும். 


அந்நிய தேசத்து மதம்

என்ற வேறுபாடில்லை

ஆங்கிலேயர்கள் மதம்

என்ற பாகுபாடுமில்லை. 


அற்ப விஷயங்களுக்கு

மதம் மா(ற்)றும் நிலை

காணும் போதெல்லாம்

கண்ணீர் வருகிறது. 


அரசியல் ஆதாயத்திற்கு

மக்களை திசை திருப்பும்

மானிடர்களைப் பார்க்க

மனம் வெதும்புகிறது. 


செல்லும் வழிகள் பல

ஆயினும் முடிவாய்ச்

சேரும் இடமென்பது

ஒன்று தான். 


மதங்கள் பலவாய்

பிரிந்திருந்தாலும்

போற்றும் இறைவன்

ஒன்று தான்.. 


ஓம் சாந்தி ஓம் சாந்தி.. 


🙏🙏🙏🙏🙏🙏🙏 


அன்பன், சிதம்பரம்

ஆர். வீ. பாலா

25.12.2021



புத்தாண்டு

 புத்தாண்டு 


ஆறிரு திங்கள் முடிந்து

அடுத்ததோர் ஆண்டும்

பிறக்குது. 


அவணியில் புதிதாய்

ஜனனமும் மரணமும்

நிகழுது. 


இயற்கை நியதியில்

பருவ நிலை மாற்றம்

நடக்குது. 


முயற்சி ஏதுமில்லாது

மாந்தர்தம் அகவையும்

ஏறுது. 


நதியின் மேல் விழுந்து

இலை நகர்வது போல

நம் வாழ்க்கை கழியுது. 


இடைப்பட்ட காலம்

உள்ளுக்குள் ஏனோ

இத்தனை சிக்கல் ? 


எதுவும் நம் கையில்

இல்லாதிருப்பினும்

எத்தனை பூசல்கள் ? 


பயம் பதட்டம் மனதில்

அழுத்தமென நித்தம்

உழல்வதேன் ? 


சித்தத்தை சிவனிடம்

சமர்ப்பித்து அன்றாடக்

கடமையும் செய்வோம். 


அவனின்றி ஓரணுவும்

அசையாது என்பதிலும்

திடமாக இருப்போம். 


அன்பன், சிதம்பரம்

ஆர்.வீ. பாலா

27.12.2021


பயணம்

 பயணம் 


ஒரே இடத்தில்

இருந்தால் அது

குட்டை. 


ஓடிக்கொண்டே

இருந்தால் அது

ஓடை. 


குட்டையின்

தண்ணீர் என்றும்

குடிக்க முடியாது. 


ஓடையின் 

தண்ணீரையே

குடி(ளி)க்க இயலும். 


பயணப்படும்

வரையிலேயே நாம் 

சிவம் ஆகிறோம். 


பயணம் நின்று

போனாலோ நாம்

சவம் ஆகிறோம். 


தொடர் தேடல்

மட்டுமே இன்னும்

இவ்வுலகை ஜீவித்து

வைத்துள்ளது. 


கூடலும் ஊடலும்

தேடலும் ஓடலும்

கலந்த மாயையே

இவ்வுலகம். 


இதுவே ஆறறிவுக்கும்

அதன் கீழுள்ளறிவுக்கும்

இருக்கின்ற மாபெரும்

வேறுபாடு. 


🤗🤗🤗 


அன்பன், சிதம்பரம்

ஆர்.வீ. பாலா

28.12.21



புத்தாண்டு

 புத்தாண்டு 


விடிய விடிய

வீதியிலே திரிவர்

வான வேடிக்கைகள்

வெடித்து மகிழ்வர். 


வாட்ஸப் வழிந்தோட

வாழ்த்தை பொழிவர்

வருடத்தின் முடிவில்

உறக்கம் தொலைப்பர். 


காதலிக்கும் ஜோடிகள் 

கடற்கரையில் சேர்ந்து

ஆண்டு தொடக்கத்தை

ஆவலுடன் நோக்குவர். 


வாலிப சிட்டுகளோ

வாகனத்தில் சுற்றி

விசித்திரமாய் தமது

பொழுதை போக்குவர். 


ஆறிரு திங்களில்

சாதித்தது எத்தனை

அட்டவணை போட்டு

அலசுதல் வேண்டும். 


ஆங்கில மோகத்தில்

அமுங்கி விடாமல் நம்

கலாசார பண்பாட்டை

காத்திடல் வேண்டும். 


அர்த்த ராத்திரியில்

ஆலயம் திறக்காமல்

ஆகம விதிமுறையை

மதித்திடல் வேண்டும். 


தீயவை ஒழி(ந்)த்திட

திடம் கொள வேண்டும்

புத்தாண்டு கொள்கை

இடம் பெற வேண்டும். 


வரும் நாட்களில்

வற்றாத வளமும்

குன்றாத நலமும்

பெற வாழ்த்துகள். 


🌹💐🌷🌺🌻🌷💐 


அன்பன், சிதம்பரம்

ஆர்.வீ. பாலா

31.12.2021











வைகுண்ட ஏகாதசி

 வைகுண்ட ஏகாதசி 


மகேசன் வரம் பெற்று

மாளாது இன்னல் தந்த

அசுரர்களை வதைத்திட

எடுத்த அவதாரமே.. 


மந்தார மலை கடந்து

கலசத்தில் வெளி வந்த

அமிர்தத்தை பகிர்ந்திட்ட

மோகினி உருவமே. 


மச்சமாய் கூர்மமாய்

வராக நரசிம்ஹமாய்

வாமன பரசுராம ராம

பலராம கண்ணனே.. 


மண்ணுலக மாந்தரை

ரக்ஷிக்க வேண்டியே

வையத்துள் பிறக்கும்

வைகுண்ட வாசன் நீ.. 


காண்டீபனுக்கு அன்று

கீதையும் உபதேசித்தாய்

பார்த்தசாரதியாய் போர் 

நடுவிலும் நின்றாய்.. 


அதர்மத்தை அழித்திட

அவதாரமும் எடுப்பாய்

தர்மத்தைக் காத்திட நற்

பாதையும் வகுப்பாய்.. 


ஸர்வம் 

ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 


அன்பன் சிதம்பரம்

ஆர்.வீ. பாலா

13.01.2022








எங்கள் அம்மா

 எங்கள் அம்மா 


அம்மா என்பதன்

அர்த்தம் வேண்டி

அகராதியை நான்

ஆராய்ந்தேன்.. 


ஆதார சக்தியாய்

அகிலத்திலிருப்பது

அம்மாவின் அன்பே

என்றுணர்ந்தேன்.. 


ஓரறிவு முதல்

ஆறறிவு ஆயினும்

தாயிற் சிறந்ததோர்

உறவுமில்லை.. 


ஓங்கார ரூபியாம்

ஆதிசங்கரரும் தன்

தாய்க்கு கடமையை

தவிர்க்கவில்லை.. 


எத்தனை உயரத்தை

எட்டிப் பிடித்தாலும்

எவையும் நம் தாய்க்கு

ஈடாகுமா ? 


எழுபது அகவையை

கடந்த பின்னாலும்

பொழியும் பாசத்தைப் 

போலாகுமா ? 


இன்னும் தமக்கு

ஆண்டுகள் ஐம்பது

அருள ஆண்டவனை

வேண்டிடுவேன். 


என்றும் நலமுடன்

எம்மை வழிநடத்தி

காத்திட வேண்டியே

பணிந்திடுவேன்.. 


🙏💐🌷🌹🥀🌼🙏 


அன்புடன் பாலு...

10.01.2022





கேச நேசம்

 கேச நேசம் 


ஆணாகட்டும்

பெண்ணாகட்டும்

கேசத்தின் மேலே

எத்தனை காதல்.. 


வழுக்கை விழுந்தால்

வயோதிகம் வந்ததாய்

வேதனைப் படுவோர்

அதிகம் உண்டு.. 


நிலம் பார்த்து நடந்த

நீள வேணிகளைக்

காண்பதென்பது நம்

கண்ணிற்கு அழகு.. 


அடர்த்திய தாடி மீசை

ஆணுக்கழகென்றால்

அழகிய சுருள் முடியோ

பெண்ணிற் கழகாகும். 


பின்னலை முடிச்சிடும்

பெண்டிரும் அழகு கருங்

கூந்தலை காற்றில் விடும்

கன்னியரும் அழகு.. 


கேசத்தை முன்னே விட்டு

கெத்தாக நடையும் போட்டு

காளையரை கவிழ்த்திடும்

கில்லாடிகளும் அழகு.. 


தலைக்கு குளித்த பின்னே

தண்டுவடத்தில் தண்ணீர்

சொட்டும்படியாய் நடக்கும்

சுந்தரிகளும் அழகு.. 


வாரத்தில் இரு முறையே

வழிய எண்ணை வைத்து

சீயக்காய் குளியல் போட

சிக்கில்லா முடி வளரும்.. 


சந்தையில் விற்கப்படும்

ஷாம்பூ வகையறாக்கள்

கூந்தலின் பராமரிப்பை

சீர்குலையச் செய்யும்.. 


☺️😀😋😂 


கேச நேசன் பாலா

06.01.2022









Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...