Search This Blog

Saturday, June 6, 2020

கானா காதல்

கானா காதல்

மிஸ்ஸான ஒன்ன
மிஸ்ஸஸாக்கனும்
மிஸ்ஸாகாம இருக்க
ப்ராமிஸெடுக்கனும்.

டிஸ்ப்யூட்டு இருந்தா
காம்ப்ரமைஸு தான்
க்வாரலிங் போட்டா
லைஃப் வேஸ்ட் தான்.

லவ்வுக்குள்ள நாம
கவ்விக் கிடக்கனும்
ஜவ்வு போல எப்பவும்
ஒட்டி இருக்கனும்.

நிறத்த பாத்த காதல்
நெலைச்சி நிக்காது
குணத்த பாத்த காதல்
களைஞ்சி போகாது.

பிடிச்சிருந்தா எனக்கு
ஒரு லைக்கு வேணுமே
கட்டிப் புடிச்சிகிட்டு சுத்த
ஒரு பைக்கு வேணுமே..

கானா பாலா 😁😁😁














Tuesday, June 2, 2020

அக்ரஹாரம்

அக்ரஹாரம்

ஓங்கார ஒலியில்
ஒலிக்கும் வீதிகள்
வெண்காவி பட்டை
வரைந்த சுவர்கள்.

இல்லத்தின் முன்னே
புள்ளிக் கோலங்கள்
முற்றத்தின் நடுவே
இட்ட வடாகங்கள்.

சந்தியாவந்தனத்தை
நிஷ்டையுடன் செய்து
சத்திய நெறி வழுவாத
சிரேஷ்டர்கள்.

கிணற்று நீரினை
தலைக்கு பாய்ச்சி
கூந்தலை உலர்த்தும்
பெண்டிர்கள்.

மாலை நேரங்களில்
வீட்டிற்கு வெளியே
விளக்கு மாடத்தில்
தீப ஒளிகள்.

வீட்டிற்கு நடுவினிலே
துளசி மாடம் வைத்து
அரளி செம்பருத்தியென
வண்ணமிகு மலர்கள்.

சாம்பிராணி வாசம்
நறுமணம் கமழ்ந்து
இல்லமே கோவிலாய்
இருப்பது சிறப்பு.

இருபுறமும் பரந்த
திண்ணையில் சாய
சொர்க்கத்தின் சுகம்
நிச்சயமாய்க் கிட்டும்.

உயர் சிந்தனையுடன்
உள்ளமும் இல்லமும்
அக்காலத்திய அந்தண
அக்ரஹாரங்கள்.

பழைய நினைவுகளுடன்
அன்பன், சிதம்பரம்
ஆர்.வீ. பாலா
குருவைய்யர் அக்ரஹாரம்
02.06.2020

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...