Search This Blog

Tuesday, February 27, 2018

சங்கரா

சங்கரா

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர

இருள்நீக்கியில் அவதரித்த
இறை மூர்த்தியே
இந்து சமயத்தை காக்க வந்த
மறை மூர்த்தியே

சோதனைகள் பல கடந்த
சிவ மூர்த்தியே
சைவத்தை மீட்டெடுத்த
அருள் மூர்த்தியே..

சந்நியாச தர்மம் ஏற்ற
சுப்ரமணியரே
சனாதன தர்மம் காத்த
சச்சிதானந்தமே..

ஆதி சங்கரர் வழி வந்த
அருளானந்தமே
அத்வைதம் காக்க வந்த
ஆதிமூலமே..

ஜன கல்யாண் தோற்றுவித்த
ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமியே
ஜெகமெல்லாம் ரக்ஷிக்க வந்த
ஜகத் குருவே..

சரணம் சரணம் சரணம்..

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
28.02.18

அபிஷேகம்

அபிஷேகம்

அம்மையப்பனுக்கு
அபிஷேகம், இன்று
ஆனந்த கூத்தனுக்கு
அபிஷேகம்..

மாசி மாதத்தின்
அபிஷேகம், இன்று
மகேஸ்வரனுக்கு
அபிஷேகம்..

தூக்கிய திருவடிக்கு
அபிஷேகம், இன்று
தேவாதி தேவனுக்கு
அபிஷேகம்..

அர்த்த நாரீசனுக்கு
அபிஷேகம், இன்று
ஆலகால மூர்த்திக்கு
அபிஷேகம்..

பிரணவ ரூபனுக்கு
அபிஷேகம், இன்று
பஞ்ச சபைகளிலும்
அபிஷேகம்..

முக்கண் மூர்த்திக்கு
அபிஷேகம், இன்று
மூவுலக நாயகனுக்கு
அபிஷேகம்..

உமா மகேஸ்வரனுக்கு
அபிஷேகம், இன்று
ஊர்த்துவ தாண்டவத்திற்கு
அபிஷேகம்..

கயிலாய நாதனுக்கு
அபிஷேகம், இன்று
கனக சபாபதிக்கு
அபிஷேகம்..

சிவலிங்க மேனிக்கு
அபிஷேகம், இன்று
சர்வேஸ்வரனுக்கு
அபிஷேகம்..

தேவார நாயகனுக்கு
அபிஷேகம், இன்று
திருக்கோயில்களிலே
அபிஷேகம்..

நடனத்து நாயகனுக்கு
அபிஷேகம், இன்று
நடராஜ பெருமானுக்கு
அபிஷேகம்..

ஆடல் வல்லானின்
அபிஷேக நிகழ்வை
அகம் குளிர காணவே
சிவாலயம் செல்வோம்
சிவனடியைப் பணிவோம்..

பொற்பதம் நடஞ் செய்கின்ற
பூங்கழல் போற்றி போற்றி...

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

திருச்சிற்றம்பலம்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
28.02.18

கோவாலு

கோவாலு

கோவாலு கோவாலு
காசுக்காக கூவும் கோவாலு

கூட்டணி மாற்றும் கோவாலு
கொள்கையில்லா கோவாலு
கூட்டாளி இல்லா கோவாலு
கோமாளியா நீ கோவாலு

கோவாலு கோவாலு
காசுக்காக கூவும் கோவாலு

கட்சியை விற்கும் கோவாலு
காட்சிப் பொருளாம் கோவாலு
கண்டதையும் பேசிடும் கோவாலு
கவர்ச்சியாய் கூவிடும் கோவாலு

கோவாலு கோவாலு
காசுக்காக கூவும் கோவாலு

சட்டம் படித்த கோவாலு
சறுக்கி விழறியே கோவாலு
சொந்த புத்தியில்லா கோவாலு
சொரணையுமில்லா கோவாலு

கோவாலு கோவாலு
காசுக்காக கூவும் கோவாலு

புலியினை ஆதரிக்கும் கோவாலு
போராட அறைகூவும் கோவாலு
பொய் முகம் போர்த்திய கோவாலு
போய் சேராத இடமில்லை கோவாலு

கோவாலு கோவாலு
காசுக்காக கூவும் கோவாலு

சிறுபான்மையர்க்குதவும் கோவாலு
சொந்த மதம் வெறுக்கும் கோவாலு
அந்நிய கைக்கூலியா நீ கோவாலு
அனைவரும் அறிவோமே கோவாலு

கோவாலு கோவாலு
காசுக்காக கூவும் கோவாலு

நீ சேரும் இடமெல்லாம் கோவாலு
விளங்காமப் போகுதே கோவாலு
தேர்தலில் நின்றாலே கோவாலு
தோற்றுப் போவாயே கோவாலு

கோவாலு கோவாலு
காசுக்காக கூவும் கோவாலு

நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலைகெட்ட மனிதரை
நினைந்து விட்டால் எமது
நெஞ்சு பொறுக்குதில்லையே...

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

கோவாலு

கோவாலு

கோவாலு கோவாலு
காசுக்காக கூவும் கோவாலு

கூட்டணி மாற்றும் கோவாலு
கொள்கையில்லா கோவாலு
கூட்டாளி இல்லா கோவாலு
கோமாளியா நீ கோவாலு

கோவாலு கோவாலு
காசுக்காக கூவும் கோவாலு

கட்சியை விற்கும் கோவாலு
காட்சிப் பொருளாம் கோவாலு
கண்டதையும் பேசிடும் கோவாலு
கவர்ச்சியாய் கூவிடும் கோவாலு

கோவாலு கோவாலு
காசுக்காக கூவும் கோவாலு

சட்டம் படித்த கோவாலு
சறுக்கி விழறியே கோவாலு
சொந்த புத்தியில்லா கோவாலு
சொரணையுமில்லா கோவாலு

கோவாலு கோவாலு
காசுக்காக கூவும் கோவாலு

புலியினை ஆதரிக்கும் கோவாலு
போராட அறைகூவும் கோவாலு
பொய் முகம் போர்த்திய கோவாலு
போய் சேராத இடமில்லை கோவாலு

கோவாலு கோவாலு
காசுக்காக கூவும் கோவாலு

சிறுபான்மையர்க்குதவும் கோவாலு
சொந்த மதம் வெறுக்கும் கோவாலு
அந்நிய கைக்கூலியா நீ கோவாலு
அனைவரும் அறிவோமே கோவாலு

கோவாலு கோவாலு
காசுக்காக கூவும் கோவாலு

நீ சேரும் இடமெல்லாம் கோவாலு
விளங்காமப் போகுதே கோவாலு
தேர்தலில் நின்றாலே கோவாலு
தோற்றுப் போவாயே கோவாலு

கோவாலு கோவாலு
காசுக்காக கூவும் கோவாலு

நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலைகெட்ட மனிதரை
நினைந்து விட்டால் எமது
நெஞ்சு பொறுக்குதில்லையே...

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

பொன்னாடை

பொன்னாடை

புகழ்ச்சிக்கு பலியாக்கி
ஆடை போர்த்துவர் அதை
பொன்னாடை எனக்கூறி
சபையிலேற்றுவர்..

அனுதினமும் அரசியலில்
அரங்கேறுது, பிறரை
ஆதரிக்கும் சின்னமாக
அமர்க்கலமாகுது..

வாழ்த்தினைப் பரிமாற
பூங்கொத்தினைத் தருவர்
காரியத்தை சாதித்திட
பொன்னாடைப் போர்த்துவர்..

பகட்டாக  வெளித்திரியும்
பன்னாடைகள் பலர் கூட
பொன்னாடை போர்த்துவதில்
புளகாங்கிதம் கொள்கின்றர்..

மஞ்சள் பொன்னாடை
மூத்த தலைவருக்கு
சிகப்பு பொன்னாடை
கம்யூனிஸ்ட்டுகளுக்கு..

பச்சை பொன்னாடை
புரட்சித் தலைவிக்கு
கருப்பு பொன்னாடை
எதிர்ப்பு காட்டுவதற்கு..

கவர்ந்திழுக்கும் விதமான
கூஜா தூக்கிகள் செயலால்
பொன்னாடை போர்த்துவது
ஓர் சடங்காகிப் போனது..

தலைவர்க்கு போர்த்தும்
பொன்னாடை செலவில்
எளியோர்க்கு உதவிடவே
புண்ணியமாய்ப் போகும்..

போர்த்துகின்ற ஆடையினை
விலை வைத்து விற்று விடும்
வேடிக்கை அவலம் கூட இங்கு
வாடிக்கை செயலாகும்..

சும்மா ஒரு மாற்றுக்காக
பொன்னாடைக்கு ஓர் பா
வடித்துள்ளேன் 😊😊

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
27.02.18

Monday, February 26, 2018

மரணமே ம ரணமே

மரணமே ம ரணமே

மாரடைப்பால் மரணம்
என்றார்கள், பின்னர்
மதுவருந்தி விழுந்ததே
காரணம் என்கிறார்கள்.

எது எப்படியோ
சுய நினைவை
இழக்கச் செய்யும்
சோம பானம் எதற்கு ?

பணம் புகழ் அந்தஸ்து என
அனைத்துமிருந்தும் தனியே
அந்நிய நாட்டில் இன்னுயிரை
இழந்தது காலக் கொடுமையே..

குடிபோதை தலைக்கேறி
குளியல் தொட்டியில் இடறி
மூச்சுத் திணறி எம் தேவி
மாண்டு போனாராம்..

விஷயம் கேட்டவுடனே
விம்மிப் புடைத்த எம் நெஞ்சு
வேதனையில் வாடுவதை
வேறெவரிடம் போய் சொல்வது ?

சரக்கிற்கு அடிமையாகும்
சந்ததிகள் நிலையெண்ணி
செய்தி கேட்ட போதே எமக்கு
சோகமாய்ப் போனது..

கவலையை மறந்திட
குஷியினை பகிர்ந்திட
எதற்க்கெடுத்தாலும்
குடியினை நாடுவர்..

அலுவலகத்தின் டென்ஷன்
அளவுக்கு மீறிய நெருக்கடி
அவரவர் கூறிடும் காரணம் வேறு
அனைவர் நாடும் மதுவோ ஒன்று..

பீர், விஸ்கி, பிராந்தி, ஒயின்
பெயர் பல கொண்டிருந்தாலும்
போதையேற்றும் இவை யாவும்
சாராயத்தின் குடும்பமே..

சோஷியல் ட்ரிங்கிங்
அக்கேஷனல் ட்ரிங்கிங் என்று
ஆரம்பமாவது தெரிவதில்லை, பின்
அடிமையாகுவதும் புரிவதில்லை..

மாதுவின் மரணம்
மதுவால் மரணம்
எதுவானாலும் நெஞ்சு
பதற வைக்கும் மரணம்
ம ரணமே ம ரணமே ம ரணமே..

நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்ல
குடிமக்களாக இருப்போம்
குடி மக்களாக வேண்டாம்..

வருத்தத்துடன்....

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
26.02.18

Sunday, February 25, 2018

கண்மணியே

கண்மணியே

வெள்ளைத் தோலுக்கே
மவுசு கூடியிருந்த போது
மாநிறமாய்ப் பிறந்திருந்தும்
மாநிலம் தாண்டி வென்றாயே..

பள்ளிக்கு சென்றதில்லை
பாடங்களும் பயின்றதில்லை
நுனி நாக்கில் ஆங்கிலமும்
நாவில் நவின்றதில்லை..

பம்பாய்க்கு வரும் போது
ஹிந்தியும் தெரிந்ததில்லை
பாலிவுட்டை ஆக்கிரமிக்க
துணிவோ குறைந்ததில்லை..

முதல் பாதியில் இவள்
கோலிவுட்டில் கோலோச்சி
பிற்பாதியில் மிடுக்காய்
பாலிவுட்டில் நடையிட்டாள்..

ஐம்பது ஆண்டுகளுக்குள்
முன்னூறு திரைப்படங்கள்
பல்வேறு மொழிகளிலும்
பதவிசான பாத்திரங்கள்..

நடிகர்களுக்கு நிகராக
நடிகைக்கும் பெயர் தந்த
நல்ல பல திரைப்படங்கள்
நாயகியே உனக்கு கிட்டியது..

அழகிற்கு அழகூட்ட நீ செய்த
அறுவை சிகிச்சைகள் உன்
ஆயுளை அபகரித்துள்ளதை
அறிவாயோ கண்மணியே ?

வானத்து நிலவும் கூட
மாதத்தில் தேய்வதை நாம்
இயற்கையின் நியதியென
ஏற்கத்தான் செய்கிறோம்..

திரைவானில் ஜொலிக்கும்
நட்சத்திரத்தின் பொலிவும்
வயதான பின்னே தொய்வதை
ஏற்க மறுக்கிறோம்..

இயற்கைக்கு மாறாக
செயற்கையை நாடிடவே
ஏற்படும் விளைவுகள்
பேரிழப்பைத் தந்திடும்..

அழகுப் பதுமைகளாக மட்டும்
பெண்களைக் காணும் வரையில்
இம்மாதிரி இழப்புகள் தொடர்ந்து
இருக்கவே செய்யும்..

வருத்தத்துடன்,

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
26.02.18

மயிலே மயிலே

மயிலே மயிலே

உலகில் பிறந்த
ஒவ்வொரு உயிரும்
ஒருநாள் உலகைப்
பிரியும்..

அகிலம் முழுவதும்
அனுதினம் உயிர்கள்
அமைதியாய் அடங்குது
தெரியும்..

மனதைக் கவர்ந்த
மக்களின் மறைவு
மாளாத் துயரத்தில்
தள்ளும்..

உற்றார் உறவினர்
பெற்றவர் மறைவு
பெரும் துயரத்தில்
ஆழ்த்தும் சகஜம்..

திரையில் நட்சத்திரமாய்
ஜொலித்தவள் இனிமேல்
வானிலும் நட்சத்திரமாய்
ஜொலிப்பாள்..

தோழியாக சகோதரியாக ஏன்
தாயாக ஒரு சிலரால் மட்டுமே
நடிக்க முடியும், அந்த மிகச் சிலரில்
ஸ்ரீதேவியும் ஒருவர்..

கவர்ச்சிக் கன்னியாக இவரை
கனவிலும் காண இயலாது
கண்ணிலும் நடிப்பு காட்ட
கண்ணே இவராலே இயலும்..

நிழலில் ஜோடி போட்ட மாதிரி
நிஜத்திலும் சேர்ந்திருந்தால்
எங்கள் உலக நாயகன் இப்படி
ஊர் சுற்றியிருக்க மாட்டார்..

அஜீத் - ஷாலினி
சூர்யா - ஜோதிகா
இவர்க்கு முன்னோடியாக
கமல் - ஸ்ரீதேவி

இப்படி பலவிதமாய் எமக்கு
எண்ணத் தோன்றுகிறது.

வடநாட்டில் வாக்கப்பட்டு
தென்னாட்டை வஞ்சித் தாயே..

கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..

அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்

ராரிரோ... ஓராரிரோ…

ராரிரோ… ஓராரிரோ

ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதிலொரு அமைதி

நீயோ கிளிப் பேடு பண்பாடும்
ஆனந்த குயில் பேடு

ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது

கண்ணே கலைமானே
கன்னி மயிலென கண்டேன்
உனை நானே

காதல் கொண்டேன்
கனவினை வளர்த்தேன்

கண்மணி உனை நான்
கருத்தினில் நிறைப்பேன்

உனக்கே உயிரானேன்
என்னாளும் எனை நீ மறவாதே

நீ இல்லாமல் எது நிம்மதி
நீதான் என்றும் என் சன்னிதி 

கண்ணே கலைமானே
கன்னி மயிலென கண்டேன்
உனை நானே

அந்திப் பகல் உனை நான்பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்

ராரிரோ... ஓராரிரோ…

ராரிரோ… ஓராரிரோ…

ராரிரோ.. ஓராரிரோ…

ராரிரோ.. ஓராரிரோ…

கவியரசரின் கடைசி பாடல் வரிகளை
இசைஞானியின் மெல்லிய இசையில்
கண்ணை மூடி கேட்டுக் கொண்டிருக்க
காற்றினில் கரைந்து போனாயே..

என்றும் மயிலின் நினைவலைகளில்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
25.02.18

Saturday, February 24, 2018

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

குழந்தை நட்சத்திரமாய்
திரைத்துறையில் வந்து
கோபுரமாய் நடிப்புலகில்
கோலோச்சிய மயிலே

நீ பிறந்த சிவகாசியின்
பட்டாசு போல நடிப்பில்
வெடித்து வெளுத்து
வாங்கிய மயிலே

ஆரம்ப காலங்களில்
ரஜினியும் கமலும் உன்
நடிப்புக்கு ஈடுகட்டவே
திணறினாராம் மயிலே

கமலுக்கும் ரஜினிக்கும்
சிறந்த திரை ஜோடியாக
இன்றளவும் உன் பெயரே
ஓங்கி ஒலிக்குது மயிலே

தென்னிந்தியாவில்
தன்னிகரற்று நடித்து
வட இந்தியாவிலும்
வாகை சூடிய மயிலே

ஸ்ரீதேவிக்கு முன்
ஸ்ரீதேவிக்கு பின் என
பாலிவுட்டின் படங்கள்
பிரிக்கப்படும் மயிலே

எத்தனை திரைப்படங்கள்
எத்தனை முக பாவங்கள்
என்றென்றும் எம்மை விட்டு
ஏமாற்றிச் சென்றாயே மயிலே

சிம்ம சொப்பனமாக இருந்த
சிவாஜி கணேசனுடன் சேர்ந்து
சவாலான நடிப்பை மிகவும்
அசால்ட்டாக செய்தாயே மயிலே

புதிதாய் நடிக்க வரும் நடிகைகள்
தமது இலக்காக உனது பெயரை ஓராயிரமுறை உச்சரிக்க கேட்டது
உனக்குத் தெரியுமா மயிலே

குழந்தைத்தனமான உனது
கொஞ்சும் சிரிப்பில் கோடானு
கோடி ரசிகர்களை கட்டிப் போட்ட
குட்டி சாவித்திரி நீ மயிலே

16 வயதினிலே மயிலும்
மூன்றாம் பிறை விஜியும்
எவராலும் நடிப்பில் ஈடு
செய்ய இயலாது மயிலே

மற்றவர்களைப் பார்க்க வெறும்
நடிப்பாகவே தெரியும், ஆனால்
உன்னைத் திரையில் பார்க்க நீ
வாழ்வதாவே தெரியும் மயிலே

இந்தியாவில் நீ இறக்க உன்
ரசிகர்கள் விடமாட்டார் என்று
அயல் நாட்டில் உன்னுயிரை
எமதூதன் எடுத்தானோ மயிலே

சின்னக் கண்ணன் அழைக்கிறான்
இளமையெனும் பூங்காற்று
சின்னஞ்சிறு வயதில்
வசந்தகால நதிகளிலே
சிப்பியிருக்குது முத்துமிருக்குது
எந்தப் பூவிலும் வாசம் உண்டு
தேவி ஸ்ரீதேவி உன் திருவாய்
மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா

இம்மாதிரி நூற்றுக்கணக்கான
பாடல்களை எம் நினைவில் ஏந்தி
மிச்ச நாட்களை உன் நினைவில்
நகர்த்துவோம் மயிலே

காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே
அலைபோல நினைவாக
சில்லென்று வீசும் மாலை நேர
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே

செந்தூரப்பூவே
செந்தூரப்பூவே
சில்லென்ற காற்றே
மயிலு எங்கே எம் மயிலு எங்கே
நீ கொஞ்சம் சொல்லாயோ 😢😢

ஆழ்ந்த இரங்கல்களுடன்
அவரது ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கும் கோடானு கோடி
ரசிகர்களில் ஒருவனாக...

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
25.02.18

சிதம்பரம்

சிதம்பரம்

சேர்த்து வைத்த
சொத்தையெண்ணி
சொக்கித்தானே
போகின்றேன்..

கார்த்தி என்னும் ஓர்
மகனுக்கு கோடிகள்
குவித்ததையெண்ணி
வியக்கின்றேன்..

அரசியல் களத்தில்
அடியெடுத்து வைத்து
அத்தனையையும்
அமுக்க பார்க்கின்றீர்..

சிவகங்கை சீமையில்
செல்வத்தில் பிறந்தும்
ஊழல்கள் புரிந்து
மாட்டிக் கொண்டீர்..

உள்ளத்தில் விஷத்தோடு
ஊர் மக்களை ஏமாற்ற
வெள்ளையாடையுடுத்தி
உலாவுகின்றீர்..

உலகம் முழுமையிலும்
ஓராயிரம் சொத்துக்கள்
உட்கார்ந்து கணக்கிடவே
வெளிவருமே பிணக்குகள்..

சாரதா சிட்பண்ட் மோசடியில்
தம் மனைவியாரின் ஊழலுக்கு
தடுமாறி வழக்காடியும் தம் பதில்
திருப்தியாயில்லை..

எல்லையில்லாது
கொள்ளையும் அடிக்க
வாகாக கிட்டியது
ஆட்சியும் அதிகாரமும்..

கால் நூற்றாண்டாக
காங்கிரஸ் கட்சியிலே
மத்திய அமைச்சராக
பெரும் பதவி வகித்தீரே..

வழக்கறிஞராக வாதாடி
சேர்த்த பணம் தமது
வருங்கால சந்ததிக்கு
போதாதென நினைத்தீரோ..

வெறுங்கையோடு
வானகமும் ஏகும் பொது
ஆறடி நிலம் கூட நமக்கு
சொந்தமாக வாராது..

கோவில் என்றாலே எங்கள்
சிதம்பரம் தான், அது போல
காங்கிரஸ் ஊழல் என்றாலே
சிதம்பரம் தான்.

வருத்தத்துடன் - வேதனையுடன்

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
24.02.18

ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி

ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி

துங்கபத்ரா நதிக்கரையில்
துயில் கொண்ட தூயவரே
துயர் யாவும் தீர்த்து வைக்கும்
தயை கொண்ட மா தவரே

புவனகிரியில் அவதரித்த
புண்ணிய மூர்த்தி, இவர்
பக்த பிரகலாதன் அம்சமாய்
பிறந்த கீர்த்தி..

தமிழகத்தில் அவதரித்து
ஆந்திரத்தில் சித்தியாகி
கன்னடர்கள் துதிபாடும்
காருண்ய மூர்த்தி..

பதினாறாம் நூற்றாண்டில்
வாழ்ந்தவராம், பக்தர்கள்
குறை தீரத்து அற்புதங்கள்
பல புரிந்தவராம்..

வேங்கட நாதனாய்
வேதம் பல பயின்று
ஸ்ரீ ராகவேந்திரராய்
சந்நியாசம் பெற்றார்..

மத்வ மடத்திற்கு பெரும்
பொறுப்பும் ஏற்று பின்னர்
மந்திராலயத்தில் துறவு
வாழ்வும் கொண்டார்..

ஜகமெலாம் ரக்ஷிக்க
ஜனித்த மூர்த்தி
ஜீவசமாதி கொண்டு
அருளும் மூர்த்தி..

மந்திராலயம் சென்று
மகானை வழிபடுவோம்
பிருந்தாவனம் கண்டு
பிறவிப்பயன் பெற்றிடுவோம்..

பூஜ்யாய ராகவேந்த்ராய
சத்ய தர்ம ரதாயச |
பஜதாம் கல்பவ்ருக்ஷாய
நமதாம் காமதேனவே ||

ஸ்ரீ குருப்யோ நம:
ஸ்ரீ ராகவேந்த்ராய நம:

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
24.02.18

ஆளுமையின் பிறந்த நாள்

ஆளுமையின் பிறந்த நாள்

அம்மா இருந்த வரை
அடங்கியிருந்தவர்கள்
ஆட்டம் போடுவதை
அனைவருமே அறிவோம்..

சாதிவாரியாக நித்தம்
மக்களைப் பிரித்தாள
மூடர்களும் வளர்வதை
மாநிலமே அறியும்..

சிறுபான்மை காவலராக
தெருவெல்லாம் கட்சிகள்
சிதறு தேங்காய்ப் போல
தமிழகத்தில் கோஷ்டிகள்..

சிங்கத்தின் குகைக்குள்ளே
பம்மிக் கிடந்தவர்கள் இன்று
குரலிட்டு திரிவதெல்லாம்
வேடிக்கையாய் இருக்குதம்மா..

உமது வெண்கல சிலை திறந்த
வெள்ளை வேட்டிகள் எல்லாம்
வெறும் வாய் கிழியப் பேசுவது
வேதனையைத் தருகுதம்மா..

ஆட்சியில் நீர் நல்லவரா
அடியேன் விளம்பவில்லை
ஆயினும் தனியொருவராக
ஆளுமையாய் திகழ்ந்தீரே..

இன்னுமொரு ஜெயலலிதா
இச்ஜகத்திற்கு வருவாரோ
தைரியத்தின் துணையோடு
தமிழகத்தை ஆள்வாரோ ??

அரசியலுக்கு அப்பாற்பட்டு
அவரை மிக பிடித்தமையால்
அம்மையாரின் எழுபதாவது
பிறந்த நாளிற்கு எழுதியது..

💐💐💐💐💐💐💐💐💐

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
24.02.18

Friday, February 23, 2018

பாரும் பாரும்

பாரும் பாரும்

முதியோரைக் குறி வைத்த
மிஷினரிகளின் ஆட்டம்
முடிவுக்கு வரும் நேரம்
நெருங்கியது பாரும்..

சேவை மையம் என்னும்
சால்வைக்குள் ஒளிந்து
சதிகார செயல் பலவும்
நிகழ்த்துவதைப் பாரும்..

சிறுபான்மை என்கின்ற
சந்துக்குள் புகுந்தபடி
சீர் கெட்ட நடத்தைகளை
புரிவதையும் பாரும்..

மதவாதத்தின் பெயரில்
ஊளையிடும் ஊடகங்கள்
ஊமையாய் கிடந்திருக்கும்
அவலத்தைப் பாரும்..

பள்ளிக் கூடங்களை
மருத்துவக் கூடங்களை
சேவை மையங்களாக
காண்பிப்பதைப் பாரும்..

கல்விக்கு கட்டணம்
வசூலிப்பதை விடவும்
எலும்புக்கு விலை வைத்த
வக்கிரத்தைப் பாரும்..

எத்தனை வருடங்கள்
எங்கள் முதியோரின்
தோலைக் கிழித்து
எலும்பினை எடுத்தீரோ ?

தமிழ்த் தாய் வாழ்த்திற்கு
கூச்சலிட்ட தலைவர்கள்
தோலுரித்த கயவர்களை
காணாதது ஏனோ ?

சட்டத்தின் முன்னே
அனைவரும் சமமானால்
வேற்றுமை பார்க்காது
விரைந்து செயல் படவும்..

அக்கிரமத்திற்கும் அநியாயத்திற்கும்
அடிபணிந்து போகாமல் அனைத்து
அரசியல் கட்சிகளும் ஒன்றாய்
அட்டூழியத்தை எதிர்த்திடுங்கள்..

மதத்தின் பின்னால் மறைந்து கொண்டு
மனிதர்கள் பிணத்தை வேட்டையாடிய
சேவை (சாவு) மையங்களுக்கெதிராய்
சவுக்கடி கொடுக்கும் நேரத்தைப் பாரும்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
23.02.18

Thursday, February 22, 2018

திருவிழாக் கோலம்

திருவிழாக் கோலம்

திருவிழாக் கோலம்
தமிழகத்தில்..

தினம் ஒரு கட்சிக்கு
கொடி பிடிப்பதால்
கைச் செலவுக்கு இங்கு
கவலையில்லை..

வயிற்றுக்கு வகையாக
உணவும் உண்டு
இரவுக்கு சுருதியேத்த
சரக்கும் உண்டு..

கூட்டம் சேர்க்க இங்கு
ஆட்கள் தேவை
கோஷம் போட நிறைய
தலைகள் தேவை..

உள்ளாட்சித் தேர்தல்
நகராட்சித் தேர்தல்
மாநிலத் தேர்தல்
மத்திய தேர்தல்..

இதுமட்டுமல்லாது கூடவே
இடைத் தேர்தலும் உண்டு
இலவசங்கள் வழங்கிடும்
வைபவமும் உண்டு..

வீட்டு வேலைக்கும்
கட்டிட வேலைக்கும்
தொழிற்சாலைக்கும்
ஆட்கள் தட்டுப்பாடு..

சும்மா இருந்தாலே நிதம்
சோறு கிடைக்கும் போது
உழைத்து சாப்பிட பின்னர்
உடல் ஒத்துழைக்காது..

நாட்டின் வளர்ச்சிக்கு
தொழில் வளர்ச்சி தேவை
உற்பத்தியைப் பெருக்க
தொழிலாளர்கள் தேவை..

மேலை நாடுகளைப் போல
குறைவான கட்சிகளும்
நிறைவான கொள்கைகளும்
நாட்டிற்குத் தேவையாகும்..

புதிது புதிதாய் கட்சிகள் தொடங்காது
புத்துணர்ச்சியோடு ஒன்றாய்க் கூடி
நல்லோர் யாவரும் சபதம் எடுக்கவும்
நாட்டு நலனில் அக்கறை கொள்ளவும்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
22.02.18

Wednesday, February 21, 2018

ஐயம் அய்யம்

ஐயம் அய்யம்

ஐயத்தை அழித்து
அய்யத்தை அழுத்தி
மய்யம் எனப் பெயரிட்ட
மன்மதனே..

ஐயும் ஔவும்
ஆண்டாண்டுகளாய்
அகத்தியரின் தமிழுக்கு
அழகூட்டுபவை ஆகும்..

சங்கத் தமிழ் எழுத்தை
சாகடித்து மாற்றி எழுத
சினிமா நடிகனுக்கு
துணிச்சல் வந்தது ஏன் ?

வித்தியாசமாய் செய்வதாக
விவகாரமாக விகாரமாக
விளையாடுவதே தமது
வாடிக்கையானதோ ??

ஔவை மூதாட்டியின் அமுத மொழியாம்
வள்ளுவன் வழங்கிட்ட அழகு மொழியாம்
உ.வே.சா தாத்தா மீட்டெடுத்த மொழியாம்
உலகின் தொன்மையான முதன் மொழியாம்

ஆரம்பமே சர்ச்சையாகாமல்
தக்க விதமாய் சிந்தியுங்கள்
சேர்க்கை சரியில்லையெனில்
விளைவும் அப்படியே இருக்கும்..

காலக் கொடுமை, என் செய்வது ??

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
22.02.18

நாயகனின் பயணம்

நாயகனின் பயணம்

நாடாளும் ஆசையில்
நாயகனின் பயணம்
மதுரையில் துவங்குகின்ற
மருதநாயகத்தின் பயணம்..

நடிகனைப் பார்க்க இந்த
திரளும் கூட்டம் அவரைத்
தலைவனாக்குமா அந்த
தேர்தல் முடிவிலே தெரியும்..

திரையில் கொடிகட்டிய
தேவர் மகனே எம் மக்களுக்கு
உனை நினைத்தாலே இனிக்கும்
உன்னைப் பார்த்தாலே பரவசம்..

தமிழகத்தின் தசாவதாரமே
பாரதத்தின் பஞ்சதந்திரமே
மக்களைக் கவர்ந்த மகராசன் நீ
வேட்டையாடு விளையாடு..

ஆடு புலி ஆட்டம் ஆட வரும்
சிங்கார வேலனே உமக்கு
இளமை ஊஞ்சலாடுகிறது
சிப்பிக்குள் முத்து வருகிறது..

கருப்பு சட்டைகளுடன்
கை கோர்க்கும் உம்மை
கழகமும் கவனத்துடன்
கண்காணிப்பு செய்யும்..

காவியை எதிர்த்து வரும்
களத்தூர் கண்ணம்மாவை
நாத்திகத் தலைவர்கள் மிக
நம்பிக்கையுடன் பார்ப்பர்..

கொதித்தெழுந்த குருதிபுனலே
உயர்ந்த உள்ளம் உமக்கென்றும்
உன்னால் முடியும் தம்பி என்றும்
ஊரெல்லாம் எதிர்ப்பார்க்குது..

தில்லியின் திடீர் முதல்வரை
தோழனாக சேர்த்துக் கொண்டு
தமிழகத்து அரியணையை
தாகத்துடன் பார்க்கின்றீர்..

ஆளவந்தான் இவன் நமை
ஆள வந்தான் என்று உமது
உடன் பிறப்புகள் எல்லாம்
உற்சாகமாய்க் கூறும்..

விருமாண்டியே நடிப்பில்
உன்னைப் போல் ஒருவன்
திரையுலகிலில்லை என்பது
தெளிவான நிஜமாகும்..

நானும் ஒரு தொழிலாளி என
களம் இறங்கும் இந்தியனே
சாணக்கியனாய் நீர் சிந்தித்தால்
வேலு நாயக்கருக்கு வெற்றியே..

அரசியலை உற்று நோக்கும்
ராஜ பார்வையே, நண்பரின்
ஆன்மீக அரசியலையும் சற்று
சிந்தனையில் கொள்ளுங்கள்..

அபூர்வ ராகமாய் இன்று
அரசியலுக்குள் வரும்
அவ்வை சண்முகிக்கு
அரங்கேற்றம் நிகழுமா..

புன்னகை மன்னனே
சிகப்பு ரோசாவே நீர்
மூன்றாம் பிறை ஆவீரா
மகாநதியாய் மாறுவீரா..

மக்கள் நீதி மய்யம் என்று
வித்தியாசமாய் பெயரிட்டு
அரசியல் கட்சிக்கு புதிதாய்
ஆச்சாணி இட்டுள்ளீர்..

சகலகலா வல்லவனே இன்று
சத்யாவின் சலங்கை ஒலிக்கும்
நிழல் நிஜமாகிறது உம்மை
நினைத்தாலே இனிக்கும்..

இன்னும் எவ்வளவோ நான்
சத்யாவைப் பற்றி பலவிதமாய்
சொல்லத்தான் நினைக்கிறேன்
சூரசம்ஹாரமே..

விஸ்வரூபம் எடுக்கும்
வெற்றி விழா நாயகன்
வெல்வாரா வீழ்வாரா என
பொறுத்திருந்து பார்ப்போம்..

வாழ்க வளர்க 👍👍👍💐💐💐

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
21.02.18

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...