Search This Blog

Sunday, August 12, 2018

இராமாயணம்

இராமாயணம்

கோசலைக் குமரனாம்
கோதண்ட இராமனாம்
வைகுண்ட வாசனிவன்
வேள்வியில் உதித்தவனாம்.

திருமாலின் அவதாரமாம்
திரேதாயுகத்து பெருமானாம்
தசரத மஹாராஜாவின்
தலைச்ச பிள்ளையைவனாம்.

முனிவரின் தவம் காக்க
முனைந்து நின்றவனாம்
வனத்திலே அசுரர்களை
வதைத்து கொன்றவனாம்..

ஜனகனின் புத்திரியாம்
ஜானகியை மணம் புரிய
சபையோர் முன்னிலையில்
சிவதனுசு ஒடித்தவனாம்..

தந்தையின் சொல் கேட்டு
தாருகமும் சென்றவனாம்
பதினான்கு வருடங்கள்
பட்டத்தை துறந்தவனாம்..

தொடுத்த வில்லையும்
கொடுத்த சொல்லையும்
திரும்பப் பெறாதவனாய்
கானகமும் சென்றவனாம்..

அரசாளும் சுகம் மறந்து
ஆரண்யம் சென்றவனாம்
அறுவராக குகனையும்
ஆலிங்கனம் செய்தவனாம்..

பாதத்துளி மூலம் அகலிகைக்கு
பாப விமோசனம் தந்தவனாம்
மூதாட்டி சபரியின் பழம் உண்டு
முக்தியும் அளித்தவனாம்..

மாயமான் விரித்த வலையில்
மனங்குழம்பி கொண்டவனாம்
இலங்கேஸ்வரனிடம் தனது
இலக்குமியை தொலைத்தவனாம்.

இலக்குவனோடு வனத்தில்
இராப்பகலாய் தேடினவனாம்
பட்சிராஜா ஜடாயுவைக் கண்டு
பித்ரு காரியம் செய்தவனாம்..

சுக்ரீவனோடு கூட்டமைத்து
சேனையும் அமைத்தவனாம்
வானர வாலியை மறைந்து
வதம் செய்து காத்தவனாம்..

வாயு மைந்தன் அனுமனை
வான் வழியே தூதனுப்பி
யுத்தம் புரியாமல் இருக்க
ஆயத்தம் செய்தவனாம்..

கணையாழியை கண்டதுமே
கண்ணீரும் சொறிந்தவனாம்
சேதுவில் பாலம் அமைத்து
சமுத்திரத்தைக் கடந்தவனாம்..

அசுரன் விபீஷணனுக்கும்
அடைக்கலம் தந்தவனாம்
இன்று போய் நாளை வாவென
இராவணனைப் பணித்தவனாம்..

சத்ரு சேனையை அழித்து
சீதா பிராட்டியையும் மீட்டு
அக்கினியில் புகச் செய்து
அழுக்கை அகற்றினவனாம்..

பாதுகா பட்டாபிஷேகத்துடன்
பணி செய்யும் பரதனையும்
வேள்வியில் விழாமல் மீட்க
விரைந்து திரும்பினவனாம்..

அயோத்தி மாநகரமே
அமர்க்களப்பட்டது ஸ்ரீ
இராமச்சந்திர மூர்த்திக்கு
இராஜ்யாபிஷேகம் நடந்தது..

சீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன
ஹனுமத் ஸமேதரான   ஸ்ரீ
இராமச்சந்திர மூர்த்திக்கு ஜெய்..

ஜெய் ஜெய் ராம் சீதா ராம்
ஜெய் ஜெய் ராம் சீதா ராம்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
13.08.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...