Search This Blog

Saturday, November 3, 2018

தீபாவளி

எங்கே அந்த தீபாவளி
என் சின்ன வயசு தீபாவளி

தீபாவளி வந்தாலே
மத்தாப்பு சந்தோஷம்
வெடிச் சத்தம் எங்கும்
காதினைப் பிளக்கும்

பலகார சட்டியின்
எண்ணெயின் வாசம்
வீதி வரைக்கும் நமது
மூக்கினைத் துளைக்கும்.

புத்தாடை உடுத்திடும்
கனவுகளைக் கண்டு
தூங்காத இரவுகள்
நீங்காத நினைவுகள்.

சில்லறை எடுத்து சென்று
கேப்பு சுருள் வாங்கினோம்
கொஞ்சமாய் பணம் சேர்த்து
ஊசி வெடியும் வாங்கினோம்.

ஒரு மாதம் முன்னதாக
பட்டாசுகளை வாங்கி
வெயிலிலே காய வைத்து
விழித்து கனவு கண்டோம்.

சிக்கனமாய் செலவிட்டு
சிறுக சிறுக வெடி சேர்த்து
தித்திப்பு பலகாரத்துடன்
தீபாவளியை எதிர்பார்த்தோம்.

எங்கே அந்த தீபாவளி
என் சின்ன வயசு தீபாவளி..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
03.11.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...