Search This Blog

Monday, November 5, 2018

காஞ்சி பயணம்

காஞ்சி பயணம்

காஞ்சி மாகரம்
சென்றேன்
கவலையெல்லாம்
தீரப் பெற்றேன்.

காலடி வழியில் வந்த
காஞ்சி முனி பாதம் பணிந்து
பிரதோஷ நந்நாள் இன்று
பிறவிப் பயனும் பெற்றேன்.

சாந்நித்யம் மிகவும் பெற்ற
சங்கர மடத்தில் இன்று
சந்திரமௌளீஸ்வரர் பூஜை
சந்தோஷமாய் கண்டு மகிழ்ந்தேன்.

வில்வ தலம் எடுத்து ஸ்ரீ
ஸ்வாமிகள் அர்ச்சிக்கும்
அழகைக் காண நமக்கு
ஆயிரம் கண்கள் வேண்டும்.

பிருந்தாவனத்தில் மஹா
பெரியவாளை தரிசித்து
பக்கத்தே ஸ்ரீ ஜெயேந்திரரின்
அதிஷ்டானத்தை ஆராதித்தேன்.

உச்சிப் பொழுதினிலே
உள்ளமெல்லாம் குளிர்ந்து
அன்னதான கூடத்திலே
வயிற்றுப் பசியும் ஆற்றினேன்.

மாலை வேளையில்
ஏகாம்பரேஸ்வரரை தரிசித்து
காமாக்ஷி அம்பாளை
கண் குளிர சேவித்தேன்.

க்ஷன நேர தரிசனம் மிக
நெருடலாக இருந்த போது
ஏ.ஜி சங்கர் அண்ணா கிருபையால்
கிட்டத்தில் தரிசிக்கப் பெற்றேன்.

நீண்ட நாட்களாக இருந்த
மனதின் ஏக்கம் இன்று
தீப ஒளித் திருநாள் வேளை
மகிழ்வாக கிடைக்கப் பெற்றது.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
காஞ்சி சங்கர காமாக்ஷி சங்கர

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
05.11.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...