Search This Blog

Saturday, April 13, 2019

ஸ்ரீராமஜெயம்

ஸ்ரீராமஜெயம்

பதினான்கு ஆண்டுகள்
இராஜ்ஜியமும் துறந்தாய்
கானகத்தில் கரடு முரடில்
கவலையோடு அலைந்தாய்

குகனையும் சகோதரனாய்
நல் உறவாக வரித்தாய்
அகலிகைக்கு அபயமளித்து
உயிர் பெறவும் செய்தாய்

மனைவியைப் பறி கொடுத்து
மன நிம்மதியும் இழந்தாய்
சுக்ரீவனை காக்க வேண்டி
வாலி வதமும் புரிந்தாய்

ஆஞ்சனேய மூர்த்திக்கு
அருட் கரத்தை அளித்தாய்
இலங்கைக்கு செல்ல வேண்டி
சேது சமுத்திரம் சேர்ந்தாய்

வானரத்தின் துணை ஏற்று
பாலமொன்று அமைத்தாய்
விபீஷணனை அனுக்கிரகித்து
அடைக்களமாய்  ஏற்றாய்

வான் வழியே அனுமனை
தூதனுப்பி வைத்தாய்
அடங்காத அசுரனை அன்று
அடக்கவும் நினைத்தாய்

இன்று போய் நாளை வர
வாய்ப்பையும் கொடுத்தாய்
இறுதியிலே போர் தனிலே
இராவணனை மாய்த்தாய்

முடி சூட்டி விபீஷணனை
மன்னனாக்கி மகிழ்ந்தாய்
மண்டோதரிக்கு மோட்ஷமும்
மனதாரத் தந்தாய்

விரைவாக அயோத்திக்கு
திரும்பவும் வந்தாய்
அக்கினிக்கு இரையாகும்
அனுஜனையும் காத்தாய்

நன்னாளும் வந்தது
நாடு நலம் பெற்றது

சீதா லட்சுமண பரத சத்ருக்ன
ஆஞ்சனேய சமேத ராமச்சந்திர
மூர்த்திக்கு வைபோகமாய்
பட்டாபிஷேகமும் நடந்தது

ஜெய் ஜெய் ராம் சீதா ராம் !!!
ஜெய் ஜெய் ராம் ஜானகி ராம் !!!

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
13.04.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...