Search This Blog

Wednesday, February 21, 2018

ஐயம் அய்யம்

ஐயம் அய்யம்

ஐயத்தை அழித்து
அய்யத்தை அழுத்தி
மய்யம் எனப் பெயரிட்ட
மன்மதனே..

ஐயும் ஔவும்
ஆண்டாண்டுகளாய்
அகத்தியரின் தமிழுக்கு
அழகூட்டுபவை ஆகும்..

சங்கத் தமிழ் எழுத்தை
சாகடித்து மாற்றி எழுத
சினிமா நடிகனுக்கு
துணிச்சல் வந்தது ஏன் ?

வித்தியாசமாய் செய்வதாக
விவகாரமாக விகாரமாக
விளையாடுவதே தமது
வாடிக்கையானதோ ??

ஔவை மூதாட்டியின் அமுத மொழியாம்
வள்ளுவன் வழங்கிட்ட அழகு மொழியாம்
உ.வே.சா தாத்தா மீட்டெடுத்த மொழியாம்
உலகின் தொன்மையான முதன் மொழியாம்

ஆரம்பமே சர்ச்சையாகாமல்
தக்க விதமாய் சிந்தியுங்கள்
சேர்க்கை சரியில்லையெனில்
விளைவும் அப்படியே இருக்கும்..

காலக் கொடுமை, என் செய்வது ??

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
22.02.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...