Search This Blog

Sunday, February 4, 2018

உப்பு

உப்பு

உப்பில்லா பண்டம் குப்பையிலே
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
உப்பு சப்பு இல்லாத விஷயம்
உப்புத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்

இம்மாதிரி உப்பினை மையப்படுத்தி
பல்வேறு பழமொழிகள் நம்மிடமுண்டு

உறவில் முக்கியம் நட்பு, அதுபோல
உணவில் முக்கியம் உப்பு..

உணவின் ருசி உப்பை பொறுத்தே
அறிய / அளக்கப் படுகிறது..

சோடியம் குளோரைடு வேதிப் பெயரில்
சாம்பார் சுவைக்கு தேவைப்படுகிறது..

மின்சாரம் கடத்தும் உப்புக் கரைசல்
சம்சாரம் சமைக்கவும் உப்புக் கரைசல்..

அறுசுவை உணவு சுவைகளில்
அழகான இடம் நம் உப்புக்கும் உண்டு..

கடல் நீரில் பிறந்த காரிகை இவள்
கண்ணீர் துளியிலும் கூட இருப்பவள்..

கடல் நீரில் சேரும் நதிநீர் கழிவுகள்
உப்பினைக் கொண்டே கழுவப்படுகிறது..

ஒன்று சேரும் நாற்றத்தை அழிப்பதினாலே
உலக சுகாதாரத்திற்கு இது ஊன்றுகோல்..

வெள்ளை வண்ணம் கொண்ட வஞ்சி
வடிக்கும் உணவில் சேர்ந்திடுவாள்..

சுதந்திரப் போருக்கு அச்சாணி இட்டது
உப்பு சத்தியாகிரகம் என்பதே ஆகும்..

உப்பின் மீது வரி விகித்த காலமும்
உப்பு ஏற்றுமதி செய்த காலமும் உண்டு..

உப்பின் அளவினை கூட்டிக் குறைத்தே
ஒருவரின் இரத்த அழுத்தம் சீராகும்..

உப்பும் இதன் சகோதரன் சர்க்கரையும்
உலகை உலுக்கும் வெள்ளை பண்டங்கள்..

உப்பே! ஒப்பிலா உயர்வே
உனை வார்க்க வரிகள் காணாது
உலகம் உள்ளளவும் உனது
உருவாக்கமும் எமக்கு தேவை..

உப்பு(மா) சாப்பிட்ட கையோடு
உப்பினை உயர்த்தி எழுதிய
கவிதை வரிகள் 😊😊😊

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ.பாலா
18.08.17

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...