Search This Blog

Sunday, February 4, 2018

சனிப் பிரதோஷம்

சனிப் பிரதோஷம்

ஆலகால விஷமுண்ட
அகிலாண்டேஸ்வரனின்
அனுகிரகம் கிடைத்திடும்
சனிப் பிரதோஷம்.

உலகத்தை உய்விக்க
ஊர்த்துவ தாண்டவமாடும்
உமா மகேஸ்வரனின்
சனிப் பிரதோஷம்.

சகல பாபம் தீர்த்தருளும்
சர்வேஸ்வரனின்
சாந்நித்யம் அமையப் பெறும்
சனிப் பிரதோஷம்.

சரணாகதி அடைந்தோற்கு
சகல சௌபாக்கியம் அருளும்
சந்தியா காலத்தின் விசேஷ
சனிப் பிரதோஷம்.

நந்தியம்பெருமானின் இரு
கொம்பினுக்கிடையில் அழகாய்
நர்த்தனமாடும் நடராஜ மூர்த்தியின்
சனிப் பிரதோஷம்.

சிவாய நம ஓம்..

திருச்சிற்றம்பலம்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ.பாலா
19.08.17

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...