Search This Blog

Monday, February 26, 2018

மரணமே ம ரணமே

மரணமே ம ரணமே

மாரடைப்பால் மரணம்
என்றார்கள், பின்னர்
மதுவருந்தி விழுந்ததே
காரணம் என்கிறார்கள்.

எது எப்படியோ
சுய நினைவை
இழக்கச் செய்யும்
சோம பானம் எதற்கு ?

பணம் புகழ் அந்தஸ்து என
அனைத்துமிருந்தும் தனியே
அந்நிய நாட்டில் இன்னுயிரை
இழந்தது காலக் கொடுமையே..

குடிபோதை தலைக்கேறி
குளியல் தொட்டியில் இடறி
மூச்சுத் திணறி எம் தேவி
மாண்டு போனாராம்..

விஷயம் கேட்டவுடனே
விம்மிப் புடைத்த எம் நெஞ்சு
வேதனையில் வாடுவதை
வேறெவரிடம் போய் சொல்வது ?

சரக்கிற்கு அடிமையாகும்
சந்ததிகள் நிலையெண்ணி
செய்தி கேட்ட போதே எமக்கு
சோகமாய்ப் போனது..

கவலையை மறந்திட
குஷியினை பகிர்ந்திட
எதற்க்கெடுத்தாலும்
குடியினை நாடுவர்..

அலுவலகத்தின் டென்ஷன்
அளவுக்கு மீறிய நெருக்கடி
அவரவர் கூறிடும் காரணம் வேறு
அனைவர் நாடும் மதுவோ ஒன்று..

பீர், விஸ்கி, பிராந்தி, ஒயின்
பெயர் பல கொண்டிருந்தாலும்
போதையேற்றும் இவை யாவும்
சாராயத்தின் குடும்பமே..

சோஷியல் ட்ரிங்கிங்
அக்கேஷனல் ட்ரிங்கிங் என்று
ஆரம்பமாவது தெரிவதில்லை, பின்
அடிமையாகுவதும் புரிவதில்லை..

மாதுவின் மரணம்
மதுவால் மரணம்
எதுவானாலும் நெஞ்சு
பதற வைக்கும் மரணம்
ம ரணமே ம ரணமே ம ரணமே..

நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்ல
குடிமக்களாக இருப்போம்
குடி மக்களாக வேண்டாம்..

வருத்தத்துடன்....

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
26.02.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...