Search This Blog

Monday, August 13, 2018

கிருஷ்ண கானம்

கிருஷ்ண கானம்

வசுதேவர் இல்லத்து
எட்டாவது பிறப்பு
வைகுண்டவாசனின்
ஒன்பதாவது சிறப்பு.

காராக்ரஹத்தினுள்ளே
கருவாய் இருந்தவன்
அஷ்டமி நன்னாளில்
உருவாய் வெளிவந்தவன்.

தாய் மாமன் கம்சனிடம்
தப்பிப் பிழைத்திடவே
கொட்டும் மழையிலும்
கோகுலம் சென்று சேர்ந்தான்.

யசோதை இளஞ்சிங்கமாய்
யமுனையாற்றங்கரையிலே
கோபிகா ஸ்திரீக்களுடன்
கொஞ்சித் தவழ்ந்து வந்தான்.

இராமாவதாரத்தில் உதவிய
வானர சேனைகளையெல்லாம்
கோபியராய்ப் பிறக்கச் செய்து
கைம்மாறு முடித்துக் கொண்டான்.

கடைந்த வெண்ணையை
கள்ளமாகத் திருடித் தின்று
பிடிபட்டக் குழந்தையாகப்
பாசாங்கும் செய்திடுவான்.

முறையிட்ட பெண்மணியால்
சினங்கொண்ட யசோதைக்கு
ஆ வென்று வாய்த் திறந்து
அகிலத்தையே காட்டி விட்டான்.

கொட்டும் மழைக்காக
கோவர்த்தன மலை தூக்கி
கோகுலத்தையே ரக்ஷித்த
கோபால கிருஷ்ணன் அவன்.

யமுனை ஆற்றங்கரையில்
யாதவ சிறார்களோடு
ஆடிக் களிக்கையிலே ஓர்
அரவம் வெளிவரக் கண்டான்.

அச்சம் அடைந்த சிறுவர்களை
ஆசுவாசப் படுத்திவிட்டு
ஆற்று நீருக்குள்ளே அவன்
அநாயாசமாய் நுழைந்தான்..

விடத்தை கக்கி நிற்கும்
வீரிய பாம்பின் தலை மேல்
காளிங்க நர்த்தனம் செய்து
களிநடம் புரிந்து நின்றான்..

பேயுருவம் எடுத்த
பூதகி ராக்ஷஸியின்
மார்தனைக் கடித்து துப்பி
மரணிக்கவும் செய்தான்..

கோபியர் குளிக்கையிலே
கோகுலக்கண்ணனும் சற்றே
துணிகளை மறையச் செய்து
திண்டாட விட்டு மகிழ்வான்..

எல்லா உயிர்களையும் தன்
புல்லாங்குழல் இசையால்
மயக்கம் கொளச் செய்யும்
மாயக் கண்ணன் அவன்..

பிருந்தாவனத்தினிலே
சஞ்சாரம் செய்தபடி
ராதையோடு உல்லாசிக்கும்
ராதாகிருஷ்ணன் அவன்..

விக்கித்து நின்ற விஜயனுக்கு
விஸ்வரூப தரிசனமும் தந்து
காண்டீபம் எடுக்கச் செய்து
கர்ணனையும் மாய்க்கச் செய்தான்.

பார்த்த சாரதியாகி அன்று
பாண்டவர்க்கு துணை நின்று
பாரதப் போர்தனிலே அவர்க்கு
வெற்றியும் கிடைக்கச் செய்தான்.

பகவத்கீதை தந்தருளிய பரந்தாமா
பக்தர்களை காக்கும் பாண்டுரங்கா
வனமாலி வாசுதேவா, நந்தகுமாரா
மாதவா, முரளீதரா, மதுசூதனா..

ஹரே ஸ்ரீ கிருஷ்ணா சரணம் சரணம்..

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பனம்

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
13.08.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...