Search This Blog

Friday, August 24, 2018

இரயில் பயணம்

இரயில் பயணம்

பரபரப்புடன் காணப்பட்டது சென்னை புறநகர் இரயில்வே நிலையம். மாலை அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் கூட்ட நெரிசலில் ஒருவரை ஒருவர் முட்டி மோதிக் கொண்டு ரயிலைப் பிடிக்க ஓடிக் கொண்டிருந்தனர். எப்படியோ கஷ்டப்பட்டு ஜன்னலோர இருக்கையொன்றில் அமர்ந்து கொண்டான் அவன். நேரம் செல்ல செல்ல மூன்று பேர் இருக்கையில் ஐந்து பேர் இடித்தபடி வந்து அமர்ந்தனர். சூடான சமோசா எனக் கூவியதைக் கண்டு சிரிப்பு தான் வந்தது. அப்படியும் ஆறிப்போனதை ஆவலுடன் சிலர் வாங்கிக் கொரித்தனர். பசியடங்கணுமே என்ன செய்வது. சிறிது நேரத்தில் வண்டியின் உள்ளேயே கொய்யாப் பழம், வேர்க்கடலை, முறுக்கு என பல்வேறு தின்பண்டங்கள் வரிசைகட்டி விற்கப்பட்டு வந்தன. இன்னொரு புறம் ஒரு பெண்மணி மல்லி, முல்லை என்று பூச்சரங்களை விற்று வந்தாள். கீரைக் கட்டும் காய்கறிகளும் கூட அங்கே கூவி விற்றனர். கண்ணில்லாத ஒருவர் பேனா, பர்ஸ், பென்சில் என்று இயன்றளவு விற்க முயற்சித்து வந்தார். அவரவர்க்கு தேவையானதை வாங்குவதில் அங்கே ஒவ்வொருவரும் முனைப்புடன் இருந்தனர்.

சிலர் கூட்டமாக அரட்டையடித்தபடி அரசியலையும் சினிமாவையும் அலசியபடி பொழுது போக்கிக் கொண்டிருந்தனர். இரயில் வண்டியோ ஊர்ந்து செல்கிறது, ஆனால் பலரது வாழ்க்கையோ மிகவும் விரைந்து செல்கிறது. இந்த வண்டி பயணத்தை நம்பி அதில் விற்பனை செய்தபடி எத்தனை குடும்பங்கள் உழைத்து பிழைக்கின்றன. அப்பப்பா, கணக்கில் எண்ண மாளாது.

அவனுக்கு அந்த காட்சிகள் எல்லாம் விசித்திரமாக இருந்தது. நெரிசலில் பயணித்தவன் இல்லை. இருபது வருடங்களாக வீடும் அலுவலகமும் மிகவும் பக்கத்தில் அமைந்து இருந்தன. சொகுசாக வாழவில்லையெனினும் சுகமாக வாழ்ந்து வந்தான். என்ன செய்வது, அலுவலக மாற்றத்தால் இம்மாதிரி புதுவித அனுபவங்கள் அவனுக்கு கிட்டியது. ஆனாலும் தினசரி தொலைதூரம் பயணிப்பது சற்று சிரமமாகவே தோணியது. எதிலும் பழக்கப்பட்டு விட்டால் நாளடைவில் சரியாகிவிடும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே புகைவண்டி அவனது நிறுத்தத்தில் நின்றிட, அவனும் கண்ட காட்சிகளை மனதிற்குள் எண்ணி ரசித்தபடி தனது இல்லம் நோக்கிச் சென்றான்.

கடந்த வாரத்தில் சென்னைக்கு சென்று திரும்பும் போது பயணித்த அனுபவக் கட்டுரை..🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா 24.08.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...