Search This Blog

Friday, August 24, 2018

சுதா அக்கா

சுதா அக்கா

ஓய்வறியாது உழைப்பவளே
உன்னைப் பற்றி என்ன நான்
எழுதுவது ?

படிக்கும் காலத்தில்
படிப்பு ஏறவில்லையென
பளிச்சென்று கூறிவிட்டாய்..

உன்னுடன் பிறந்த நாங்கள்
உருப்படியாய் ஏதோ படித்து தேறிட
ஒதுங்கி நீயோ தனித்து போனாய்..

வீட்டு வேலைகளை எல்லாம்
இழுத்துப் போட்டு செய்திட்ட
ஆர்.வீ. இல்லத்து அக்கா நீயே..

என்ன தோணியதோ நானறியேன்

அப்பாவின் அனுகிரஹத்தால்
ஆங்கிலத்தை விடுத்து திடுமென
ஹிந்தியில் அஸ்திவாரம் போட்டாய்..

இன்றளவும் அன்று உன்னிடம்
பாடம் பயின்ற மாணாக்கர்கள்
உனை நினைத்துப் பார்ப்பதுண்டு..

அழகிய திருச்சி மாநகரத்தில்
அடியெடுத்து வைத்த பின்னே
மீண்டும் கற்பிக்க ஆரம்பித்தாய்..

அப்பாவின் வழித்தோன்றலாய்
பத்து வருடங்களுக்கு மேலாக
ஆயிரத்தை தொடும் மாணவர்கள்..

வெறும் பேச்சளவில் மொழி கற்ற
எங்களையெல்லாம் முந்திக் கொண்டு
செயலில் போதிக்கும் செல்வி நீயே..

புரியாத மொழியினை புறந்தள்ளி
தெரிந்த மொழியை தெம்புடன் பற்றி
பீடு நடை போடும் பிராட்டியும் நீயே..

கலை அலை மலை மகள்கள் என
முத்தாக மூன்று கண்மணிகள் உனது
கவலையைப் போக்கும் நன்மணிகள்..

கருத்துடன் காசை செலவிடுதலில்
நம் அம்மாவைப் போன்றே நீயும்
இருப்பதாகவே நானறிவேன்..

உழைப்பை மூலதனமாகக் கொண்டு
படிப்பை பெரிய சொத்தாக உனது
குழந்தைகளுக்கு கொடுத்திடுவாயே..

சகல சௌபாக்கியங்களுடன்
சந்தோஷமாக பல்லாண்டு நீ
வாழ வேண்டி வாழ்த்துகிறேன்..

அன்பு தம்பி பாலு 💐💐💐💐
25.08.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...