Search This Blog

Tuesday, September 25, 2018

நிலா

நிலா

வட்ட நிலவினை இன்று
வானத்தில் கண்டேன்
வியப்பில் ஆழ்ந்து அதன்
வண்ணத்தை ரசித்தேன்..

வெள்ளையாகத் தோன்றும்
மஞ்சளாகவும் தெரியும் நம்
கற்பனைக்குத் தக்கவாறு
காட்சிகளை உள்ளடக்கும்..

பாட்டி வடை சுட்ட கதை
படிக்காதவரும் உண்டோ
நிலவொளியில் மயங்கிடாத
மாந்தரும் உண்டோ..

ஆண்டுகள் பல கடந்தும்
ஆதவனின் ஒளி பெற்று
பன்னெடுங்காலமாக இது
பாரினைச் சுற்றி வரும்..

புவியீர்ப்பு விசையினாலே
பொத்தென்று வீழ்ந்திடாமல்
காலையும் மாலையும் இது
வேறு வேறு திசையில் வரும்..

மின்சாரம் வாராத காலங்களில்
இரவுப் பொழுதைக் கழி(ளி)த்திட
நிலவின் ஒளியே அனைவர்க்கும்
துணையாய் அமைந்தது..

மாதத்தில் சில நாட்கள்
வளர்ந்து தேய்ந்தும் பின்
தேய்ந்த பின் வளர்ந்தாலும்
ஓய்ந்து மட்டும் போவதில்லை..

கிரகண காலத்தில்
சந்திரன் சற்றே மறையும்
மனதில் ஏனோ சின்னதாய்
சஞ்சலம் விரியும்..

சில்லென்ற ஒளி வீசும்
சந்திரனும் இதுவே
நில்லாது நகர்ந்திடும்
நிலாவும் இதுவே..

இரவின் கருமைக்கு
வெளிச்சம் தந்திடும்
உறவின் அருமைக்கு
உற்சாகம் தந்திடும்..

காதலியை நினைத்தபடி
கற்பனைக் குதிரையில்
நிலவைத் தூது விட்ட அநேக
காதலர்களும் உண்டு..

நிலவைப் பார்த்து
எழுதாத கவிஞன்
எக்காலத்திலும் இவ்
உலகினில் இல்லை..

எனக்கும் நிலா மேல்
ஒரு கவி எழுத ஆசை
இன்று எழுதி நான்
திருப்தியடைந்துள்ளேன்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
25.09.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...