Search This Blog

Friday, February 25, 2022

தேவதூதன்

 தேவதூதன் 


ஆரவாரமிக்க

ஆலயம் எமது

அமைதி தவழும்

தேவாலயம் தமது. 


பல வண்ணங்களில்

ஆடைகள் எமதெனில்

பளிச் வெண்ணிறத்து

ஆடைகள் தமக்கு. 


விண்ணதிரும் வேத 

கோஷங்கள் எமக்கு

விவிலியம் உரைக்கும்

வேதாகமம் தமக்கு. 


மாதா கோவிலின்

மணியோசை கேட்க

மனதில் இனம் புரியா

பேரமைதி எழும்பும். 


ஆதிகாலந் தொட்டே

எம்முடைய பாரத தேசம் 

அனைத்து மதத்தையும்

அரவணைத்து செல்லும். 


அந்நிய தேசத்து மதம்

என்ற வேறுபாடில்லை

ஆங்கிலேயர்கள் மதம்

என்ற பாகுபாடுமில்லை. 


அற்ப விஷயங்களுக்கு

மதம் மா(ற்)றும் நிலை

காணும் போதெல்லாம்

கண்ணீர் வருகிறது. 


அரசியல் ஆதாயத்திற்கு

மக்களை திசை திருப்பும்

மானிடர்களைப் பார்க்க

மனம் வெதும்புகிறது. 


செல்லும் வழிகள் பல

ஆயினும் முடிவாய்ச்

சேரும் இடமென்பது

ஒன்று தான். 


மதங்கள் பலவாய்

பிரிந்திருந்தாலும்

போற்றும் இறைவன்

ஒன்று தான்.. 


ஓம் சாந்தி ஓம் சாந்தி.. 


🙏🙏🙏🙏🙏🙏🙏 


அன்பன், சிதம்பரம்

ஆர். வீ. பாலா

25.12.2021



No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...