Search This Blog

Saturday, February 24, 2018

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

குழந்தை நட்சத்திரமாய்
திரைத்துறையில் வந்து
கோபுரமாய் நடிப்புலகில்
கோலோச்சிய மயிலே

நீ பிறந்த சிவகாசியின்
பட்டாசு போல நடிப்பில்
வெடித்து வெளுத்து
வாங்கிய மயிலே

ஆரம்ப காலங்களில்
ரஜினியும் கமலும் உன்
நடிப்புக்கு ஈடுகட்டவே
திணறினாராம் மயிலே

கமலுக்கும் ரஜினிக்கும்
சிறந்த திரை ஜோடியாக
இன்றளவும் உன் பெயரே
ஓங்கி ஒலிக்குது மயிலே

தென்னிந்தியாவில்
தன்னிகரற்று நடித்து
வட இந்தியாவிலும்
வாகை சூடிய மயிலே

ஸ்ரீதேவிக்கு முன்
ஸ்ரீதேவிக்கு பின் என
பாலிவுட்டின் படங்கள்
பிரிக்கப்படும் மயிலே

எத்தனை திரைப்படங்கள்
எத்தனை முக பாவங்கள்
என்றென்றும் எம்மை விட்டு
ஏமாற்றிச் சென்றாயே மயிலே

சிம்ம சொப்பனமாக இருந்த
சிவாஜி கணேசனுடன் சேர்ந்து
சவாலான நடிப்பை மிகவும்
அசால்ட்டாக செய்தாயே மயிலே

புதிதாய் நடிக்க வரும் நடிகைகள்
தமது இலக்காக உனது பெயரை ஓராயிரமுறை உச்சரிக்க கேட்டது
உனக்குத் தெரியுமா மயிலே

குழந்தைத்தனமான உனது
கொஞ்சும் சிரிப்பில் கோடானு
கோடி ரசிகர்களை கட்டிப் போட்ட
குட்டி சாவித்திரி நீ மயிலே

16 வயதினிலே மயிலும்
மூன்றாம் பிறை விஜியும்
எவராலும் நடிப்பில் ஈடு
செய்ய இயலாது மயிலே

மற்றவர்களைப் பார்க்க வெறும்
நடிப்பாகவே தெரியும், ஆனால்
உன்னைத் திரையில் பார்க்க நீ
வாழ்வதாவே தெரியும் மயிலே

இந்தியாவில் நீ இறக்க உன்
ரசிகர்கள் விடமாட்டார் என்று
அயல் நாட்டில் உன்னுயிரை
எமதூதன் எடுத்தானோ மயிலே

சின்னக் கண்ணன் அழைக்கிறான்
இளமையெனும் பூங்காற்று
சின்னஞ்சிறு வயதில்
வசந்தகால நதிகளிலே
சிப்பியிருக்குது முத்துமிருக்குது
எந்தப் பூவிலும் வாசம் உண்டு
தேவி ஸ்ரீதேவி உன் திருவாய்
மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா

இம்மாதிரி நூற்றுக்கணக்கான
பாடல்களை எம் நினைவில் ஏந்தி
மிச்ச நாட்களை உன் நினைவில்
நகர்த்துவோம் மயிலே

காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே
அலைபோல நினைவாக
சில்லென்று வீசும் மாலை நேர
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே

செந்தூரப்பூவே
செந்தூரப்பூவே
சில்லென்ற காற்றே
மயிலு எங்கே எம் மயிலு எங்கே
நீ கொஞ்சம் சொல்லாயோ 😢😢

ஆழ்ந்த இரங்கல்களுடன்
அவரது ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கும் கோடானு கோடி
ரசிகர்களில் ஒருவனாக...

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
25.02.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...