Search This Blog

Tuesday, August 14, 2018

விடுதலை

விடுதலை

ஆண்டுகள் பல கடந்தும்
அடைந்து விட்டோமா நாம்
விடுதலை ??

ஆங்கிலேயர்கள் நம் நாட்டை
விட்டு வெளியேறியது மட்டுமா
விடுதலை ??

அனைத்து துறைகளிலும்
ஆழ்ந்திருக்கும் ஊழலுக்கு
எப்போது விடுதலை ??

சாதி மதத்தின் பெயரால்
சீர்கெட்டுள்ள சமூகத்திற்கு
எப்போது விடுதலை ??

அயோக்கியத்தனம் புரியும்
அரசியல்வாதிகளிடமிருந்து
எப்போது விடுதலை ??

கள்ளப் பணத்தைப் கடத்தும்
கயவர்களிடம் இருந்து
எப்போது விடுதலை ??

கறுப்புப் பணத்தைப் பதுக்கும்
கொடியவர்களிடம் இருந்து
எப்போது விடுதலை ??

பெண்களை சீரழிக்கும்
போக்கிரிகளிடம் இருந்து
எப்போது விடுதலை ??

அநீதிக்கு எதிராக குரலெழுப்பத்
தயங்கும் அச்சத்திடம் இருந்து
எப்போது விடுதலை ??

தொழிலாளர்களை வதைக்கும்
முதலாளி வர்க்கத்திடம் இருந்து
எப்போது விடுதலை ??

அடுத்தவரைப் பார்த்து ஏங்கும்
நம் பொறாமை குணத்தினின்று
எப்போது விடுதலை ??

பிறரைக் கெடுத்து தான் மட்டும்
வாழ நினைக்கும் எண்ணத்திற்கு
எப்போது விடுதலை ??

வெறும் வாய் வார்த்தைகளால்
கூறுவது மட்டும் விடுதலை அல்ல
சமூகத்தின் கட்டமைப்பால் கூடவே
நம்  செயல்களால் அடைவதே
உண்மையான விடுதலை ஆகும்..

நாட்டைத் திருத்துவதற்கு முன்
நமது வீட்டை நம் உள்ளக கூட்டை
முதலில் திருத்திக் கொள்வோம்..

ஜெய் ஹிந்த் !! வந்தே மாதரம் !!

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
14.08.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...