Search This Blog

Wednesday, August 15, 2018

பயிற்சியே முயற்சி

பயிற்சியே முயற்சி

மனதை ஒருநிலைப் படுத்தி
மனக்கண் முன்னே நடக்கும்
காட்சிகளை நானும் ஓட விட்டேன்
கவின்மிகு சில வார்த்தைகளாக
வரிகளில் சற்றே வார்த்தெடுத்தேன்

சொல்லனா மகிழ்வில் நானும்
சொக்கியே லயித்துப் போனேன்
அலங்கார வார்த்தைகளுடனே
அடுக்கடுக்கான வார்த்தைகளிலே
அழகு நடையில் படைக்கலானேன்

இலக்கிய நடையில் எழுதவில்லை
இலக்கணம் வகுத்து எழுதவில்லை
இரட்டை அர்த்தத்தில் எழுதவில்லை
இச்சைப்பட்ட கற்பனை வரிகளில்
இஷ்டம் போல எழுதலானேன்

கவிதையெழுத கற்பனை வேண்டும்
கவிதையெழுத புலமையும் வேண்டும்
கவிதையெழுத உவமையும் வேண்டும்
கவிதையெழுத மொழித்திறன் வேண்டும்
இவையாவும் எனக்கு இல்லையென்பேன்

எப்பவோ படித்த சின்ன புத்தகங்கள்
பள்ளியில் பயின்ற பாடப் புத்தகங்கள்
நித்தம் நிகழும் சம்பவங்கள் மற்றும்
நண்பர்கள் பெரியோர் உந்துதல்கள்
என்றும் என்னை எழுத வைக்கின்றது

கவிச்சக்கரவர்த்தியையும்
காளமேகப் புலவனையும்
பாரதியையும், பாவேந்தரையும்
இளங்கோவடிகள் என பலவும்
படித்து பயிற்சி எடுக்க வேண்டும்

முயற்சிக்கு ஓய்வில்லை
மூளைக்குத் தொய்வில்லை
மூஷிகனின் அருள் கொண்டு
முனைந்து எழுதிடுவேன் நான்
முப்போதும் பயின்றிடுவேன்..

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
15.08.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...