Search This Blog

Friday, September 21, 2018

வெள்ளிக் கிழமை சிறப்பு கவிதை

வெள்ளிக் கிழமை சிறப்பு கவிதை

எவ்வளவு திமிர் இந்த
பொல்லாத கொசுவுக்கு
சிவந்த கன்னத்தை மேலும்
சிவக்க செய்ததேனோ..

கண்ணில் பட்டதுமே அவள்
கத்தித் தீர்ப்பதினால் எங்கும்
கரப்பான் பூச்சியை கண்டதும்
கண்டிப்பாக விட்டிடுவேன்..

பஞ்சு போன்ற சருமத்துடன்
பதுங்கி நுழையும் பூனையிடம்
பாசம் காட்டி அவள் பழகுவதால்
பாலும் நானும் ஊற்றிடுவேன்..

குட்டி நாயைக் கொஞ்சியபடி
கட்டி அவள் அணைப்பதினால்
கருணையோடு அருகில் சென்று
கனிவுடன் நான் உணவிடுவேன்..

உன்னை எண்ணி நானிருக்க
என்னை நீயோ தவிக்க விட்டு
ஒன்றும் அறியாதது போல
ஒதுக்குவது முறைதானோ..

கண்ணே உனை கவனிப்பேன்
காலமெல்லாம் காத்திடுவேன்
நாயாக பூனையாக உன்னை
நித்தமும் சுற்றி வந்திடுவேன்..

கடைக்கண்ணால் பாராயோ
கனிவு மொழி கூறாயோ
கடைசி நிமிடம் வரையில்
கைப்பிடித்து இருப்பாயோ..

சும்மா வெள்ளிக் கிழமை
சிறப்பு கவிதை 😊😊😊

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
21.09.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...