Search This Blog

Thursday, December 13, 2018

கொடியேற்றத் திருவிழா

கொடியேற்றத் திருவிழா

ஆருத்ரா உற்சவ விழா
ஆரம்பம் ஆனது, இன்று
அம்பலவன் கோவிலிலே
கொடியேற்றமும் நடக்குது..

அந்தணர்கள் வேத கோஷம்
அறபுதமாய் கேட்குது சிவ
அடியவர்கள் கோஷத்துடன்
அழகாய் கொடியும் ஏறுது..

தீக்ஷித பெருமகனார்
தீபாராதனை காட்டவே
தூக்கிய திருவடியின்
திருமுகமும் தெரியுது..

பத்து நாள் உற்சவமும்
பாங்குடனே தொடங்குது
பக்தர்களின் ஆரவாரம்
பட்டையை கிளப்புது..

நான்மாட வீதிகளும்
நளினமாக மிளிருது
நடராஜ மூர்த்தியின்
வரவு நோக்கி இருக்குது..

தில்லையம்பதியிலே
திக்கெட்டுமிடமெல்லாம்
திருவாதிரை வைபவமே
தீர்க்கமாகத் தெரியுது..

வெட்டிவேர் வாசத்திலே
வீதியெல்லாம் மணக்குது
வகைவகையாய் கடைகள்
வண்ணமயமாய் ஜொலிக்குது..

சிவகாமசுந்தரியுடன்
சித்சபேச மூர்த்தி
திருவீதி உலா வரும்
நாளும் கிட்ட வருகுது..

மார்கழி மாதத்திலே
மகேஸ்வரனை தரிசிக்க
மண்ணில் எடுத்த பிறப்புக்கு
அர்த்தமும் கிடைக்குது..

இன்று சிதம்பரம் நடராஜர்
கோவிலிலே திருவாதிரை
உற்சவத்தை முன்னிட்டு
கொடியேற்றம் நடக்குது..

திருச்சிற்றம்பலம் !!!

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
14.12.2018

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...