Search This Blog

Wednesday, December 19, 2018

நடராஜா

நடராஜா
7) கைலாய வாகனம்

ஆதியும் அந்தமும்
இல்லாதவன் நீயே
அடிமுடி காணவியலா
அண்ணாமலையும் நீயே

ஜோதிர் லிங்கமாய்
வியாபித்தவன் நீயே
ஜகத்தினை ரக்ஷிக்கும்
ஜடாதரனும் நீயே

முப்புரம் எரித்த
முக்கண்ணன் நீயே
மும் மூர்த்திகளில்
முதல்வனும் நீயே

நந்தனார்க்கு அருளிய
நடராஜன் நீயே
சேந்தனாரை ஆட்கொண்ட
சர்வேஸ்வரன் நீயே

நாயன்மார்களை
ஆட்கொண்டவன் நீயே
நான்மாடக்கூடலின் திரு
விளையாடலும் நீயே

இராவனேஸ்வரனுக்கு
வரமளித்தவன் நீயே
இராமநாத ஸ்வாமியாய்
இரட்சித்தவனும் நீயே

கயிலாய மலையிலே
கொலுவிருப்பவன் நீயே
சனகாதி முனிவர்க்கு
குருநாதனும் நீயே

பஞ்ச சபை கொண்ட
பரமேஸ்வரன் நீயே
பக்தர்களை காத்தருளும்
பரமசிவனும் நீயே

தில்லையிலே திருநடனம்
புரிபவன் நீயே
தில்லைவாழ் அந்தணரில்
ஒருவனும் நீயே

சித்ஸபேசா சிவ சிதம்பரம்.

திருச்சிற்றம்பலம் !!!

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

இன்று தில்லையிலே
கயிலாய வாகனத்தில்
சிவானந்த நாயகி ஸமேத
ஸ்ரீ சோமாஸ்கந்தர் வீதியுலா.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
20.12.2018

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...