Search This Blog

Saturday, December 22, 2018

நடராஜா

நடராஜா
10) ஆருத்ரா தரிசனம்

அமர்க்களமாய்
அபிஷேகம முடிஞ்சுது
ஆயிரங்கால் மண்டபமும்
ஜொலிக்குது.

அம்மையோடு அப்பனுக்கும்
அலங்காரம் இன்று
ஆனந்தத்தில் மக்களெல்லாம்
ஆரவாரம்.

உச்சிவேளை பொழுதிலே
வேட்டுச் சத்தம் கேக்குது
உமையாளோடு ஒன்றாக
ஆடும் நடனம் சிறக்குது.

வெட்டிவேர் வாசத்திலே
வழியெங்கும் மணக்குது
வேதகோஷம் கேட்கையிலே
விழி யாவும் நனையுது.

நடராஜா நடராஜா என
நாமம் எங்கும் அதிருது
சித்ஸபையில் புகும் காட்சி
அற்புதமாய் இருக்குது.

பத்தாம் நாள் பிரம்மோற்சவ
உற்சவமான ஆருத்ரா தரிசன
மஹோத்ஸவம் சிறப்புடனே
நிறைவடைந்தது.

சித்ஸபேசா சிவ சிதம்பரம்.

திருச்சிற்றம்பலம் !!!

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
23.12.2018

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...