Search This Blog

Thursday, December 27, 2018

கழிவறை

கழிவறை

உனக்கு மிகவும்
பிடித்த இடம் எது
வெனக் கேட்டான்
என் நண்பன்.

சற்றும் யோசிக்காது
சட்டென்று கூறினேன்
கழிவறை தான் எனக்கு
மிகவும் பிடிக்குமென்று.

முகத்தை சுளித்து
மூக்கைப் பொத்தி
அஷ்ட கோணலாய்
முறுவளித்தான்.

வையத்தில் உள்ள
ஒவ்வொரு உயிரும்
வயிற்றை நிரப்பவே
உழைப்பைச் செய்யும்.

கண்ணுக்கு விருந்தாகி
வாய்க்கு ருசி கொடுத்து
வயிற்றுள் சென்ற பின்னே
உணவு பயனளிக்கும்.

வைத்தியரும் கூட
மருத்துவமனையில்
முதலில் வினவுவது
வயிற்றின் சுத்தத்தை.

சிறு குடல் பெருங்குடல்
இரைப்பை கணையமென
கொட்டிக் கிடக்குது நம்
வயிற்றுக்குள்ளே.

ஜீரணிக்க வைக்கும்
ஜீவனைக் காக்கும்
செரிக்காத வயிற்றால்
உயிரே மரிக்கும்.

உண்ட உணவு செரித்து
உயிருக்கு ஊட்டமளித்து
வெளியேறாவிடில் சற்று
யோசனை செய்யுங்கள்..

இத்தனை வேலையையும்
செய்வது வயிறெனில்
துணையாயிருப்பது யாரு
யோசிச்சு கொஞ்சம் பாரு.

இனியும் எவறேனும்
உம்மிடம் கேட்டால்
கழிவறையே கனவு அறை 
என தயங்காது கூறுங்கள்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
27.12.2018

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...