Search This Blog

Friday, December 21, 2018

நடராஜா

நடராஜா
9) தேர்த் திருவிழா

ஆடி வருகிறான்
அவன் ஆடி வருகிறான்
அம்பலத்தை விட்டு
நம்மையெல்லாம்
தேடி வருகிறான்.

ஆடி வருகிறான்
நடமாடி வருகிறான்
அம்மையோடு கரம்
கோர்த்து நம்மை
நாடி வருகிறான்.

ஆடி வருகிறான்
நேரில் வருகிறான்
நம் குறைகளைக்
கேட்டறிய தேரில்
ஏறி வருகிறான்.

ஆடி வருகிறான்
கூடி வருகிறான்
நடராஜ ராஜனாக
நான்மாட வீதியிலே
பவனி வருகிறான்.

ஆடி வருகிறான்
காக்க வருகிறான்
ஆண்டிற்கு இருமுறை
தரிசனம் தந்து நமை
ஆட்கொள்ள வருகிறான்.

ஆடி வருகிறான்
அருள வருகிறான்
ஆனியிலே மார்கழியிலும்
திவயமாய் தரிசனம் தந்து
ஆட்கொள்ள வருகிறான்.

சித்ஸபேசா சிவ சிதம்பரம்.

திருச்சிற்றம்பலம் !!!

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

இன்று தில்லையிலே
சிவகாமி சமேதனாக
ஆனந்த நடராஜ மூர்த்தி
தேர் மீதமர்ந்து வீதியுலா.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
22.12.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...