Search This Blog

Saturday, December 29, 2018

மாற வேணும்

மாற வேணும்

உணர்வுகளை
உறவுகளோடு
பகிர்வதை தவிர்த்து
ஊடகத்தை நாடுவதேன்

குடும்பம் என்றால்
கூடலும் உண்டு
அதனுடன் சேர்த்து
ஊடலும் உண்டு.

சின்னஞ் சிறு
சண்டையும் கூட
சந்தைக்கு வருவது
சங்கடம் தருகிறது.

தகவல் தொடர்பு வசதி
பெருகியதன் மூலம்
இருபத்தி நாலு மணியும்
இணைப்பும் கிடைக்கிறது.

நான்கு சுவற்றுக்குள்
இருவரது பிரச்சினை
வலை தல வசதியால்
நாடறியப் போனது.

சந்தோஷத்தை மெல்ல
சாக்கடையில் தள்ளும்
சமூக கட்டமைப்பிற்கு
ஆபத்தை விளைவிக்கும்.

அரட்டையில் ஆரம்பித்து
ஆவலுடன் சம்பாஷித்து
அசிங்கமாய் நடந்து வரும்
அனைத்தும் விட்டிடுவோம்.

மாறுவோம்
மாற்றுவோம்
மனிதர்களாய்
மலருவோம்.

நினைத்தேன் எழுதுகிறேன்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
29.12.2018

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...