Search This Blog

Sunday, December 30, 2018

புத்தாண்டு

புத்தாண்டு

ஆண்டு முடியுது
ஆண்டு துவங்குது
ஆறிரு மாதங்கள்
அவசரமாய் கழிந்தது

என்ன செய்தோமென
யோசித்துப் பார்த்தால்
ஏதும் கிழிக்கலைன்னு
உள் மனசு கூறுது.

ஆண்டுகள் நகரவே
ஆயுசும் ஏறுது ஆனால்
அனைத்தையும் அடைய
ஆசையும் போடுது.

இல்லாத ஒன்றுக்கு இந்த
இதயம் ஏங்குது எல்லாம்
இருந்தாலும் ஏனோ ஏக்கம்
கொள்ள வைக்குது.

தத்துவம் பொழிந்து நான்
தகராறு செய்யவில்லை
சத்தியத்தின் பாதையினை
சொல்லாமல் போவதில்லை.

மாயை என்னும் பிடியில்
மனிதன் சிக்கியுள்ளான்
மரணம் என்னும் நொடியை
மறந்து போயும் உள்ளான்.

நிதானம் தவறாது நல்லதாய்
ராத்திரி பொழுது கழியட்டும்
நிம்மதி அகலாது இனிதாய்
ஆண்டு முழுதும் அமையட்டும்.

விடிய விடிய கண் விழித்து
வீதியில் கேளிக்கை செய்து
வான வேடிக்கைகள் போட்டு
உற்சாகம் கொள்ள வேணாம்.

வருடத்தின் ஆரம்ப நாளில்
உல்லாச கூச்சல்கள் தவிர்த்து
அமைதியான அறவழி முறையில்
ஆலயத்தில் வழிபாடு செய்வோம்.

சங்கடப்பட்டு செய்யும் செயலும்
சந்தேகத்திற்கு இடமான செயலும்
சத்தியமாய் தவிர்ப்போம் என்று
சபதம் ஒன்றை இனி எடுப்போம்.

ஆண்டு முழுவதும்
ஆனந்தமாய் அமைய
ஆண்டவன் அருள்
அமைய வேண்டுகிறேன்.

புத்தாண்டு தின நல்வாழ்த்துக்களுடன்

🌷🌷🌻🌺🌺🌼🌸🌹

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
31.12.2018

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...