Search This Blog

Tuesday, December 18, 2018

திருமாலே

திருமாலே

வையத்தை
வாழ்விக்கும்
வைகுந்த வாசா

வானரத்தின்
துணை ஏற்ற
வைதேகி நேசா

தரணியை
உய்விக்க
தசாவதாரம்
எடுத்தாய்

அனைத்திலும்
அற்புதங்கள்
பலவாராய்
செய்தாய்

இராமனாக
கண்ணனாக
மனிதனாய்
வாழ்ந்தாய்

பாரதத்தின்
வரலாற்றில்
காவியமாய்
கலந்தாய்

தெய்வம் மனுஷ்ய
ரூபேன என்னும்
தத்துவம் உரைத்து
சென்றாய்

பார்த்தனுக்கருளிய
பகவத் கீதை இந்த
பாருக்கு நீ அளித்த
பொக்கிஷமாகும்

பிறப்பில்லாத
பெருமாளே(னே)
தசாவதாரம் எடுத்த
திருமாலே

கல்கி அவதாரம்
எடுப்பது எப்போது
கயவர்களிடமிருந்து
காப்பது எப்போது ?

ஓம் நமோ நாராயணா

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

"வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல்"

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
18.12.2018

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...